Published:Updated:

விகடன் TV: ‘தல, தளபதி படங்களை மிஸ் பண்ணிட்டேன்!’

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

குடும்ப அரசியல் மாதிரி குடும்ப சீரியலான்னு கேட்டுடுவீங்க போல.

றிமுகமான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து தொடர்ந்து நெகட்டிவ் கேரக்டர்களிலேயே நடித்துவருகிற ஸ்டெஃபியுடன் சின்னதாக ஒரு சாட்டிங்...

``வில்லி ரோல்தான் ‘சேஃப் ஜோன்’னு முடிவு பண்ணிட்டீங்களா?’’

‘‘திருநெல்வேலி மாவட்டத்துல உவரிக் கடற்கரைப் பக்கமிருந்து டிவிக்குப் போறேன்னு கிளம்பி வந்தப்பவே வில்லத்தனம் நமக்குள்ள வந்திடுச்சு. வீட்டுல அனுமதி தராட்டா என்ன செய்யறது, சொல்லாமக் கொள்ளாமத்தானே பஸ் ஏறணும்? அப்படி வண்டி ஏறித்தான் சென்னைக்கு வந்தேன். (இப்ப சண்டையெல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆகிடுச்சாம்!) முதல் சீரியல் மட்டுமில்லீங்க, இன்னைக்கும் என்னை நேர்ல பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுக்கிறவங்க ‘நிச்சயம் உங்களுக்கு நெகட்டிவ் ரோல்தான்’னு சொல்றாங்க. என் கண் நெகட்டிவ் கேரக்டருக்கான கண்ணாம். இது என்னடா, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாங்கிற கதை மாதிரி இருக்கே’ன்னுதான் எனக்கும் தோணுது. ஆனா எனக்கு ஹ்யூமர் கேரக்டரும் நல்லா வரும். ஜி.வி.பி. சார் படத்துல அப்படியொரு ரோல் பண்ணியிருக்கேன். அந்தப் படம் ரிலீசானா அதன் பிறகு என்னைப் பத்தின அபிப்ராயம் சீரியல்காரங்களுக்கு மாறலாம்னு நினைக்கிறேன்.’’

விகடன் TV: ‘தல, தளபதி படங்களை மிஸ் பண்ணிட்டேன்!’

``நீங்க ‘தல’ ரசிகைன்னும் ‘வலிமை’ படத்துல நடிக்கறதாகவும் சொன்னாங்களே?’’

‘‘நான் ‘தல’ ரசிகைங்கிறது நிஜம். ‘வலிமை’யில சான்ஸ் கிடைச்சதும் நிஜம். ஆனா பாழாப்போன கொரோனாவால அந்த வாய்ப்பைத் தவற விட்டுட்டேன். ஊருக்குப் போயிட்டு வர்றதுக்குள் சான்ஸ் கை மாறிடுச்சு. அதேபோல ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு ரோல் இருந்தது. அதுவும் நடிக்க முடியலை. ஒரே நேரத்துல தல, தளபதி படங்களை மிஸ் பண்ணினதை நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது.’’

விகடன் TV: ‘தல, தளபதி படங்களை மிஸ் பண்ணிட்டேன்!’

``நீங்க நடிக்கிற சீரியல்ல உங்க தம்பி உதவி இயக்குநராமே?’’

‘‘குடும்ப அரசியல் மாதிரி குடும்ப சீரியலான்னு கேட்டுடுவீங்க போல. ‘தேன்மொழி பி.ஏ’ சீரியல் மட்டுமல்ல, ‘காற்றின் மொழி’ தொடரின் யூனிட்டிலும் என் தம்பி ஒர்க் பண்ணிட்டிருக்கான். என்னைப் பார்த்து அவனும் டிவிக்குப் போறேன்னு கிளம்பி வந்துட்டான். அதுல என்ன தப்பு?