Published:Updated:

சபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்!

சபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்!
சபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்!

சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்த 4 பெண்கள் இன்று ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சபரிமலையில் இருந்து ஒரே நாளில் திருப்பி அனுப்பப்பட்ட 4 பெண்கள்!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை கடந்த 17-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்று  கேரள மாநிலம் சேர்த்தலையைச் சேர்ந்த இணையதள செய்தியாளர் லிபி, ஆந்திராவில் இருந்து இரண்டு குழந்தைகளுடன் வந்த மாதவி ஆகியோர் பம்பை வராமல் திரும்பிச்சென்றனர். அதற்கு மறுநாளான 18-ம் தேதி லக்னோவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுகாசினி ராஜ், பக்தர்களின் மனதை புண்படுத்த விரும்பவில்லை என பாதியிலே திரும்பிச்சென்றார். அதற்கு அடுத்த நாளான 19-ம் தேதி கொச்சியைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா, ஆந்திரா பெண் பத்திரிகையாளர் கவிதா ஆகியோர் சபரிமலை கோயில் நடைப்பந்தல் வரை சென்று பக்தர்கள் எதிர்ப்பாலும், தந்திரிகள் நடை அடைப்போம் என கூறியதாலும் திரும்பிச் சென்றனர்.

அதே தினத்தில் மேரி ஸ்வீட்டி என்ற பெண் பம்பையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று கொல்லத்தை சேர்ந்த தலித் பெடரேசன் தலைவர் மஞ்சு சபரிமலை சன்னிதானம் செல்ல வேண்டும் என பம்பை காவல்நிலையத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டார். அவர் மீது சுமார் 13 வழக்குகள் உள்ளதாலும், மழை காரணமாகவும் மலை ஏற காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் இன்று ஆந்திராவைச் சேர்ந்த வசந்தி, ஆதிசேஷன், பாலம்மா ஆகிய பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் பாலம்மா தனக்கு 52 வயது என கூறிக்கொண்டு சபரிமலை நடைப்பந்தல் வரை வந்துவிட்டார். அவரது ஆதார் கார்டை பார்த்தபோது அதில் 46 வயது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோல மரக்கூட்டத்தில் ஒரு பெண் வந்துள்ளார் அவரை பக்தர்கள் தடுத்ததால் திரும்பிச் சென்றார். அவர் யார், எங்கிருந்துவந்தார் என்ற விபரம் வெளியாகவில்லை. இன்று ஒரே நாளில் சபரிமலைக்கு வந்த ஆந்திராவைச் சேர்ந்த 4 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.