Published:Updated:

விகடன் TV: “நாலு பேருக்கு நற்றிணை தெரியட்டுமே!”

சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா

ஆனந்த விகடன் பொங்கல் ஸ்பெஷல்’ல என் பேட்டியா... வாவ்’’ என்றபடி பேசத் தொடங்கினார்...

விகடன் TV: “நாலு பேருக்கு நற்றிணை தெரியட்டுமே!”

ஆனந்த விகடன் பொங்கல் ஸ்பெஷல்’ல என் பேட்டியா... வாவ்’’ என்றபடி பேசத் தொடங்கினார்...

Published:Updated:
சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
சரண்யா
‘‘கடைசியா கலெக்டரா பார்த்தது. அந்த சீரியலைக்கூட நீங்க இணைஞ்ச கொஞ்ச நாள்லயே முடிச்சிட்டாங்க. அதன்பிறகு டிவியில பார்க்கவே முடியலையே... விரும்பி எடுத்துக்கிட்ட பிரேக்கா அல்லது அடுத்த கட்டத் தேடல்ல இருக்கீங்களா?’’ என்ற கேள்வியுடன் சரண்யா முன் போய் அமர்ந்தேன்.
சரண்யா
சரண்யா

‘‘ஆனந்த விகடன் பொங்கல் ஸ்பெஷல்’ல என் பேட்டியா... வாவ்’’ என்றபடி பேசத் தொடங்கினார்...

‘‘ஒருநேரத்துல சினிமாவுல இருந்தேன். பிறகு ரொம்பவே பிடிச்ச ஜர்னலிசம் பக்கம் போனேன். ரெண்டு செய்திச் சேனல் அனுபவமும் என்னால எப்பவும் மறக்க முடியாது. பரபரப்பான நியூஸ் ஆங்கரா ஓடிட்டிருந்தப்பதான் சீரியல் வாய்ப்பு வந்தது. `எண்டர்டெய்னிங் பிளாட்பாரம் எப்படி இருக்குன்னு பார்க்கலாமே’ன்னு விரும்பித்தான் அதுக்குள் வந்தேன். அந்த சீரியல் ஹிட் ஆச்சு. பிறகு ‘ரன்’ல நடிச்சேன். மறுபடியும் ‘ஆயுத எழுத்து’க்குக் கூப்பிட்டாங்க. அது திடீர்னு நிறுத்தப்பட்டதுலயும் யார் மீதும் குறை சொல்ல முடியாது. ‘கொரோனா’ நேரத்துல என்னால ஷூட் போக முடியலை. அதனால நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு சேனலே அந்த முடிவை எடுத்துட்டாங்க.

விகடன் TV: “நாலு பேருக்கு நற்றிணை தெரியட்டுமே!”

சீரியல் வாய்ப்புகள் நிறைய வந்துட்டேதான் இருக்கு. ஆனா, ‘சீரியல் நடிகையா, ஜர்னலிஸ்டா’ன்னு கேட்டா, என் மனசு ஜர்னலிஸத்தைக் கை காட்டுது. செய்திச் சேனல் தொடர்பையும் நான் விட்டுடலை. இப்பவும் அரசியல் நிகழ்வுகளைக் கவனிச்சுட்டுத்தான் வர்றேன். அதனால, ‘அந்தப் பக்கம் குதிக்கறதா, இந்தப்பக்கம் குதிக்கறதா’ன்னு நிதானமா யோசிச்சு முடிவெடுக்கறதுக்கான பிரேக் இது. சீக்கிரமே இந்த பிரேக் முடியும்னு நம்பறேன்.’’

``யோசிக்க எடுத்த பிரேக்னு சொல்றீங்க. ஆனா உங்க இன்ஸ்டா பக்கம் தினமும் கவிதையும் காதலுமா நிரம்பி வழியுதே?’’

‘‘ரெண்டு விஷயம்ங்க. முதல்ல சோஷியல் மீடியாவுல பார்த்துட்டு ‘அவங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்’னு முடிவு பண்ணாதீங்க. ஏன்னா, அதுல ஒரு போட்டோ போட்டாக்கூட அது செலக்ட் பண்ணிப் போடறது. ரெண்டாவது, ஒருத்தர் 24 மணி நேரமும் யோசிச்சிட்டே இருக்கணும்னு சொல்றீங்களா? காதலும் கவிதையுமாங்கிறதுக்கு என் பதில் இதுதான். காதல் எல்லாருக்குமான உணர்வு. கவிதை அதுவும் சங்கத் தமிழ்ல காதலை வெளிப்படுத்திய கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால அதை எடுத்து மேற்கோள் காட்டுறேன். நம்ம மூலம் நாலு பேர் நற்றிணை, குறுந்தொகையின் பெருமையைத் தெரிஞ்சுக்கட்டுமே!’’

விகடன் TV: “நாலு பேருக்கு நற்றிணை தெரியட்டுமே!”

``ராகுல் பத்தி...’’

‘‘ஆணோ, பெண்ணோ, ‘வாழ்க்கைத்துணைத் தெரிவு’ ரொம்பவே முக்கியம்ங்கிற படிப்பினையை 2020 எனக்குத் தந்திருக்கு. பெயர், புகழ், பணம் எல்லாத்தையும்விட, வாழ்க்கையில குறிப்பிட்ட பருவத்துல இணைஞ்சு, கடைசி வரைக்கும் நம்ம கூட வர்ற உறவு இது. அப்படிப்பட்ட எனக்கான உறவு ராகுல். அதனாலதான் நீங்க கேட்ட மாதிரி கவிதையும் காதலுமா அந்த உறவைக் கொண்டாடுறேன்.’’

``சமீபத்துல ‘காத்து எப்படி வீசுது’ என செய்திச் சேனல்களின் லைவைக் கலாய்த்து வெளியான வீடியோக்கள் பார்த்தீங்களா? லைவ் தொகுத்து வழங்கியிருக்கிற நீங்க இதுபத்தி என்ன சொல்றீங்க?’’

‘‘சென்னையில ‘வர்தா’ புயல் நேரத்துல நான் லைவ் பண்ணபோது, ஒரு பெரிய மரம் சாய்ஞ்சு பக்கத்துல விழுந்தது. கொஞ்சம் அசந்திருந்தாலும் என் மேலதான் விழுந்திருக்கும். ஆனா அதுகுறித்த பயம் எனக்கு இல்ல. ஏன்னா விருப்பத்தோடு செஞ்ச வேலை அது. வர்தா மட்டுமில்லீங்க, நிறைய லைவ் பண்ணியிருக்கேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே விமானத்துல பயணிச்சு, அலங்காநல்லூர்லயே நாலு நாள் தங்கியிருந்து கவர் செய்தேன். லைவ் போறப்ப அதை எக்ஸ்க்ளூசிவா கொடுக்கணும்கிற ஒரே நினைப்புதான் இருக்கும். அது எவ்ளோ கஷ்டம்கிறது வெளியில இருந்து பேசறவங்களுக்குத் தெரியாது. ஆனா, மீம்ஸ் வீடியோக்கள் சில நேரம் எல்லாத்தையும் தாண்டி குபீர்னு சிரிக்க வச்சுடுது. அவங்களும் ஒரு ஃபன்னாதானே நம்ம வேலையைக் கலாய்க்கிறாங்க. அதனால சிரிச்சிட்டுப் போவோமே!’’

``சித்ராவின் கடைசி நாளில் உடன் இருந்தீங்க...’’

`` ‘மன ஆரோக்கியம்’ ரொம்பவே முக்கியம்னு உணர்த்திட்டுப் போயிட்டாங்க. இது ஒண்ணு போதும்.’’

``பொங்கலுக்கு என்ன திட்டம்?’’

``கடற்கரையை ஒட்டி இருக்கிற என் வீட்டுல அதிகாலையில சூரியன் எழுவதற்கு முன்னாடியே எழுந்து பொங்கல் வச்சு வழிபடுவோம். அதுதான் வழக்கமான பொங்கல் அஜெண்டா. மற்றபடி அன்னைக்கு வீட்டுலதான் இருப்பேன்.’’