Published:Updated:

யூடியூப் சேனல் ஹேக்: "பிட் காயின் குறித்து நள்ளிரவில் லைவ் பண்ணாங்கனு சொன்னாங்க!" - கனி விளக்கம்

கனி
News
கனி

குக்கு வித் கோமாளி கனியிடம் அவரது யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது குறித்துப் பேசினோம்

யூ-டியூப் தளத்தில் இயங்கும் பிரபல சேனல்களான பரிதாபங்கள், தியேட்டர் டி, நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற 15-க்கும் மேற்பட்ட சேனல்கள் நேற்று நள்ளிரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக Theatre D சேனல் நடத்திக் கொண்டிருக்கும் ‘குக்கு வித் கோமாளி’ டைட்டில் வின்னர் கனி திருவிடம் பேசினோம்.

"இதுக்கு முன்னாடி எங்க சேனலை யாரும் ஹேக் பண்ணினதெல்லாம் இல்லை. இதுதான் முதல்முறை! எதார்த்தமா இன்னைக்கு காலையில் இன்ஸ்டாகிராம் போனப்போ தான் ஹேக் பண்ணினதில் எங்க சேனலும் ஒண்ணுன்னு தெரிஞ்சது. பலர் நைட் எங்க சேனலில் கதை கேட்பாங்க. சில சப்ஸ்கிரைபர்ஸ், உங்க பெயரில் சேனல் வரலைன்னும், உங்க சேனலில் பிட் காயின் குறித்து நள்ளிரவில் லைவ் பண்ணாங்கன்னும் சொன்னாங்க.

கனி
கனி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எங்களோட சேனல் பார்ட்னர் divo. ஹேக் செய்யப்பட்ட சேனல்கள் பெரும்பாலும் divo பார்ட்னர்தான். அதனால, அவங்க இதை உடனே சரிசெய்திடுறோம்னு சொல்லியிருக்காங்க. சேனல் ஹேக் ஆனதும் நான் ரொம்ப பயந்துட்டேன். என் கணவர் சேனலை ரெக்கவர் பண்ணிடலாம்னு சொன்னதும்தான் கொஞ்சம் நிம்மதியாச்சு. மத்தவங்களோட வளர்ச்சியைப் பொறுத்துக்க முடியாத கொடூர மனநிலையில் இருக்கிறவங்கதான் வேலையில்லாம இதெல்லாம் பண்ணுவாங்க." என்றார்