Published:Updated:

சபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு!

சபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு!
சபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு!

சபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு செங்கனூரில் ஏற்பாடு செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சபரிமலைக்கு ரயிலில் செல்லும் பக்தர்கள் தங்க செங்கனூரில் ஏற்பாடு!

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நடை திறக்கும் அன்றே பக்தர்கள் கூட்டம் அலைமோதும். வழக்கமாக பக்தர்கள் அதிக அளவில் தங்கும் பம்பை கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழையில் தகர்ந்து கிடக்கிறது. கழிப்பறை வசதிகூட முழுமையாக செய்யமுடியாத அளவுக்குதான் பம்பையின் நிலை உள்ளது. அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றால் பம்பை தாங்காது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள், தேவசம்போர்டு தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. ரயிலில் வரும் பக்தர்கள் செங்கனூரில் இறங்கி அதன்பிறகு சபரிமலை செல்வார்கள். எனவே, பக்தர்கள் செங்கனூரில் தங்குவதற்குத் தற்காலிக வசதி செய்யலாம் என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பம்பையிலும் நிலக்கல்லிலும் பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாகவும், சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.