Published:Updated:

விகடன் TV: “சாண்டி மாஸ்டர் ஹீரோயின் நான்!”

ஸ்ருதி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ருதி

‘என்ன இது, வாழ்க்கை இப்படியே போயிட்டிருக்கே’ன்னு நினைச்சப்பத்தான் ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ தொடர்ல கமிட் ஆனேன்.

விகடன் TV: “சாண்டி மாஸ்டர் ஹீரோயின் நான்!”

‘என்ன இது, வாழ்க்கை இப்படியே போயிட்டிருக்கே’ன்னு நினைச்சப்பத்தான் ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ தொடர்ல கமிட் ஆனேன்.

Published:Updated:
ஸ்ருதி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ருதி

ஷிவானி தங்கையாக சீரியல் உலகுக்கு அறிமுகமானவர் ஸ்ருதி. மூன்றே சீரீயல்களை முடித்தவரை கோடம்பாக்கம் ஹீரோயின் ஆக்கியிருக்கிறது. பூங்கொத்து கொடுத்துப் பேசினேன்.

‘‘பூர்வீகம் சேலம்னாலும் வளர்ந்ததெல்லாம் வட இந்தியா. அப்பாவுக்கு ஏர் ஃபோர்ஸ்ல வேலைங்கிறதால இப்பவும் ஃபேமிலி அங்கதான் இருக்கு. கோயம்புத்தூர்ல ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் எடுத்துப் படிச்சிட்டிருந்தப்ப ‘மை போட்ட கண்ணால’ங்கிற ஆல்பத்துல நடிச்சேன். அது நல்லா ரீச் ஆச்சு. விஜய் டிவியில இருந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல்ல ஷிவானி தங்கச்சியா நடிக்கக் கூப்பிட்டாங்க. வீட்டுக்குத் தெரியாமத்தான் ஆடிஷன் வந்தேன். செலக்‌ஷன் ஆகி நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. என்ன நடந்ததுன்னு தெரியலை, சீரியலை சட்டுனு முடிச்சிட்டாங்க.

அந்த சீரியலை நம்பியே சென்னைக்கு வந்தவளுக்கு அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியலை. என்ன செய்யறதுன்னு முழிச்சிட்டிருந்த சூழல்ல ‘தாழம்பூ’ன்னு அடுத்த சீரியல் வாய்ப்பு. என்னுடைய நேரமா தெரியலை, அந்த சீரியலும் கொஞ்ச நாள்லயே முடிஞ்சிடிச்சு.

‘என்ன இது, வாழ்க்கை இப்படியே போயிட்டிருக்கே’ன்னு நினைச்சப்பத்தான் ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ தொடர்ல கமிட் ஆனேன். கேரக்டர் பேரு சிம்ரன். நல்ல ரீச். ஆனா...’’ என ஒரு விநாடி நிறுத்தினார்.

விகடன் TV: “சாண்டி மாஸ்டர் ஹீரோயின் நான்!”

‘அந்த சீரியலை இன்னும் முடிக்கலையே’ என்றேன்.

“சீரியல் 1000 எபிசோடு தாண்டிப் போயிட்டுதான் இருக்கு. ஆனா கொரோனா புண்ணியத்துல என் கேரக்டரை முடிச்சிட்டாங்க. மூணு சீரியலும் முழுசா வளர விடலைன்னாலும் சென்னையில வீடு எடுத்துத் தனியா ஃபீல்டை எதிர்கொள்ள நல்ல தைரியத்தைத் தந்திடுச்சு. ஆரம்பத்துல என்னை நினைச்சு பயந்திட்டிருந்த ஃபேமிலிக்கு இப்ப அந்த பயம் போயிடுச்சு. ஆக்டிங் பக்கம் வந்ததுல இப்போதைக்கு இந்த ஒரு நல்ல விஷயம்தான் வந்திருக்கு’’ என்கிறார்.

``சீரியல்களை விடுங்க, சினிமாவுல ஹீரோயின் ஆகிட்டதாச் சொல்றாங்களே?’’

‘‘ஆமா. ‘333’ங்கிற படத்துல நடிக்கிறேன். சாண்டி மாஸ்டருக்கும் தமிழில் ஹீரோவா முதல் படம். நான் அவருக்கு ஜோடியா பண்றேன். சாங்ஸ் மட்டும் மிச்சமிருக்கு... சீரியல்கள் மாதிரி சினிமா என்னைப் பாதியில் கைவிடாதுன்னு நம்பறேன். அதுக்காக இனி சீரியல் பண்ணமாட்டேன்னும் சொல்ல மாட்டேன்.’’