Published:Updated:

விகடன் TV: சிவாஜியை சீண்டினோமா?

தாம்சன்
பிரீமியம் ஸ்டோரி
தாம்சன்

மக்களை மகிழ்விக்கறது ஒண்ணுதான் ஷோவின் பிரதான நோக்கம்.

விகடன் TV: சிவாஜியை சீண்டினோமா?

மக்களை மகிழ்விக்கறது ஒண்ணுதான் ஷோவின் பிரதான நோக்கம்.

Published:Updated:
தாம்சன்
பிரீமியம் ஸ்டோரி
தாம்சன்

'கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜியை அவமதித்து விட்டதாகக் கிளம்பிய சர்ச்சையின் பின்னணியில் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சனிடம் பேசினோம்.

விகடன் TV: சிவாஜியை சீண்டினோமா?

’’சிவாஜி சார் மாதிரியான லெஜண்ட்டுகளை மையப்படுத்தி இந்த ஷோ சர்ச்சைக்குள்ளானது உண்மையிலேயே வருத்ததுக்குரிய விஷயம்தான். `தில்லானா மோகனாம்பாள்’ படக்காட்சியை வச்சு ஜெயச்சந்திரன்கிறவர் பண்ணின அந்த பர்பாமன்ஸ் திட்டமிட்டோ அல்லது வணிக நோக்கத்துக்காக ஒருவித அலட்சிய மனப்பான்மையுடனோ நடக்கலைங்கிறது மட்டும் என்னால உறுதியாச் சொல்ல முடியும். பிரபு சார்கிட்ட நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிச்சிருக்கோம். நேர்ல சந்திச்சுப் பேசலாம்னு கேட்டிருக்கோம். கூடிய சீக்கிரத்துலயே வீட்டுக்குக் கூப்பிடுறேன்னு சொல்லியிருக்கார்’’ என்றவரிடம்.

‘‘மிமிக்ரி, மாடுலேஷன் ரெண்டும் நூலிழையில சம்பந்தப்பட்டவங்களைக் காயப்படுத்திடும்கிறது உங்க ஷோவில் கலந்துக்கிடறவங்களுக்குத் தெரியுமில்லையா?’’ என்று கேட்டோம்.

``மக்களை மகிழ்விக்கறது ஒண்ணுதான் ஷோவின் பிரதான நோக்கம். அப்படி மகிழ்விக்கக் கூடிய திறமை வாய்ந்த கலைஞர்கள் தமிழ்நாடு முழுக்க எவ்வளவோ பேர் இருக்காங்க. அந்தக் கலைஞர்களுக்கு சாதிக்க ஒரு பெரிய மேடையா இருக்கு இந்த ஷோ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாம்சன்
தாம்சன்

பொதுவாகவே மிமிக்ரி பண்றவங்க பாடி லாங்க்வேஜுக்காகப் பேசப்படுற ஆர்ட்டிஸ்டுகள் மாதிரி பர்பாமன்ஸ் பண்ண ஆசைப்படுவாங்க. அவங்க டயலாக்கைப் பேசினா அதிகமா ரீச் ஆவோம்னு நம்பறதுதான் காரணம். அதேபோல இந்த ஷோவுக்கு வர்ற எல்லாருமே எந்த இடத்துல நகைச்சுவைங்கிறது காயப்படுத்தற இடத்துக்கு நகர்ந்திடும்கிறதையும் தெரிஞ்சவங்களாவேதான் இருக்காங்க. சிலர் சில விஷயங்களை ஸ்கிரிப்ட் அளவுலயே கூட அப்ஜெக்ட் பண்ணுவாங்க. அந்த மாதிரியான போட்டியாளர்கள்தான் இந்த ஷோவுல இருக்காங்க. இதுவரை ஒளிபரப்பான 9 சீசன்களில் அஞ்சு சீசனுக்கு நான் டைரக்டரா இருந்திருக்கேன். என்னுடைய இந்தப் பயணத்துல கிடைக்கிற எல்லா அனுபவங்களையுமே நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கவே பயன்படுத்தியிருக்கேன். இந்த சம்பவத்தையும் அப்படித்தான் எடுத்திருக்கேன்.’’