Published:Updated:

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV

இளவரசி’ உள்ளிட்ட பகல் நேர சீரியல்களில் நடித்த ஜூலியிடம் பேசினேன்.

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

இளவரசி’ உள்ளிட்ட பகல் நேர சீரியல்களில் நடித்த ஜூலியிடம் பேசினேன்.

Published:Updated:
விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
விகடன் TV
‘`சினிமா நட்சத்திரங்களைவிடவும் இன்னைக்கு பிரபலம் நீங்கதானாமே?’’ என, சீரியல் நடிகை ஒருவரிடம் கேட்டேன்.

‘`ஓ, நீங்க அவங்களைச் சொல்றீங்களா, நாங்க அவங்க இல்ல’’ என்றார் அவர்.

``புரியலையே’’ என்றதும், அவர் சொன்ன பதில், ``நான் பகல் நேர சீரியல் நடிகை.’’

சீரியல் ஆர்ட்டிஸ்டுகளிலேயே பகல் நேரங்களில் நடிக்கிற நடிகர் நடிகைகள், பிரைம் டைம் எனப்படும் மாலை 6 முதல் 10 மணி வரையில் ஒளிபரப்பாகிற சீரியல்களில் நடிக்கிற ஆர்ட்டிஸ்டுகள் என இரண்டு குரூப்பாம் (தனித்தனி சங்கம் வைக்காததுதான் பாக்கி).

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

தொடர்ந்து, பகல் நேரங்களில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் நடித்துவரும் சிலரிடம் பேசினேன்.

‘`பொதுவாகவே டிவி நட்சத்திரங்களிடையே பிரைம் டைம் சீரியல்களில் நடிக்கத்தான் ஆர்வம் இருக்கும். வீட்டுல குடும்பமே உட்கார்ந்து பார்க்கிற நேரமில்லையா? ரீச் அதிகமா இருக்கும். இது ஒண்ணுதான் காரணம். ஆனா இதோட நிறுத்திட முடியாது.

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

அந்த ரீச்னால மக்கள் மத்தியில பிரபலமாகறதால கடைத்திறப்பு மாதிரியான நிகழ்ச்சிகள் நிறைய கிடைக்குது. ஏன், சேனல்லயே சீரியல் ஆர்ட்டிஸ்டுகளை ரியலாட்டி ஷோக்கள்ல கலந்துக்கக் கூப்பிடறப்பவே பிரைம் டைம் சீரியல் ஆட்களுக்குத்தானே முக்கியத்துவம் தர்றாங்க? இதெல்லாம் இல்லைன்னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்’ என்கிறார் ‘விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகிற ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ தொடரில் நடித்துவரும் சஹானா.

‘இளவரசி’ உள்ளிட்ட பகல் நேர சீரியல்களில் நடித்த ஜூலியிடம் பேசினேன்.

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

``ஒருவர் ஆரம்பத்துல பகல் நேர சீரியல்ல கமிட் ஆகிட்டா, அவங்களுக்கு பிரைம் டைம் சீரியல் அவ்வளவு சீக்கிரத்துல கிடைச்சிடாது. ஏன்னா, பிரைம் டைம் சீரியலுக்கான ஆர்ட்டிஸ்டுகளையே அந்த சர்க்கிள்ல இருந்துதான் தேடறாங்க. பகல் நேரத்துல ஹிட் ஆகி அந்த சீரியல் பிரைம் டைமுக்கு மாறுவதுங்கிறது எப்பவாவதுதான் நடக்கும்.

பகல் ஸ்லாட் சீரியல்களை வீட்டுல இருக்கிற பெண்கள் மட்டுமே பார்க்கிறாங்கன்னு சொல்றது ஒரு காரணம்; இன்னொருபுறம், மதிய நேரம்தான் வீட்டுல இருக்கிற பெண்களுக்கும் கொஞ்சமா தூங்கக் கிடைக்கிற நேரம். அதனால, பார்க்கறவங்க குறைவு. வேற வழியில்ல, இது இப்படித்தான்னு நினைச்சு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

காலையில பதினோரு மணிக்குத் தொடங்குகிற சீரியல்களின் நிலைமை மத்தியான ஸ்லாட்டுகளை விடவும் மோசம். மத்தியானமாவது சமையல் மாதிரியான வேலைகளெல்லாம் முடிஞ்சிருக்கும். ஆனா 11 மணிக்குத்தான் எல்லா வீடுகள்லயும் வேலை தொடங்கும். நானெல்லாம் வீட்டுல இருந்தா, டிவியை ஆன் பண்ணவே 12 மணிக்கு மேலாகிடும். வேறென்னங்க செய்யறது, இப்படியேதான் போயிட்டிருக்கு வாழ்க்கை’’ என்கிறார் இவர்.

‘`உண்மைதாங்க, பகல் நேர சீரியல்களைவிட அதிக ரீச் பிரைம் டைம் சீரியல்கள்ங்கிறதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும். நான் நடிச்ச படம் ஒண்ணு தெலுங்குல வெள்ளிவிழா கண்டது. அந்தப் படத்தைவிட அதிகமான ரீச்சை எனக்குத் தந்திருக்கு இப்ப நான் பிரைம் டைமில் நடிச்சிட்டு வர்ற ‘நீ தானே என் பொன்வசந்தம்’ சீரியல்’’ என்ற நடிகர் ஜெய் ஆகாஷ், இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்,

‘சம்பளம்கூட பகல் நேர சீரியல்களில் நடிப்பவர்களுக்குக் குறைவு’ என்பதுதான் அது.

விகடன் TV: பகல் சீரியல் என்றால் பாரபட்சமா?

கல் ஸ்லாட்டில் `பொன்மகள் வந்தாள்’ சீரியலைத் தயாரித்த, சீரியல் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அன்வரிடம் இந்தச் சம்பள விவகாரம் குறித்துக் கேட்டேன். ``ஆடியன்ஸ் குறைவுங்கிறப்ப வருமானமும் கம்மியா இருக்கும். ஏன்னா விளம்பரதாரர்கள் பிரைம் டைம்லதான் தங்கள் பொருளை விளம்பரப்படுத்த விரும்பறாங்க. அதனால பகல் ஸ்லாட் சீரியல்களின் பட்ஜெட் குறையறது யதார்த்தம்தானே?

அதனால அந்தப் பட்ஜெட்டுக்குள்ளதான் சீரியலை எடுத்தாகணும். அதேநேரம், பிரைம் டைம் சீரியல்ல நடிச்சிட்டிருக்கிற ஒரு ஆர்ட்டிஸ்டை பகல் நேரத்துக்கு கமிட் பண்ணினா அவர் தன்னுடைய சம்பளத்தை நிச்சயம் குறைச்சுக்க மாட்டார். அதேபோல பகல் டைம் சீரியல்ங்கிறதுக்காக தரத்தையும் குறைக்க முடியாது. அதனால ஆர்ட்டிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்குமே பகல் ஸ்லாட் சீரியல்கள் பிரைம் டைம் சீரியல் அளவுக்கு லாபம் தராது.

என்னைக் கேட்டா, பகல் நேர சீரியல், பிரைம் டைம் சீரியல்னு வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை, கதை நல்லதா இருந்து விறுவிறுப்பாக் கொண்டு போனா, பகல் நேர சீரியலும் பிரைம் டைமுக்குத் தானாப் போயிடும்’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism