Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சுமார் நான்காண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்தது மதன் – ரேஷ்மா ஜோடி.

பிரீமியம் ஸ்டோரி
‘செந்தூரப் பூவே’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரீநிதி சில ஆண்டுகளுக்கு முன் ஹீரோயினாக நடித்த படம் ஒன்று சமீபத்தில் சத்தமில்லாமல் ரிலீசாகியது.
ஸ்ரீநிதி
ஸ்ரீநிதி

‘தூங்கா கண்கள்’ என்ற அந்தப் படம் குறித்துக் கேட்டால், ‘‘அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி தொடங்கின படம். வரும் வரும்னு காத்திருந்து நான் டயர்டு ஆனதுதான் மிச்சம். அதனால ஒரு கட்டத்துல அந்தப் படத்தையே மறந்துட்டேன்’’ என்கிறார். இப்போதும்கூட படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

`புல்லட் ரிப்போர்ட்டிங்’ என்பது வட இந்திய மீடியாக்களில் இருக்கிற ஒரு விஷயம்தான். பைக்கில் ரவுண்ட் வந்தபடியே செய்திகளைத் தொகுத்து வழங்குகிற இந்த ஸ்டைல் ரிப்போர்ட்டிங்கைத் தமிழில் நியூஸ் 7 டிவியில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

நவீந்தர்
நவீந்தர்

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் நவீந்தரும் தொடர்ச்சியான நூறு நாள் ஒர்க் அவுட் ஒன்றில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த ஒர்க் அவுட் நவீந்தருக்கு ரொம்பவே பலன் தந்திருக்கிறதாம். பொங்கலுக்கு மறுநாள் நவீந்தர் வில்லனாக நடிக்கும் படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. ‘‘சினிமா மட்டுமல்ல, இப்ப சீரியல்லயும் வில்லிகளுக்குச் சமமா வில்லன்கள் வரத் தொடங்கியிருக்காங்க. அதனால சீரியல்லயும் நெகட்டிவ் ரோல்ல நடிக்க நான் தயார்தான்’’ என்கிறார்.

மதன் – ரேஷ்மா
மதன் – ரேஷ்மா

சுமார் நான்காண்டுகளுக்கும் மேலாகக் காதலித்து வந்தது மதன் – ரேஷ்மா ஜோடி. அந்தக் காதல் குறித்து வெளியில் தகவல் கசிந்துவிடாதபடி பார்த்துக்கொண்டது குறித்து ஆச்சரியப்படுகிறது ‘பூவே பூச்சூடவா’ யூனிட். எனவே அந்தச் செல்லக் கோபத்துடன் இப்போது ‘மச்சினிச்சியைக் கரெக்ட் செய்தவன்ப்பா’ எனக் கலாய்க்கிறார்களாம். சீரியலில் மதன், ரேஷ்மாவின் அக்கா கணவராக நடிக்கிறார்.

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

த்தியம் டிவியின் செய்தி வாசிப்பாளர் ராஜேஸ்வரி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் இவர் மெட்ரோ ரயிலில் அலுவலகம் செல்வது வழக்கம். மெட்ரோ ரயிலில் அருகில் பயணிக்கும் பயணிகள் ‘உங்க நியூஸ் ரீடிங் நல்லா இருக்கு’ எனப் பாராட்டுவதுடன், ‘நீங்க சீரியலுக்கு ட்ரை பண்ணலாமே’ என உசுப்பேத்தி விடுகிறார்களாம். சீரியல் ஆசை மனசுக்குள் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

ல்லாச் சங்கங்களுக்குமான தலைவர் தலையிட்டுப் பஞ்சாயத்து பண்ணின பிறகும்கூட டிவி நடிகர் சங்கச் சண்டைகள் முற்றிலுமாக ஓய்ந்தது மாதிரி தெரியவில்லை. ‘டிவி நடிகர் சங்கம் வேற எந்தச் சங்கத்துலயும் இருக்காதப்ப யார் யாரோ ஏன் இங்க வந்து பஞ்சாயத்து பண்ணணும்’ என்கிற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். ‘‘இதுக்குத்தான் முதல்லயே சொன்னேன், ‘என்னை யாரும் கூப்பிடாதீங்கப்பா, நான் நடுநிலையாகவே இருந்துக்கறேன்’னு. கேட்டாங்களா’’ என்றாராம் அந்தத் தலைவர்.

நடிகர் கட்சி தொடங்காததில் அந்தத் தொகுப்பாளினிக்குமே லேசான வருத்தமாம். நடிகரின் தீவிர ரசிகை என்பதால் நடிகர் வெளிநாட்டில் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்காக பூஜைகள் செய்தவர். ‘‘சினிமா போல அரசியல்லயும் ஒரு ரவுண்ட் வருவார்னு நம்பினேன், ஆனா இப்படி ஆகிடுச்சே’’ என மூக்கை உறிஞ்சுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு