Published:Updated:

விகடன் TV: “நான் அழுவாச்சி ஆள் இல்லை!”

அதனால ஆடிஷன் நடக்குதான்னு தேடிட்டே இருந்தேன். முதன்முதலா சன் லைஃப் சேனல்ல ஒளிபரப்பான ‘ஜிமிக்கி கம்மல்’ சீரியல் வாய்ப்பு வந்தது.

பிரீமியம் ஸ்டோரி

``எனக்கு 20 உனக்கு 40’ டைப் கதைன்னு சொல்லித்தான் கமிட் செஞ்சாங்க. மத்த சிலருக்கு நான் அதிக வயசுள்ள ஒரு ஹீரோவுடன் நடிக்கிறது எப்படியோ இருந்திருக்கு. ஆனா எனக்கு எந்தவிதத் தயக்கமோ குழப்பமோ இல்லவே இல்லை. ஏன்னா, முதன்முதலா மலையாளத்துல என் முகம் டி.வி-யில வந்ததே ஒரு ஆக்டிங் ஷோ. நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.’’

‘செந்தூரப் பூவே’ தொடரில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடி சேர்ந்தது குறித்துக் கேட்டதற்கு இப்படிச் சொன்ன ஸ்ரீநிதி, பிறந்தது திருவனந்தபுரம்.

‘‘ஸ்கூல் படிச்சிட்டிருந்தபோதே மலையாளத்துல சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்கிடுச்சு. ஆனா நான் கமிட் ஆகலை. அதென்னவோ தமிழ் இண்டஸ்ட்ரி பத்தி எதுவுமே தெரியாதப்பவே, தமிழ்ல நடிக்கணும்கிற ஆசை வந்திடுச்சு.

விகடன் TV: “நான் அழுவாச்சி ஆள் இல்லை!”
விகடன் TV: “நான் அழுவாச்சி ஆள் இல்லை!”

அதனால ஆடிஷன் நடக்குதான்னு தேடிட்டே இருந்தேன். முதன்முதலா சன் லைஃப் சேனல்ல ஒளிபரப்பான ‘ஜிமிக்கி கம்மல்’ சீரியல் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து ‘தறி’ சீரியல் பண்ணினேன். ஒரு பொழுதுபோக்கு சீரியல்ங்கிறதைத் தாண்டி அந்த சீரியல் மூலமா காஞ்சிபுரம் பகுதியில வாழ்ந்த நெசவாளர்களுக்கு உதவிகள் கிடைச்சது. அப்படியொரு சீரியல்ல நானும் நடிச்சேன்ங்கிறதையே பெருமையா நினைக்கிறேன்’’ என்றவரிடம், சில நாள்களுக்கு முன் திடீரென ‘செந்தூரப் பூவே’வில் நிகழ்ந்த பிரியா ராமனின் சர்ப்ரைஸ் எண்ட்ரி குறித்துக் கேட்டேன்.

‘‘கதைப்படி ரஞ்சித் சாருடைய முதல் மனைவியா அவங்க வந்தாங்க. அவங்க வர்றாங்கன்னு கேள்விப்பட்டதுமே எனக்கு மட்டுமல்ல எங்க யூனிட்ல எல்லாருக்குமே ஒருவித எதிர்பார்ப்பு உண்டாச்சு. ரியல் ஜோடி எப்படி ஸ்க்ரீன்ல ரொமான்ஸ் பண்றாங்கன்னு பார்க்கலாமேங்கிற எதிர்பார்ப்புதான்.

ஆனா அதே நேரம், பிரியா ராமன் வந்துட்டதால இனி ரோஜா (சீரியலில் கேரக்டர் பெயர்) இல்லைன்னும் யாரோ கொளுத்திப் போட்டுட்டாங்க. எங்கிட்டயே சிலர் வந்து இதைக் கேட்டப்ப எனக்கு ஜெர்க் ஆச்சு. ஆனாலும் நான் அலட்டிக்கல. ஏன்னா ரோஜா மாதிரி அழுதுட்டே இருக்கிற ஆளு இல்லைங்க நான். ‘இது இல்லாட்டி இன்னொன்னு’ன்னு கடந்து போயிடுவேன்’’ என்கிறார் இயல்பாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு