Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

சம்யுக்தா
பிரீமியம் ஸ்டோரி
சம்யுக்தா

ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு `அபியும் நானும்’ சீரியல் மூலம் மீண்டும் சீரியல் ஷூட்டிங் செல்கிறார் ராஜ்கமல்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

ஒன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு `அபியும் நானும்’ சீரியல் மூலம் மீண்டும் சீரியல் ஷூட்டிங் செல்கிறார் ராஜ்கமல்.

Published:Updated:
சம்யுக்தா
பிரீமியம் ஸ்டோரி
சம்யுக்தா
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததும் வராததுமாக சம்யுக்தாவுக்கு அடித்திருக்கிறது லக். விஜய் சேதுபதி நடிக்கும் படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார்.
சம்யுக்தா
சம்யுக்தா

‘‘சீரியல், மாடலிங்னு இருந்தவரைக்கும் நான் எதிர்பார்த்த அளவுக்கு வளர முடியலை. ரீ என்ட்ரியா கிடைச்சிருக்கும் சினிமா வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கணும்’’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜா
ராஜா

சாலமன் பாப்பையா, ராஜா டீமின் பட்டிமன்றம் இல்லாத சன் டிவியின் பண்டிகை நாளே கிடையாது. புதுப்புதுச் சேனல்கள் வந்த பிறகு எத்தனையோ சேனல்கள் இவர்களை அழைத்த போதும், சன் டிவியை விட்டுச் செல்ல இவர்கள் மறுத்துவிட்டார்களாம். ‘`சேட்டிலைட் சேனல் தொடங்கப்பட்ட காலத்துல தொடங்கினது. காலம் மாறிடுச்சுதான். ஆனா இந்த ஒரு விஷயத்துல நாங்க மாற விரும்பல’’ என்கிறார் ராஜா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
குமரன்
குமரன்

ழை மற்றும் குளிர்காலங்களில், தான் வசிக்கும் பகுதியில் நடைபாதை ஓரங்களில் படுத்துறங்கும் வீடற்றவர்களுக்குப் பாய், போர்வைகளை வாங்கிக் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன். ‘‘என்னுடைய காசுல இருந்தே தொடங்கினேன். ஆனா இப்ப சில நண்பர்களும் இந்த முயற்சியில கை கோத்திருக்காங்க’ என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராஜ்கமல்
ராஜ்கமல்

ன்பது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு `அபியும் நானும்’ சீரியல் மூலம் மீண்டும் சீரியல் ஷூட்டிங் செல்கிறார் ராஜ்கமல். சினிமாவில் நடிக்க வேண்டுமென்பதற்காக ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியல் வாய்ப்புகளை இழந்தவருக்கு சினிமா எதிர்பார்த்த அளவு கைகொடுக்காததால் மீண்டும் டிவிக்குத் திரும்பியிருக்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

லையாள ‘பிக் பாஸ்’ - முதல் சீசனின் போட்டியாளரான தியாவின் கதையைப் படமாக எடுக்கவிருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தியா, கேரளாவின் முக்கியமான சமூகப் போராளிகளுள் ஒருவர். திருநங்கைகள் முதலான புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்காகப் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். படத்தில் தியாவின் கேரக்டரில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகி யிருப்பதாகக் கூறப்படுகிறது.

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

திருமண பந்தத்தின் மூலம் இரண்டு டிவி குடும்பங்கள் சம்பந்திகளான விஷயத்தில் நடந்த திருமணம் `காதல் திருமணம்’ என்றே பலரும் பேசி வருகிறார்கள். ஆனால் காதல் திருமணமில்லையாம். மேட்ரிமோனியல் மூலமே மணமக்கள் இருவரும் பரஸ்பரம் அறிமுகமானார்களாம். அங்கு பேசியதில் இருவருக்கும் மனப் பொருத்தம் உண்டான பிறகே பெரியவர்கள் பேசி முடித்திருக்கிறார்கள்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கொஞ்ச நாள்களாக வாய்ப்பு ஏதுமின்றி சும்மா இருக்கிற அந்தத் தொகுப்பாளினி, ‘‘என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது... என்னப் பத்தி பரபரப்பா ஏதாச்சும் நியூஸ் வரணும். அப்பத்தானே சான்ஸ் வரும்... இதெல்லாம்கூட நான்தான் சொல்லித் தரணுமா’’ என்று தன் தகவல் தொடர்பாளரைக் கடிந்து வருகிறாராம். ‘‘யோசிக்கறேன், வாரத்துக்கு ரெண்டு நியூஸ் வந்திடற மாதிரி பண்ணிடுவோம்’’ எனத் தலையாட்டியிருக்கிறாராம் தொடர்பாளரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism