Published:Updated:

விகடன் TV: ரிமோட் பட்டன்

ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் பட்டன்

கோவிட் சூழல்ல அடிக்கடி கூட்டம் சேர்க்க வேண்டாமேன்னு நேரடியா கல்யாணமே வச்சுட்டோம்’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

கோவிட் சூழல்ல அடிக்கடி கூட்டம் சேர்க்க வேண்டாமேன்னு நேரடியா கல்யாணமே வச்சுட்டோம்’ என்கிறார்.

Published:Updated:
ரிமோட் பட்டன்
பிரீமியம் ஸ்டோரி
ரிமோட் பட்டன்

‘நந்தினி’, ‘சாக்லெட்’ ஆகிய சீரியல்களில் நடித்த ராகுல் ரவிக்கு கடந்த வாரம் லஷ்மி நாயர் என்பவருடன் திருமணம் முடிந்துவிட்டதென தகவல் கிடைக்க, அவரிடமே கேட்டோம். ‘என்கேஜ்மென்ட்லாம் நடத்தல. கோவிட் சூழல்ல அடிக்கடி கூட்டம் சேர்க்க வேண்டாமேன்னு நேரடியா கல்யாணமே வச்சுட்டோம்’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்
விகடன் TV: ரிமோட் பட்டன்

‘குக் வித் கோமாளி’ அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்கலாமென தீபாவைத் தொடர்பு கொண்டால், ‘‘தம்பி, நிகழ்ச்சியிலிருந்து வெளியில வந்ததும், தெரியாத்தனமா ஒருத்தருக்குப் பேட்டி தந்துட்டேன். ‘அங்க கடைசி வரைக்கும் இருக்காம பாதியில வந்தவளுக்கு பேட்டி கேக்குதாக்கும்’னு என் வீட்டுல அப்படியொரு வார்த்தை கேட்டுப்புட்டாக. அதனால இனி அந்த ஷோவைப் பத்தி மூச்சே விடப்போறதில்லை’’ என்கிறார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

சென்னை அண்ணா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த தொகுப்பாளர் மகேஸ்வரி மதுரவாயல் பகுதியில் புதிதாக ப்ளாட் வாங்கிக் குடியேறியுள்ளார்.

விகடன் TV: ரிமோட் பட்டன்

பாலிமர் தொலைக்காட்சியில் புத்தாண்டிலிருந்து தொடங்கவிருக்கிற தமிழ் சீரியலில் ஹீரோயினாகக் கமிட் ஆகியிருக்கிறாராம் சஹானா. ‘‘2021 என்னை சீரியல் ஹீரோயினாக்கிடும்னு நம்பிக்கையோடு இருக்கிறேன். ஆனா இந்தச் சமயத்துல மறுபடியும் கொரோனா பேச்சு வந்து வயித்துல புளிகரைக்குது’’ என்கிறார். கடந்த ஊரடங்கில் முடித்து வைக்கப்பட்ட சீரியல்களில் சஹானா ‌நடித்து வந்த ‘அழகு’ தொடரும் ஒன்று.

விகடன் TV: ரிமோட் பட்டன்

யார்கிட்டயும் சொல்லாதீங்க!

சில மாதங்களுக்கு முன் ‘மின்னல்’ நடிகையை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று அவரது ‘பப்’ பாய் ப்ரெண்ட் அடித்த சம்பவம் நடந்தது. தற்போது மரணமடைந்த சீரியல் நடிகையும் ‘பப்’பில்தான் அந்த ஆண் நண்பரை அடையாளம் கண்டாராம். தொடரும் இதுமாதிரியான சம்பவங்கள் ‘பப்’புக்குச் செல்லும் சில நடிகைகளிடம் ஒருவிதக் கலவரத்தை உண்டாக்கியிருக்கிறதாம்.

‘கடைத் திறப்பு மாதிரியான நிகழ்ச்சியோ, விருந்தினராகக் கலந்துகொள்ள வேண்டுமோ எதற்கும் ஓ.கே தான், ஆனா சம்பளம் ஒன்றரை லகரத்துக்கு ஒரு பைசா குறையக் கூடாது’ எனக் கறார் காட்டுகிறார் ராணி நடிகை. ‘இது அதிகமாத் தெரியலையா’ என்றால் ‘‘என் குழந்தைகூட இருக்கக் கிடைக்கிற நேரத்தை விட்டுட்டு வர்றேன்ல?’’ என்கிறாராம்.

மீபத்தில் ஹீரோ மாறிய பிரைம் டைம் ஹிட் சீரியலில் இயக்குநரும் மாற்றப்பட்டுள்ளார். ‘ஹீரோ மாறிய பின் இயக்குநர் மாறினாரா, அல்லது, இயக்குநர் மாறியதால் ஹீரோ மாறினாரா’ என விசாரித்தால். ‘‘அந்த இயக்குநர்மீது கொஞ்ச நாளாகவே சேனலுக்கு அதிருப்தி இருந்து வந்தது. ‘நேரத்துக்கு புட்டேஜ் தர மாட்டார்’னு அவரைப் பத்திச் சொல்வாங்க. அதையெல்லாம்கூட சசிச்சுக்கிட்டுதான் இருந்தாங்க. ஆனால் சீரியலில் நடிக்கிற நடிகைகளை தாறுமாறான வார்த்தைகள்ல திட்டறதை அந்த இயக்குநர், நிறுத்தாததாலதான் வெளியேற்றப்பட்டார்’’ என்கிறார்கள். ‘தங்களைத் தரம்தாழ்ந்த வார்த்தைகளில் திட்டுகிறார்’ என சில மாதங்களுக்கு முன் தொடரின் நடிகைகள் சிலர் இந்த இயக்குநர்மீது போலீஸில் புகார் தந்தது குறிப்பிடத்தக்கது.