Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் பட்டன்

என்னென்னவோ திருப்பங்கள் செய்து ஒருவழியாக ‘ராஜா ராணி 2’ தொடரை வேகமெடுக்க வைத்துவிட்டார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

என்னென்னவோ திருப்பங்கள் செய்து ஒருவழியாக ‘ராஜா ராணி 2’ தொடரை வேகமெடுக்க வைத்துவிட்டார்கள்.

Published:Updated:
ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

டந்த ஜூலையில் திருமணம் நடந்த விஜித் வீட்டில் விசேஷம். விஜித்தின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். லாக் டௌன் காரணமாக திருமணத்தை சிம்பிளாக வேடசந்தூரில் இருக்கும் தங்கள் குலதெய்வக் கோயிலில் நடத்திய விஜித், சென்னையில் வரவேற்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார். தற்போது ‘மகளோ அல்லது மகனோ வந்த பிறகு பெரிய விழாவாகக் கொண்டாடிவிடலாம்’ என்கிறார். டிவியில் அப்பா அம்மா ஆகப்போகிற இன்னொரு ஜோடி பியர்லி-ஸ்ரீனிஷ் தம்பதி. மலையாள பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களான இவர்கள், ஷோவிலிருந்து வெளியேறியதும் திருமணம் செய்தது நினைவிருக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விகடன் TV: ரிமோட் பட்டன்

ரேடியோவிலிருந்து டிவி, சினிமா என வந்து விட்ட பிறகும் மிர்ச்சி செந்திலுக்கு ரேடியோ மீதான காதல் குறைந்தபாடில்லை. சமீபத்தில் பிரபலமான அந்த ஜவுளி நிறுவனம் இவருடைய வானொலி நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டியதுடன் செந்திலுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கியது. இதுபோன்ற அங்கீகாரங்கள் தன்னை ரொம்பவே உற்சாகப்படுத்துவதாகச் சொல்கிறார் செந்தில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘நாதஸ்வரம்’ சம்பந்தத்தை ஞாபகம் இருக்கிறதா? சீரியலில் இருந்து சினிமாப் பக்கம் போனவர், மறுபடியும் ஹீரோவாக சீரியலுக்குத் திரும்பினார். ஆனால் ஒரேயொரு சீரியலுடன் மறுபடியும் ஆளைக் காணவில்லை.

விசாரித்தால், ‘‘அண்ணே, மறுபடியும் திருமுருகன் சார் கூப்பிட்டிருக்கார். அவருடைய புது சீரியல்ல வரப் போறேன். அப்புறம், ‘மாயாண்டி குடும்பத்தார் 2’ படம் இருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னா கொரோனாதான் மனசு வைக்கணும். அதுவும் ஏதோ பார்ட் 2 எடுக்குதுன்னு பீதி கிளப்புறாங்களேண்ணே’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ன்னென்னவோ திருப்பங்கள் செய்து ஒருவழியாக ‘ராஜா ராணி 2’ தொடரை வேகமெடுக்க வைத்துவிட்டார்கள். சீரியலுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாகவே ஒளிபரப்பு நேரத்தை 9.30க்கு மாற்றியிருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சென்னை கொரட்டூர் பகுதியில் வசித்து வந்த ஷிவானி கடந்த ஆண்டு தொடக்கத்தில்தான் புறநகரான செங்குன்றத்தில் புதிதாக வீடு வாங்கினார். இ.எம்.ஐ போய்க்கொண்டிருந்ததால், கோவிட் தொடங்கியதும் கடனை அடைப்பது குறித்து ரொம்பவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். அடுத்த சில மாதங்களில் கிடைத்த ‘பிக் பாஸ்’ வாய்ப்பு அந்தக் கவலையைப் போக்கிவிட்டது. நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததும் முதல் வேலை, வீட்டுக் கடனை அடைப்பதுதானாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

ங்களின் பிரைம் டைம் ஹிட் சீரியலின் பெயரிலேயே ஒரு டப்பிங் சீரியலை கல்விக் குழுமச் சேனலும் ஒளிபரப்ப, கடுப்பில் இருக்கிறதாம் நட்சத்திர சேனல். கல்விக் குழுமச் சேனல் தரப்பைக் கேட்டால், ‘இன்னைக்கு முக்கால்வாசி சீரியல்கள் பழைய படங்களின் பெயர்கள்லதான் வந்திட்டிருக்கு. யாரைக்கேட்டு பழைய படங்களின் பெயர்களை வைக்கிறாங்க?’ என எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.

ரணத்தின் மர்மம் விலக சிபிசிஐடி விசாரணை கேட்டாலும் இன்னொரு புறம், நடிகை அம்மாவின் செயல்கள் புதிராகவே இருப்பதாகக் கிசுகிசுக்கிறது நடிகையின் நெருங்கிய நட்பு வட்டம். நடிகையின் முன்னாள் உதவியாளரை சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்த அந்த அம்மா, ‘‘நீ பாட்டுக்கு எதையும் வெளியில பேசிட்டுத் திரியாத, பொழப்பப் பாரு’’ எனச் சொன்னாராம். நடிகை கணவரின் நெகட்டிவ் பக்கம் குறித்து நிறைய அறிந்தவர் அந்த உதவியாளர் என்பதுதான் இங்கே ஹைலைட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism