Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிமோட் பட்டன்

தேவைப்பட்டா அவருக்குச் சின்னச் சின்ன உதவியைச் செய்றதுதான் என்னுடைய ரோல்’’ என்கிறார்.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியின் தயாரிப்புப் பொறுப்பு, மோனிகா குடும்பத்துக்குக் கிடைத்துள்ளது.
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘‘என் கணவருக்குக் கிடைச்சிருக்கிற வாய்ப்புங்க இது. தேவைப்பட்டா அவருக்குச் சின்னச் சின்ன உதவியைச் செய்றதுதான் என்னுடைய ரோல்’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மதுரை முத்துவைத் திக்குமுக்காட வைத்து விட்டதாம். ‘‘சேட்டிலைட் டிவி வந்த நாள்ல இருந்தே இருக்கேன். ஆனா இப்ப நம்மைப் பார்க்கிறவங்க எல்லாத்தையும் மறந்துட்டு இந்த ஷோவைப் பத்தித்தான் பேசறாங்க’’ என ஆச்சர்யப்படுகிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யக்குநர்கள் நடிகர்களாக மாறுவது சினிமாவைப் போல் சீரியலிலும் நடப்பதுதான். தான் இயக்கும் சீரியல்களில் ஹீரோ வேடத்தையும் ஏற்றுக்கொள்வது இயக்குநர் திருமுருகனின் வழக்கம். அந்த வரிசையில் தற்போது ’தெய்வம் தந்த வீடு’. ‘களத்து வீடு’ ஆகிய சீரியல்களை இயக்கிய அருள்ராசனும் ’ஈரமான ரோஜாவே’ தொடர் மூலம் நடிகராகியிருக்கிறார்.

டையில் பல புதிய சீரியல்களை ஒளிபரப்பத் தொடங்கிய கலைஞர் டிவியில் எல்லாவற்றையும் முடித்து விட்டார்கள். பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் நோக்கத்தில் தேர்தல் முடிகிற வரை சீரியல், ரியாலிட்டி ஷோ என எந்தப் பொழுதுபோக்கு அம்சங்களும் வேண்டாம் என்று இப்போது முடிவெடுத்திருக்கிறார்களாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சின்ன பிரேக் தேவைப்படுகிறதென சீரியல்களுக்கு ஓய்வு கொடுத்திருந்த `சின்னத்தம்பி’ பாவினி ரெட்டிக்குத் தெலுங்கில் சினிமா வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றனவாம்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சீரியல் நடிகை திடீரென இறந்த விவகாரத்தில் வட மாவட்டத்து அமைச்சருடைய மகனின் பெயரும் அடிபட்டது நினைவிருக்கலாம். ‘இவனை இப்படியே விட்டா நல்லதில்ல, உடனடியா கால்கட்டுப் போட்டாதான் சரியா வரும்’ என முடிவெடுத்த அமைச்சர், மகன் கல்யாணத்தை உறுதி செய்துவிட்டாராம். பிப்ரவரி முதல் வாரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறதாம்.

இரட்டைத் தலைமையால் கட்சிக்குள் குழப்பம் வருகிறதோ இல்லையோ, கட்சி நடத்தும் டிவியில் ஹெவியான குழப்பம் நிலவுகிறதாம். `யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவது’ என்பதில் ரொம்பவே சங்கடங்களைச் சந்திப்பதாகப் புலம்புகிறார்கள் ஊழியர்கள்.