Published:Updated:

விகடன் TV: “‘திருமணம்’ நின்னதுக்கு நான் காரணமில்லை!”

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV

இருந்தாலும் கல்யாணத்துக்காக நல்ல நாளைப் பார்த்திட்டிருக்கோம். உறுதியானதும் முறைப்படி அறிவிச்சு ஊரறியக் கல்யாணம் பண்ணிக்குவோம்.

விகடன் TV: “‘திருமணம்’ நின்னதுக்கு நான் காரணமில்லை!”

இருந்தாலும் கல்யாணத்துக்காக நல்ல நாளைப் பார்த்திட்டிருக்கோம். உறுதியானதும் முறைப்படி அறிவிச்சு ஊரறியக் கல்யாணம் பண்ணிக்குவோம்.

Published:Updated:
விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV
சீரியல் ரசிகர் களுக்கு மட்டுமல்ல, சின்னத்திரை செலிபிரிட்டிகளிலும் கூட பலருக்கும் பிடித்த ஜோடி, சித்து - ஸ்ரேயா ஜோடி. தமிழ் சீரியல் வரலாற்றில் முதன்முதலாக லிப் லாக் காட்சியை அறிமுகப்படுத்திய ‘திருமணம்’ சீரியலில் சேர்ந்து நடித்தார்களே, அந்த ஜோடி.

‘திருமணம்’ தொடரில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’-க்குக் கமிட் ஆனார் சித்து. தற்போது ‘திருமணம்’ தொடர் முடிவடைந்து விட்ட சூழலில், ‘லிவ் இன் ரிலேஷனில் இருக்கிறது இந்த ஜோடி’ என்றும், ‘இல்லை, ரகசியமாக இவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்’ என்றும் டிவி ஏரியாவில் பரவலாகக் கிசுகிசுக்கப்பட்டுவருகிறது. இந்தப் பின்னணியில் சித்துவிடம் பேசினேன்...

விகடன் TV: “‘திருமணம்’ நின்னதுக்கு நான் காரணமில்லை!”

``நீங்க ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு வந்துட்டதாலேயே ‘திருமணம்’ தொடரை முடிச்சுட்டதாச் சொல்றாங்களே?’’

‘‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு என்னைக் கேட்டதுமே, ‘திருமணம்’ யூனிட்ல அதுபத்திச் சொல்லிட்டேன். மாசத்துல பாதி நாள் ‘திருமண’த்துக்கும் மீதி நாள் ‘ராஜா ராணி 2’-க்கும் பிரிச்சு தேதி தந்துடறேன்னு சொன்னதை ரெண்டு சேனல்லயுமே ஏத்துக்கிட்டாங்க. அதேபோல ஷூட்டிங் எந்தப் பிரச்னையுமில்லாமத்தான் போயிட்டிருந்தது. ஆனா, பிறகு திடீர்னு ‘திருமணம்’ சீரியல் முடிவுக்கு வந்துடுச்சு. சேனல் மேலிடத்துல, அதாவது மும்பையிலிருந்து திடீர்னு மெயில் அனுப்பி சீரியலை நிறுத்தச் சொன்னதா என் காதுக்கு ஒரு தகவல் வந்தது. அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலை. ஆனா அந்த சீரியல் முடிவடைஞ்சதுக்கு நான் காரணமில்லைங்கிறதை மட்டும் உறுதியாச் சொல்வேன். ஏன்னா, அது முடிஞ்சதுல எனக்கும் ஸ்ரேயாவுக்குமே வருத்தம்தான். அந்த சீரியலை நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன். எங்கோ திருவண்ணாமலை பக்கமிருந்தவன் இன்னைக்கு முன்னணிச் சேனல்ல அதுவும் பிரைம் டைம் சீரியல்ல ஹீரோவா இருக்கேன்னா, காரணம் அந்த சீரியல்தான். அதுவும் போக, எனக்கு ஸ்ரேயாவை அடையாளம் காட்டியதற்காகவும் ‘திருமணம்’ சீரியலுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.’’

விகடன் TV: “‘திருமணம்’ நின்னதுக்கு நான் காரணமில்லை!”

`` ‘ராஜா ராணி 2’ அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘விஜய் டிவி எனக்குப் புதுசு இல்லை. முன்னாடியே விஜய் டிவி ரியாலிட்டி ஷோவுல கலந்துகிட்ட அனுபவம் இருக்கு. டைரக்டர் ப்ளஸ் யூனிட்லயுமே எனக்கு ஓரளவுக்குத் தெரிஞ்சவங்கதான். ஹீரோயினா நடிக்கிற ஆல்யாவின் கணவர் சஞ்சீவும் நானும் நண்பர்கள்தான். அதனால ஆல்யாவும் நல்ல கோ ஆக்டரா அமைஞ்சிருக்காங்க. ஷூட்டிங் நல்லபடியா போயிட்டிருக்கு.’’

சித்து - ஸ்ரேயா
சித்து - ஸ்ரேயா

``ஸ்ரேயா எப்படி இருக்காங்க? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டதாகப் பேசப்படுகிறதே?’’

“ஸ்ரேயா நல்லா இருக்காங்க. ‘திருமணம்’ சீரியல் முடிஞ்சதால சின்ன பிரேக் எடுத்துட்டிருக்காங்க. அவங்களுக்குமே அடுத்தடுத்த‌ வாய்ப்புகள் வரத்தான் செய்யுது. ஆனாலும் நிதானமா யோசிச்சுப் பண்ணலாம்னு இருக்காங்க.

விகடன் TV: “‘திருமணம்’ நின்னதுக்கு நான் காரணமில்லை!”

நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டோம்கிற பேச்சு அங்க இங்க சுத்தி கடைசியில எங்க காதுகளுக்குமே எட்டுச்சு. அதைக் கேட்டதும் சிரிப்புதான் வந்தது. நாங்க காதலிக்கிறது நிஜம்தான். இதை மறைக்கணும்கிற அவசியம் எனக்கோ, ஸ்ரேயாவுக்கோ எப்பவுமே இருந்ததில்லை. எங்க ரெண்டு பேர் மொபைல்லயும் டி.பியா, நாங்க சேர்ந்து இருக்கிற போட்டோஸ்தான் இருக்கும். அதையெல்லாம் பார்த்துட்டு சிலர் அவங்களாகவே எதையாவது முடிவு பண்ணிக்கிடுறாங்க,

நாங்க லிவ் இன் ரிலேஷன்ல இருக்கோம்கிறதுலயும் உண்மையில்லை. எங்க காதலை ரெண்டு பேர் வீட்டுலயுமே ஏத்துக்கிட்டாங்க. ‘திருமணம்’ தொடர் முடிவடைஞ்சதும் நிஜத்துல திருமணம் செய்துக்கறது பத்தி முடிவெடுக்கலாம்னு நினைச்சிட்டிருந்தோம். அதுக்குள் எனக்கு ‘ராஜா ராணி 2 ‘வாய்ப்பு வந்திடுச்சு. இந்த பீல்டைப் பொறுத்தவரைக்கும் வாய்ப்பு வர்றபோது விட்டுட்டா, அடுத்து எப்ப வரும்னு தெரியாது. அதனால நான் உடனே அதுல கமிட் ஆகிட்டேன்.

இருந்தாலும் கல்யாணத்துக்காக நல்ல நாளைப் பார்த்திட்டிருக்கோம். உறுதியானதும் முறைப்படி அறிவிச்சு ஊரறியக் கல்யாணம் பண்ணிக்குவோம்.”