சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சிம்ரன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிம்ரன்

சில ஆண்டுகளுக்கு முன் ஜீ தமிழில் சிம்ரன் தயாரித்த ஒரு ஷோவுக்கு ஆங்கராக இருந்தார் ஆனந்தி. அப்போது முதல் இருவருக்குமிடையில் நல்ல நட்பாம்.

ஐ.பி.எல் பரபரப்புக்குத் தயாராகிவிட்டார் ஆங்கர் பாவனா. `போன வருஷம் மாதிரி இல்லாம, இந்த ஆண்டு போட்டியை இந்தியாவுல நடத்தறதுல சிக்கல் இல்லை.
விகடன் TV: ரிமோட் பட்டன்

ஆனா `இரண்டு நாளுக்கொரு முறை கோவிட் டெஸ்ட் எடுக்கிறாங்க. அதுதான் கொஞ்சம் மூட் அவுட் ஆகற விஷயமா இருக்கு’ என்கிறவர், `கோவிட் தொற்று தொடங்கினதுல இருந்து அதிக முறை டெஸ்ட் எடுத்த ஒருத்தர்னா அது இந்தியாவுலயே நானாத்தான் இருப்பேன்போல’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சீரியல் நடிகையாகப் பெயர் எடுத்துவிட்ட பிறகும்கூட இன்றும் பாடக் கேட்டு நிறைய நிகழ்ச்சிகள் வருகின்றனவாம் ‘பகல் நிலவு’ சௌந்தர்யாவுக்கு. `’என்னை மக்களுக்கு அடையாளம் காட்டினது இசைதான். அதனாலதான் இப்பவும் கச்சேரிக்குக் கூப்பிட்டா மறுக்காமக் கிளம்பிடுறேன்.’ என்றவர், “ஆனா இந்தக் கொரோனா வந்து மேடை இசைக்கலைஞர்கள் பலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுச்சு’’ என உச் கொட்டுகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில ஆண்டுகளுக்கு முன் ஜீ தமிழில் சிம்ரன் தயாரித்த ஒரு ஷோவுக்கு ஆங்கராக இருந்தார் ஆனந்தி. அப்போது முதல் இருவருக்குமிடையில் நல்ல நட்பாம். கடந்த வாரம் சிம்ரன் பிறந்த நாளன்று ஆனந்திக்கு திடீர் அழைப்பு. உடனடியாக மகனைக் கூட்டிக்கொண்டு சிம்ரன் இருந்த ஷூட்டிங் ஸ்பாட் சென்றவர் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சிம்ரனுடன் அளவளாவிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

னந்தக் கண்ணனை நினைவிருக்கிறதா? சேட்டிலைட் சேனல் அறிமுகமான காலத்தில் சன் டிவி மூலம் பிரபலமானவர். சில படங்களிலும் நடித்தவர் திடீரென சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்று செட்டில் ஆனார். அங்கு தமிழ்ப் பாரம்பரியக் கலைகளைச் சொல்லிக் கொடுத்துவந்தவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் டிவிக்கு வரப்போகிறார். இந்த முறை டிஸ்கவரி தமிழ் சேனலின் ஆங்கராக வருகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சில தினங்களுக்கு முன் முதன்முறையாக விருத்தாசலம் அருகேயுள்ள தன் சொந்த கிராமத்தில் பாடச் சென்றுள்ளார் வேல்முருகன். கொரோனாவைக் காரணம் காட்டி கச்சேரிக்கு அனுமதி தர மறுத்திருக்கின்றனர் உள்ளூர் போலீசார். ‘அசம்பாவிதம் ஏதும் நடந்தா நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என எழுதிக் கொடுத்து, கச்சேரியை முடித்துத் திரும்பினாராம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

பீச் புரட்சியில் கிடைத்த புகழில் டிவி பக்கம் வந்து பெயரைக் கெடுத்துக்கொண்டவருக்கு விரைவில், அதாவது இந்த வருடத்தில் திருமணம் இருக்கலாம் என்கிற பேச்சு கேட்கிறது. அதை ஆமோதிப்பதுபோல் கைப்பிடிக்கப்போவதாகச் சொல்லப்படும் ஆண் நண்பருடன் பொது வெளியில் இப்போது மேடத்தை அடிக்கடி பார்க்க முடிகிறது.