சினிமா
Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஷிவானி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷிவானி

‘சுந்தரி’ சீரியல் நல்ல பெயரை வாங்கித் தந்திருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறார் கேப்ரியெல்லா

விகடன் TV: ரிமோட் பட்டன்

இதே ‘விகடன் டி.வி’ பகுதியில் ‘குக்கு வித் கோமாளி’ புகழ் திருமணம் செய்துகொள்ளப்போகிற பெனசிரின் புகைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அப்போது திருமணம் குறித்த கேள்விக்கு மழுப்பலான பதிலையே தந்த புகழ், இப்போது காதலியுடன் புகைப்படம் எடுத்து, `பார்ட்னர்’ எனக் குறிப்பிட்டுச் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இந்த ஜோடிக்கு முதன்முதலாக தன் வீட்டில் நடிகை ஷகிலா அளித்த விருந்தில் கலந்துகொண்டவர்களிடம் கேட்டால், ‘‘கத்தரிக்கா முத்தினா கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும்’’ எனச் சிரிக்கின்றனர்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘சுந்தரி’ சீரியல் நல்ல பெயரை வாங்கித் தந்திருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறார் கேப்ரியெல்லா. ‘‘சில தினங்களா சமூக வலைதளங்கள்ல முகமறியாத எத்தனையோ பேர் என்னுடைய நடிப்பையும் பாராட்டிட்டிருக்காங்க. கேரக்டரை இப்படிக் கொண்டு போற டைரக்டர், யூனிட், சேனலுக்குத்தான் எல்லா கிரெடிட்டும்’’ என நெகிழ்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கமல், விஜய் சேதுபதி நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்திருக்கும் ஷிவானி, இயக்குநர் பொன்ராம் இயக்க, விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம். விஜய் சேதுபதி மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படமாம் இது.

சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்ட சஹானாவுக்கு இந்தப் பொங்கல் தலைப் பொங்கல். ஊரடங்குக் கெடுபிடிகளால் அதைச் சிறப்பாகக் கொண்டாட முடியாததில் வருத்தமாம். ஆனாலும் பொங்கல் அன்று மாலை சென்னையை அடுத்துள்ள தடா நீர்வீழ்ச்சிக்குக் கணவருடன் கிளம்பி ஒரு டூர் அடித்துவிட்டு வந்துவிட்டார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உச்சக் கட்டக் குழப்பம் உண்டான போதுதான் அப்போதைய அரசு தலையிட்டு, நிர்வகிக்க அதிகாரி ஒருவரை நியமித்தது. நடிகர் சங்கத்தில் நடந்த அதே கூத்துகள்தான் தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் அரங்கேறி வருகின்றன. நிர்வாகக் குளறுபடி, நிதிமுறைகேடு புகார் என உறுப்பினர்கள் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். உச்சமாக உறுப்பினர்கள் சிலரே சங்கப் பதிவாளர் அலுவலத்துக்குச் சென்று, சங்கத்தின் பதிவை ரத்து செய்யவும் மனு கொடுத்திருக்கிறார்களாம்.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகையின் மகள் அவர். புதிதாகக் கட்டப்பட்டு வரும் பெரிய வீட்டுக்குள் நுழைய ஆசைப்பட்டு தன் அம்மாவிடம் விருப்பத்தைச் சொன்னாராம். அந்த அம்மாவும் சம்பந்தப்பட்ட சிலரை அணுகி மகளின் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். பெரிய வீட்டிலோ தயக்கம் காட்டுகிறார்களாம். சில மாதங்களுக்கு முன் இன்னொருவரால் நிகழ்ந்த கசப்பான அனுபவமே தயக்கத்துக்கான காரணம் என்கிறார்கள்.