Published:Updated:

விகடன் TV: “கல்யாணத்தை மறைச்துக்கு ஸாரி!”

கணவருடன் ஷாமிலி
பிரீமியம் ஸ்டோரி
கணவருடன் ஷாமிலி

அதுக்குப் பிறகுதான் கல்யாணத்தை மறைச்சது தப்புன்னு தோணுச்சு.

விகடன் TV: “கல்யாணத்தை மறைச்துக்கு ஸாரி!”

அதுக்குப் பிறகுதான் கல்யாணத்தை மறைச்சது தப்புன்னு தோணுச்சு.

Published:Updated:
கணவருடன் ஷாமிலி
பிரீமியம் ஸ்டோரி
கணவருடன் ஷாமிலி
டந்த 17.02.21 தேதியிட்ட `ஆனந்த விகடன் காதல் ஸ்பெஷல்’ இதழில், ராஜ்குமார் என்பவரைக் காதலிப்பதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார், ‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார்.

அந்தப் பேட்டி வெளியான அடுத்த சில தினங்களில், தன்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி அக்கவுன்ட் இருப்பதாகவும், அதன்மூலம் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் என்றும் காவல்துறையில் புகார் அளித்தார். இதற்கிடையில் ஷாமிலிக்குத் திருமணமாகிவிட்டதாகவும் தகவல்கள் வர, அவரிடம் பேசினேன்.

‘`முதல்ல நான் விகடன்கிட்ட `ஸாரி’ கேட்டுக்கறேன். நான் பேசின அந்தச் சமயத்துல என்னுடைய கல்யாணம் முடிஞ்சிருந்தது. அந்தத் தகவலை மறைச்சதுக்காகத்தான் ஸாரி. கடந்த ஆண்டு ஜூன் மாசமே எங்க கல்யாணம் முடிஞ்சிடுச்சு. ஊரே லாக் டௌன் துயரத்துல இருந்த நேரமில்லையா, அதனால. வெளியில சொல்லணுமான்னு வீட்டுல யோசிச்சாங்க. லாக்டௌன் சட்டுனு முடிஞ்சிடும், ஒரு வரவேற்பை வச்சிடலாம்னு நினைச்சா, அதுபாட்டுக்குப் போயிட்டே இருந்தது.

விகடன் TV: “கல்யாணத்தை மறைச்துக்கு ஸாரி!”

இப்படி இருக்கிறப்ப நான் காதல் தினத்தையொட்டி ஆனந்த விகடன்ல பேசியிருந்ததைப் பார்த்துட்டு, ‘இந்தப் பொண்ணுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையா... அப்படின்னா இது யாரு’ன்னு கேட்டு, நானும் ராஜ்குமாரும் எடுத்திருந்த போட்டோ ஒண்ணு சோஷியல் மீடியாவுல உலா வந்தது. மேரேஜ் பத்தி ரொம்பவே ரகசியம் காத்தும், நாங்க திருமணக் கோலத்துல இருந்த அந்த ஒரேயொரு போட்டோ எப்படி வெளியில லீக் ஆச்சுன்னே எனக்குத் தெரியலை.

கணவருடன் ஷாமிலி
கணவருடன் ஷாமிலி

தொடர்ந்து அந்த போட்டோ பத்தித் தப்புத் தப்பா கமெண்டுகள் வரத் தொடங்குச்சு. அதாவது, வேறு யாருடனோ நான் இருக்கிறேன்னு பேசினாங்க. ஒருபக்கம் சிரிப்பா வந்தாலும், அப்படியே விடறது நல்லதில்லைன்னுதான் புகார் கொடுக்க, அந்த அக்கவுன்ட்டை.நீக்கினாங்க.

விகடன் TV: “கல்யாணத்தை மறைச்துக்கு ஸாரி!”

அதுக்குப் பிறகுதான் கல்யாணத்தை மறைச்சது தப்புன்னு தோணுச்சு. அதுக்குத் தண்டனைதான் இந்த ஃபேக் அக்கவுன்ட் பிரச்னை. கல்யாணம் ஆன புதுசுல புருஷனையே இன்னொருத்தர்னு சொல்ல வேண்டியதாகிடுச்சு’’ என்கிறார்.

முன்னதாக திருச்செந்தூர்க் கோயிலில் வைத்துத் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார்களாம் ஷாமிலியின் வீட்டில். லாக்டௌன் காரணமாக, கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி வீட்டில் வைத்துத் திருமணம் நடந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism