Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் பட்டன்

நவீந்தர் திருமணமானவர்னு அவங்களுக்குத் தெரியலை’’ எனச் சிரிக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

நவீந்தர் திருமணமானவர்னு அவங்களுக்குத் தெரியலை’’ எனச் சிரிக்கிறார்.

Published:Updated:
ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் பட்டன்
‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்த சங்கவி, அதே தொடரில் தன் அக்கா கணவராக நடித்த நவீந்தருடன் இணைந்து, கடந்த காதலர் தினத்துக்காக ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தினார். விசாரித்தால், ‘`இது ஒரு கான்செப்ட்டுங்க, காதல்ங்கிறது வயசை, காலத்தைக் கடந்ததுன்னு சொல்ல நினைச்சோம்.
விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

நவீந்தருக்கு ஜோடியா ஒரு படத்துலயும் நான் இப்ப நடிச்சிட்டிருக்கிறதால இந்த ஐடியா அவருக்கும் எனக்கும் சேர்ந்தே உதிச்சதுன்னு சொல்லலாம். ஆனா நவீந்தருடன் என்னைப் பார்த்த சிலர் நாங்க‌ ரெண்டு பேரும் லவ்வர்ஸ்னு நினைச்சிட்டாங்க, பாவம், நவீந்தர் திருமணமானவர்னு அவங்களுக்குத் தெரியலை’’ எனச் சிரிக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

ருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அவரவர் சார்ந்த கட்சிகளில் விருப்ப மனு போட்டிருக்கிறார்கள். போஸ் வெங்கட் தி.மு.க சார்பில் அறந்தாங்கித் தொகுதியைக் கேட்டிருக்கிறார். டிவி நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருக்கும் ரவிவர்மாவோ ஆளுங்கட்சி சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ன்னுடைய யூடியூப் சேனலுக்கு சில்வர் ப்ளே பட்டன் கிடைத்ததில் ரொம்பவே உற்சாகத்திலிருக்கிறார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா. சேனல் தொடங்கி இரண்டே மாதங்களில் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறதாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

டந்த வாரம் நடந்த நீபாவின் தம்பி திருமண நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஜெயஸ்ரீயுடன் நடந்த பஞ்சாயத்துக்குப் பிறகு பொதுவெளியில் அவ்வளவாகத் தலைகாட்டாமல் இருந்துவந்த மகாலட்சுமியையும் அங்கு காண முடிந்தது. கணவர் ராஜகுமாரன் மற்றும் மகளுடன் கல்யாண வீட்டுக்கு வந்திருந்தார் தேவயானி.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ங்கமம் என்கிற பெயரில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலை இன்னொரு சீரியலுடன் இணைத்ததில், அதில் வில்லியாக அதகளம் செய்துகொண்டிருந்த பாத்திமா பாபுவுக்கு அவ்வளவாகக் காட்சிகள் இப்போதைக்கு இல்லையாம். எனவே, புதுச்சேரி, பொள்ளாச்சி என ஒரு மினி ட்ரிப் கிளம்பி விட்டார். அதுவும் நீண்ட காலத்துக்குப் பிறகு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி, அதாவது அரசுப் பேருந்தில் பயணித்தாராம். மாஸ்க் போட்டபடி பயணிகளோடு பயணியாக புதுச்சேரிக்குப் போய் வந்தவரிடம் ‘பஸ் அனுபவம் எப்படி’ எனக் கேட்டால், ‘எனக்கு பஸ்ல ஐந்து ரூபாய் சில்லறை தரவே இல்லை’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாட்டுக்கு க்ரெடிட் எடுத்துக்கொண்டார்கள்’ என்கிற புகார் எழுந்து, அது உடனடியாகச் சரி செய்ய‌ப்பட்டு விட்ட பிறகும்கூட, பாட்டுத் தம்பதிக்கு இன்னும் அந்த சர்ச்சை குறித்த வருத்தம் தீரவில்லையாம். ‘மச்சினிச்சியை வளர்த்து விடுறீங்களாக்கும்’ எனக் கேட்டே கண்ணு போட்டுட்டாங்க’ என நெருக்கமானவர்களிடம் புலம்பியதாகச் சொல்கிறார்கள்.

முன்பொரு முறை அம்மாவுடன் கோபித்துக்கொண்டு இரண்டு மாதங்கள் ஷூட்டிங் செல்லவில்லை அந்த நடிகை. அந்த நாள்களில் வீட்டு வாடகை கொடுக்க தன் வளையல்களை அடகு வைத்தாராம் அவரின் அம்மா. இப்போது வீட்டில் தன் பெட் அனிமலுக்குப் பிறந்த நாள் கொண்டாடிவருகிறார் நடிகை. அம்மா திருத்துவார் எனப் பார்த்தால், அம்மாவையும் தன் லைஃப்ஸ்டைலுக்கு மாற்றிவிட்டார் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism