Published:Updated:

விகடன் TV: ‘உடல்கேலி’ தவிர்க்கிறேன்!

தங்கதுரை
பிரீமியம் ஸ்டோரி
தங்கதுரை

உடல்கேலி காமெடியைத் தவிர்த்துட்டு வரேன். ஆரம்பத்துல ராமரும் நானும் மாத்தி மாத்தி உடல்கேலி பண்ணிக்குவோம்.

விகடன் TV: ‘உடல்கேலி’ தவிர்க்கிறேன்!

உடல்கேலி காமெடியைத் தவிர்த்துட்டு வரேன். ஆரம்பத்துல ராமரும் நானும் மாத்தி மாத்தி உடல்கேலி பண்ணிக்குவோம்.

Published:Updated:
தங்கதுரை
பிரீமியம் ஸ்டோரி
தங்கதுரை
“ ‘குக்கு வித் கோமாளி’ முடிஞ்சதுதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு. மத்தபடி வாழ்க்கை நல்லா போயிட்டிருக்கு’’ என்று ஆரம்பிக்கிறார் தங்கதுரை.

`` ‘குக்கு வித் கோமாளி’ பயணம் சொல்லுங்க?’’

‘‘ ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 2-ல பாதிலதான் வந்தேன். ஆனா, நிறைய ரசிகர்கள் இது மூலமா கிடைச்சிட்டாங்க. நடுவுல ஒரு வாரம் வராமப்போனால்கூட ‘ஏன் ஷோவுக்கு வரலன்னு’ போன் பண்ணிக் கேட்குறாங்க. என் மனைவியும் பார்த்துட்டு கமென்ட் சொல்லுவாங்க. சொல்லப் போனா அஸ்வின்கூட கோமாளியா சேர்ந்தப்போ மாவுல அதிகமா தண்ணியை விட்டுட்டேன். உடனே, என் மனைவி ‘ஏங்க, இப்படிப் பண்ணுனீங்க’ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ‘கண்டிப்பா சீசன் 3 வரும். நானும் கண்டிப்பா கோமாளியா எல்லாரையும் என்டர்டெயின்மென்ட் பண்ண ரெடியா இருக்கேன்.’’

தங்கதுரை
தங்கதுரை

``ஷோவுடைய ஃபைனலுக்கு சிம்பு வந்தது எப்படி இருந்தது?’’

‘‘சிம்பு வருவார்னு யாருமே எதிர்பார்க்கல. ரொம்ப ஜாலியா எல்லார்கிட்டயும் பேசினார். நானொரு ஜோக் சொல்லப் போனதுக்கு அலறி அடிச்சிட்டு ஓடிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஜூம் கால்ல வந்தார். எங்களுடைய ‘குக்கு வித் கோமாளி’ பார்க்குறேன்னு சொல்லி ஜாலியா பேசினார். அப்புறம் நான் நடிச்சிருக்குற ‘சார்பட்டா’ படத்தோட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாரும் நேரா விசிட் பண்ணினார். என்னோட நடிப்பு படத்துல நல்லாருக்குன்னு சொன்னது ஹேப்பியா இருந்தது.’’

`` ‘சார்பட்டா’ படத்தோட என்ட்ரி சொல்லுங்க?’’

‘‘படத்துக்காக ஆடிஷன் நடந்தப்போ கலந்துகிட்டேன். ரஞ்சித் சார் நல்ல ரோல் கொடுத்திருக்கார். எழுபது மற்றும் எண்பதுகள்ல இருக்குற மாதிரியான ரோல். தாடி, மீசை, உடைன்னு எல்லாமே மாறி ஷூட்டிங் ஸ்பாட்ல நின்னுட்டிருந்தேன். ரஞ்சித் சார் பாராட்டினார். லாக்டெளன்ல படத்தோட ஷூட்டிங் தள்ளிப்போயிருச்சு. எல்லாம் முடிச்சிட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ, ஆர்யா சார் ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்படி உடல்வாகுடன் போனாரோ அதே மாதிரியே வந்து நின்னார். பார்க்க ஆச்சரியமா இருந்தது. ‘பன்னிகுட்டி’ படத்துல மூட நம்பிக்கையை எதிர்க்குற ஒரு கேரக்டர் பண்ணியிருக்கேன். தவிர, சூர்யாசார்கூட சேர்ந்து நடிச்சிட்டிருக்கேன்.’’

``காமெடி பண்றப்போ சிலரைக் காயப்படுத்துற மாதிரியான உடல்கேலியை எப்படிப் பார்க்கிறீங்க?’’

‘‘உடல்கேலி காமெடியைத் தவிர்த்துட்டு வரேன். ஆரம்பத்துல ராமரும் நானும் மாத்தி மாத்தி உடல்கேலி பண்ணிக்குவோம். எங்களுக்குள்ள புரிதல் மற்றும் நட்பு இருந்தது. இதனால, நாங்க காயப்படல. மற்றவங்களை உடல்கேலி பண்ணக் கூடாதுன்னு கவனமா இருக்கேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism