Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கிடைத்த சினிமா வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்த அபிராமி, புதிதாகத் துணிக்கடை ஒன்றைத் திறந்திருக்கிறார்.

பிரீமியம் ஸ்டோரி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவுக்குள் வருகிறார் தேவயானி. ஹீரோயினாக இவர் நடிக்க, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியலின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் தொடங்கியிருக்கிறதாம்.
விகடன் TV: ரிமோட் பட்டன்

மார்ச் கடைசி வாரத்திலோ அல்லது சித்திரை முதல்நாள் முதலோ ஒளிபரப்பு தொடங்கலாமெனத் தெரிகிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பகல் நிலவு’ தொடருக்குப் பிறகு சீரியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய சிந்து ஷியாம், நடனப் பயிற்சி அளிப்பதில் நேரத்தை முழுக்க செலவிட்டுவருகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பாக்யலட்சுமி’ சீரியலின் ஹீரோயின் சுசித்ரா, தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி சீரியல் பக்கம் வந்தவர். ‘பாக்யலட்சுமி’ தொடரில் எப்படி கூட்டுக் குடும்பத்தில் குடும்பத் தலைவியாக வருகிறாரோ, அதேபோல் பெங்களூருவில் வசிக்கும் இவரது நிஜக் குடும்பமுமே கூட்டுக்குடும்பம்தானாம். தன் ஒரே மகளை கலெக்டராக்க வேண்டுமென்பதே சுசித்ராவின் வாழ்நாள் கனவு.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘கோலங்கள்’ சீரியலில் ஆர்த்தியாக நடித்த ஸ்ரீவித்யாவை நினைவிருக்கிறதா? திருமணத்துக்குப் பிறகு சீரியலுக்கு பிரேக் விட்டவர், கேட்டரிங் பிசினஸ் ஒன்றில் ஈடுபட்டுவந்தார். இப்போது மறுபடியும் சீரியல், சினிமா பக்கம் வரப்போவதாகத் தெரிகிறது. ஆனால் இந்த முறை டயலாக், டைரக்‌ஷன் எனக் களமிறங்கப் போகிறாராம். இவர் டயலாக் எழுதி டைட்டில் கார்டில் பெயர் போட்ட முதல் தொடர், விகடனின் ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸ்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு கிடைத்த சினிமா வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்த அபிராமி, புதிதாகத் துணிக்கடை ஒன்றைத் திறந்திருக்கிறார். ‘‘நான் காலேஜ் போறப்பெல்லாம் டிரஸ் எடுக்கப் போனா விதவிதமான ஆடைகளைப் பார்க்கிறப்ப எடுக்கத் தோணும். ஆனா அதன் விலை அதிகமா இருக்கும். நிறைய தடவை சும்மா பார்த்துட்டு மட்டும் திரும்பியிருக்கேன். அதனால ரொம்ப லாபம் வைக்காம, நல்ல துணிகளை எவ்வளவு குறைவாத் தர முடியுமோ அந்த விலையில தரணும்தான் ‘அபிராமி பிராண்டை’த் தொடங்கியிருக்கிறேன்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

தா சண்டை பிடித்துக்கொண்டிருந்த கணவனைப் பிரிந்து, கொஞ்ச நாள் அம்மா வீட்டில் இருந்தார் அந்த நகைச்சுவை நடிகை. சினிமா வாய்ப்பு தேடி வந்த அந்தக் கணவருக்கு வாய்ப்பேதும் அமையாத நிலையில், தினசரி செலவுக்கும் ஒருகட்டத்தில் சாப்பாட்டுக்குமே கஷ்டமாகிப் போய்விட, மறுபடியும் மனைவியைத் தேடி வந்தாராம். ’வேலைக்குப் போகலைனாலும் பரவால்ல, சண்டை போடாம இருந்தாச் சரி’ என்கிற நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் நடிகை.

கோவிட் ஊரடங்கு மன்னர் சீரியல் நடிகையின் கணவர் செய்து வந்த பிசினஸையும் பதம் பார்த்துவிட்டதில் அவருக்குப் பெரிய நஷ்டமாம். அதன் பாதிப்பு வீட்டுக்குள்ளும் எதிரொலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஓராண்டுக்கு முன்புதான் இவருக்குத் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு