Published:Updated:

வேலூர் கோட்டையில் ‘சூரசம்ஹாரம்!’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் கோட்டையில் ‘சூரசம்ஹாரம்!’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் கோட்டையில் ‘சூரசம்ஹாரம்!’ - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேலூர் கோட்டையில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர். 

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. புஷ்ப கமிஷன் வியாபாரிகள் உட்பட பல்வேறு சங்கங்களின் சார்பில் மார்க்கெட் பகுதியிலிருந்து பல்லக்கில் முருகப்பெருமான் கோட்டைக்கு பவனி வந்தார். பின்னர், சூரனை சம்ஹாரம் செய்தார். இந்த விழாவில், வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.

இதேபோல், வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் தீர்த்தகிரி மலையில் உள்ள வடிவேல் சுப்ரமணியர் சுவாமி கோயிலிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கந்தனுக்கு ஹரோஹரா... முருகனுக்கு ஹரோஹரா’ என்று கோஷம் முழுங்கி சுவாமியைத் தரிசனம் செய்தனர்.
கோயில்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.