Published:Updated:

திருவாரூரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் - தியாகராஜர் கோயில் சிலைகள் காப்பகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு!

திருவாரூரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் - தியாகராஜர் கோயில் சிலைகள் காப்பகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு!
திருவாரூரில் ஐஜி பொன்.மாணிக்கவேல் - தியாகராஜர் கோயில் சிலைகள் காப்பகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு!

திருவாரூரிலுள்ள பிரசித்திபெற்ற தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல்  ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இந்தப் பணிகளை  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இதுவரை தமிழகத்தில் காணாமல்போன  1500 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து மட்டும் சுமார் 150 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அதுபோல, 400 கோடி மதிப்பிலான சிலைகள் கடத்தப்படாமல் பாதுகாப்பாக உள்ளன. திருவாரூர் கோயிலில் உள்ள கல் தூண்களை ரன்வீர்ஷா  கடத்தியதாகப் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்படும். கடந்த மூன்று தினங்களுக்கு முன்புகூட, ரன்வீர்ஷா மீது வேலூரில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் ( ரன்வீர்ஷா )  ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தாலும், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறோம் .

 இதுவரை தமிழகம் முழுவதும் 395 சிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  87 சிலைகள் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, காப்பகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதுவரை ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவாரூரில் சிலைகள் மாயமானதாகப் புகார்கள் வரும்பட்சத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு