Published:Updated:

“அந்தக் கேள்வியால்தான் ‘பிக்பாஸில்’ கலந்துக்கிட்டேன்!”

ஆரி அர்ஜுனன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரி அர்ஜுனன்

எல்லா ஹவுஸ்மேட்ஸும் என்னை ஆரத்தழுவி வாழ்த்து சொல்லிட்டுதான் போனாங்க.

‘‘பிக்பாஸ் வீட்டுல மட்டுமே ‘அன்பு’ பிரச்னையா இருந்தது. ஆனா, வெளியே அன்புதான் எப்பவுமே ஜெயிக்கும்’’ என்று சொல்லிச் சிரிக்கிறார் ஆரி அர்ஜுனன். இந்த சீசன் ‘பிக்பாஸ்’ வின்னர்.

ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்

கேட்டுத்தானே ஆகணும், ‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படியிருந்தது?

‘‘இதை வெறும் நிகழ்ச்சியா நான் பார்க்கல. வீட்டுக்குள்ள இருந்த நூறு நாள்கள்ல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். நான் நம்புற நிறைய விஷயங்களை இன்னும் ஆணித்தரமா என் மண்டையில கொட்டி ‘நம்புடா... சரியாதான் நினைச்சிருக்கே’ன்னு பிக்பாஸ் புரிய வெச்சிருச்சு. கமல் சார், ‘இந்த வீடு சமூகத்தின் பிரதிபலிப்பு’ன்னு சொல்லிட்டே இருப்பார். அப்போ அது புரியல. ஏன்னா, ‘15 பேர் உள்ளே வந்து, சமைச்சு சாப்பிட்டு, வீட்டைச் சுத்தப்படுத்தி, டாஸ்க் பண்ற வீடு எப்படி சமூகத்தின் பிரதிபலிப்பா இருக்கும்’னு கேள்வி இருந்தது. இந்தக் கேள்விக்கான பதிலை ‘பிக்பாஸ்’ வீட்ல தெரிஞ்சிக்கிட்டேன். ‘இந்த வீட்டுலயே நீங்க பொறுப்பா இல்லைனா, வெளியே எந்த அளவுக்குப் பொறுப்பா இருப்பீங்க’ என்ற பெரிய கேள்வியை ‘பிக்பாஸ்’ நமக்கு முன்னாடி வைக்குது. இந்தக் கேள்வியை என்னை நானே கேட்டுக்கிட்டேன். இதை நோக்கிதான் என் விளையாட்டும் இருந்தது.’’

ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்

`` ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி யார்கிட்ட இதைப் பற்றி டிஸ்கஷன் பண்ணுனீங்க?’’

‘‘இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களின்போதும் எனக்கு அழைப்பு வந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிஞ்ச சில மாதங்களில் முதல் சீசனைத் தொடங்குனாங்க. அப்போ அழைப்பு வந்தப்போ, இந்த நிகழ்ச்சி பற்றி என்னன்னு தெரியாம இருந்தது. அதனால் கலந்துக்கலை. அதுக்குப் பிறகு தொடர்ந்தும் அழைப்பு வந்தப்போ சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால போக முடியல. இப்போ, நாலாவது சீசன்ல அழைப்பு வந்தப்போ எனக்குள்ள சில குழப்பங்களும் தயக்கங்களும் இருந்தது. இப்படியிருந்த சூழல்ல இயக்குநர் தாமிரா சார் ‘என்ன முடிவு பண்றீங்க’ன்னு கேட்டார். என் குழப்பத்தைச் சொன்னேன். அப்போ, என்கிட்ட ஒரு கேள்வி வெச்சார். அந்தக் கேள்விதான் என்னை இந்த நிகழ்ச்சிக்குள்ள போக வெச்சதுன்னு சொல்லலாம். ‘ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன். நீ நீயா இருக்க. நீ நல்லவனா, கெட்டவனான்னு உனக்குத் தெரியும்ல. உன்னை யாரும் மாத்திட முடியாதுல்ல?’ன்னு கேட்டார். அதுதான் என்னை பிக்பாஸில் கலந்துக்கவெச்சது. தவிர, சினேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம்கிட்டயும் பேசினேன். என் வாழ்க்கையில சரியான முடிவா பிக்பாஸில் கலந்துகிட்டதைப் பார்க்குறேன். அதே மாதிரியே, நான் ஜெயிக்கணும்னு விளையாடினேன். நான் மட்டுமே ஜெயிக்கணும்னு எங்கேயும் விளையாடல. இதை தார்மிக மந்திரமா வெச்சுக்கிட்டுதான் விளையாடினேன்.’’

ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்

`` ‘ஆரியோட வெற்றியை சனம் மற்றும் அனிதாவைத் தாண்டி பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் யாரும் கொண்டாடல’ன்னு சொல்லப்படற விமர்சனத்தை எப்படிப் பார்க்குறீங்க?’’

‘‘எல்லா ஹவுஸ்மேட்ஸும் என்னை ஆரத்தழுவி வாழ்த்து சொல்லிட்டுதான் போனாங்க. ஆரியோட பலம் என்னங்குறதை எனக்குக் காட்டியது இந்தப் பதினாறு பேரும்தான். இவங்க இல்லன்னா நான் இல்லன்னு மேடையிலயும் சொல்லியிருந்தேன். என்னோட வெற்றில இவங்களுக்கும் பங்கு இருக்கு. ஹவுஸ் மேட்ஸ் எல்லாருமே பெரும் திறமைசாலிகள். இவங்க எல்லார் மேலயும் பெரிய மரியாதை எனக்கு உண்டு. நீங்க சொல்ற விமர்சனத்தில் உண்மை இருக்குறதா எனக்குத் தோணல.’’

ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்

``மரபு விதைகளை முன்னெடுத்து கின்னஸ் சாதனையில ஈடுபட்ட ஆரிக்கு, ‘பிக் பாஸ்’ வீட்டின் செடியைப் பாரமரிக்க முடியலையாங்குற கேள்வியை எப்படிப் பார்க்குறீங்க?’’

“ஒரு விஷயத்தை வாழ்க்கையில ஆர்வத்தோட ஃபாலோ பண்றோம். ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள்ள போட்டியாளருக்குச் செடியைக் கொடுத்து அனுப்புனாங்க. பத்து நாள் வரைக்கும் எல்லாருமே ஆர்வமா பார்த்துக்கிட்டாங்க. ரம்யா மாடி தோட்டம் அனுபவம் இருந்ததனால பொறுப்பா நல்லபடியா பார்த்துக்கிட்டாங்க. செடிக்கு எவ்வளவு தண்ணீர் விடணும்னு இவங்களுக்குத் தெரிஞ்சிருந்தது. மத்தவங்க யாருக்கும் எந்த அளவுக்குத் தண்ணீர் விடணும்னு தெரியல. இந்த வீட்டுல இருந்த வரைக்கும் காலையில சீக்கிரம் எழுவது நானும் ரம்யாவும்தான். இதனால, ரம்யாகிட்ட, ‘நீங்களே எல்லாச் செடிக்கும் தண்ணீர் ஊத்துங்க. என் செடி உட்பட’ன்னு நான்தான் சொன்னேன். கமல் சார் என்கிட்ட கேட்டப்போ ரம்யாதான் எல்லாச் செடியையும் பார்த்துக்குறாங்கன்னு நானேதான் சொன்னேன். ஆனா, என்னோட ரெண்டாவது கேப்டன்சியில் சுழற்சி முறையில ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை தண்ணீர் விடணும்னு சொன்னேன்.”

ஆரி அர்ஜுனன்
ஆரி அர்ஜுனன்

``பாலாவுடனான நட்பு தொடருமா?’’

“அவர்கிட்ட மட்டுமல்ல, உள்ளே இருந்த அனைத்துப் போட்டியாளர்களுடனும் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் எனக்கு இல்லை. பாலாகிட்ட கத்துக்கிட்ட ஒரு விஷயம்னா, மரியாதையை யார்கிட்டயும் கெஞ்சி வாங்கக் கூடாது, சரியா நடந்துக்கிட்டா மரியாதை தேடி வரணும்னு கத்துக்கிட்டேன். அதனாலதான் பாலா என்ன பேசினாலும் பெரிசா உணர்ச்சிவசப்படாம இருந்தேன். அதே மாதிரி ஆணும் பெண்ணும் சரிசமம் எனும் விஷயத்தை பிக்பாஸ் ஆணித்தரமாச் சொல்லிக் கொடுத்திருக்கு. அழுகை என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது இல்ல. ஆண் அழுதால் பலவீனம்னு நினைக்குறதும் பொய். என் மனைவிக்காக நான் அழுததைப் பெருமையா நினைச்சேன்.’’