Published:Updated:

200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது! உயிர் தப்பிய பக்தர்கள்

ஜி.சதாசிவம்
200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது! உயிர் தப்பிய பக்தர்கள்
200 ஆண்டு பழைமையான ஊஞ்சல் மண்டபம் விழுந்தது! உயிர் தப்பிய பக்தர்கள்

ரூ.1.49 கோடியில் புனரமைக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை கிராமத்தில் பிரசித்திபெற்ற வேணுகோபால்சாமி கோயில் அமைந்துள்ளது. மிகப் பழைமையான இக்கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி புரனமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோயில் எதிரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் மண்டபம் கும்பாபிஷேகத்தின்போது ரூ.1 கோடியே 49 லட்சத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊஞ்சல் மண்டபத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் புகார் தெரிவித்ததின் பேரில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். ஆனால், சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோயிலில் தற்பொழுது புரட்டாசி மாத உற்சவம் நடந்து வருகிறது. இரவு சாமி வீதியுலா நடந்தபோது கோயில் அருகில் கட்டடம் இடிந்து விழுந்தது. இச்சம்பவம் இரவில் நடந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு ரூ.1 கோடியே 49 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மண்டபம் அதற்குள் இடிந்து விழுந்துள்ள சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.