சினிமா
Published:Updated:

விகடன் TV: “ரம்யாகிருஷ்ணன் எனக்கு ரோல்மாடல்!”

 விகடன் TV
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் TV

பாகுபலி’ பார்த்த நடிகைகள் எல்லாருக்குமே ரம்யா கிருஷ்ணன் மாதிரியோ அனுஷ்கா மாதிரியோ ஒரு படத்திலாச்சும் நடிச்சிட மாட்டோமாங்கிற நினைப்பு இருக்கும்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் வேலு நாச்சியாரின் கதையான ‘வேலம்மாள்’ சீரீயலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘காட் மதர்’ ’கெட்-அப்’பில் இருந்தார் ரம்யா. ‘சினிமாப் பக்கம் போயிட்டதா சொன்னாங்க. மறுபடியும் விஜய் டிவி பக்கம் வந்துட்டீங்களே?’ என்றேன்.

‘‘விஜய் டிவி எனக்கு அம்மா வீடு மாதிரி. இது நிறைய பேர் சொல்ற டயலாக்தானேன்னு நினைக்கிறீங்கதானே? ஆனாலும் அதுதான் உண்மை. ‘ஆண்டாள் அழகர்’, ‘பொன்மகள் வந்தாள்’ சீரீயல்கள்தான் எனக்கு நல்ல ரீச்சைத் தந்தன. ‘பொன் மகள் வந்தாள்’ சீரியல்ல நடிச்சிட்டி ருந்தப்பதான் ‘புலிக்குத்தி பாண்டி’, ‘ராஜ வம்சம்’னு ரெண்டு படங்கள்ல நடிக்க சான்ஸ் வந்தது.

ரம்யா
ரம்யா

அதுவும் ‘புலிக்குத்தி பாண்டி’ கேரக்டர் எனக்கு உள்ளுக்குள் நடிக்கணும்னு ஆசை இருந்த ஒரு கேரக்டர். மதுரை பக்கமுள்ள ஒரு கிராமத்துப் பொண்ணு. மேக் அப் இல்லாம இப்படி ஒரு ரோல்ல நடிக்கணும்னு சொன்னதும் உடனே சம்மதிச்சிட்டேன். வெயில்ல மாடு மேய்க்க விட்டாங்க. இந்தப் படத்துல இன்னொரு ஸ்பெஷல் என்னன்னா எனக்கு சண்டைக்காட்சி இருந்தது. அதனால பண்ணினேன். எனக்குத் திருப்திதான். நிறைய படங்கள்ல சின்னச் சின்ன ரோல்ல வந்து போறதைவிட சின்ன பட்ஜெட் படம்னாலும் நமக்குப் பிடிச்ச கேரக்டரைப் பண்ணிடணும்கிறது என் எண்ணம். ‘சினிமா மட்டும்தான் பண்ணுவேன்’. ‘சீரியல் மட்டும்தான் பண்ணுவேன்’னெல்லாம் சொல்லிட்டிருந்தா இன்னைக்குப் பிழைக்க முடியாது. ஏன்னா, ஃபீல்டு போட்டி நிறைஞ்சதா இருக்கு. டிக்டாக் வந்து எல்லாரையும் ஆர்ட்டிஸ்டுகளாக்கிடுச்சு’’ என்றவர், ‘வேலம்மாள்’ சீரியலில் கமிட் ஆனது குறித்துத் தொடர்ந்தார்...

விகடன் TV: “ரம்யாகிருஷ்ணன் எனக்கு ரோல்மாடல்!”

‘‘ ‘பாகுபலி’ பார்த்த நடிகைகள் எல்லாருக்குமே ரம்யா கிருஷ்ணன் மாதிரியோ அனுஷ்கா மாதிரியோ ஒரு படத்திலாச்சும் நடிச்சிட மாட்டோமாங்கிற நினைப்பு இருக்கும். எனக்கும் இருந்துச்சு.’’ இந்த சீரீயல்ல ‘காட் மதர்’ ரோல்னதுமே அந்த நினைப்புதான் கண் முன் வந்தது. அதுவும் போக வரலாற்றுச் சீரியல்ல நடிக்கிற வாய்ப்பெல்லாம் சுலபமா எல்லாருக்கும் கிடைச்சிடாது. அதனாலதான் டக்னு சரி சொன்னேன். மூணு மாசத்துக்கு முன்னாடி மதுரையில் மாடு மேய்ச்ச நான், இந்த சீரியல்ல குதிரையில வரப்போறேன்’’ என்கிறார்.