Published:Updated:

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

சபரிமலை தீர்ப்பு சரிதானா?
பிரீமியம் ஸ்டோரி
News
சபரிமலை தீர்ப்பு சரிதானா?

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

க்களின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமான பழக்கவழக்கங்களையும் ஆன்மிக நம்பிக்கைகளையும் சட்டமும் நீதிமன்றமும் உரசிச்செல்கிற போதெல்லாம், அதிகளவில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன. இம்முறை, ‘சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாம், இந்த விஷயத்தில் பாலினப் பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. ‘இது பெண் விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்’ எனப் பெண்ணியவாதிகளில் ஒரு சாரார் இதைக் கொண்டாட, ‘மத நம்பிக்கைகளில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மறுசாரார் கூறுகின்றனர். பல்வேறு தரப்பினரின் பதிவுகள் இவை.

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்,  மூத்த நாட்டுப்புறக்கலைஞர்

“இதுக்கு முன்னாடி, கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாதுன்னு ஜெயலலிதா முதல்வராக இருந்தப்போ சட்டம் கொண்டுவந்தாங்க. அது தொடர்ந்துச்சா? கலாசாரமும் வழிபாடும் அரசியலமைப்புக்குள்ள வராது. ஜல்லிக்கட்டுக்குத் தடைபோட்ட பிறகு மொத்தத் தமிழ்நாடும் உணர்வுபூர்வமா எழுந்ததுக்கு இதுதான் காரணம். வழிபாட்டுமுறைக்கு யூனிஃபார்மிட்டி கொண்டு வரவே முடியாது. மண்ணோட மரபுகளில் சட்டம் தன் கையை வைக்கக்கூடாது. கேரள மக்களோட வழிபாடு மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் இது. தீர்ப்பை அவங்கதான் சொல்லணும்.’’

சபரிமலை தீர்ப்பு சரிதானா?
சபரிமலை தீர்ப்பு சரிதானா?

ஓவியா, சமூக ஆர்வலர்

“அரசியலும் ஆன்மிகமும் சமூகத்தின் இரண்டு அதிகார மையங்கள். இந்த இரண்டிலும் காலங்காலமாக பெண் தடுக்கப்பட்டு வருகிறாள். ஆன்மிகத்தைப் பொறுத்தவரை பெண்ணின் மாதவிடாயைக் காரணம்காட்டி ஒதுக்கி வருகிறார்கள். சென்ற தலைமுறைவரை வீட்டுக்குள்ளேயே ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெண்கள் தற்போது படிப்பு, வேலைவாய்ப்பு என்று முன்னேறி வருகிறார்கள். அதன் அடுத்தகட்டமாக அரசியலிலும் ஆன்மிகத்திலும் அவர்களுக்குரிய பங்கைக் கேட்கிறார்கள். ‘மாதவிடாய் வருகிற பெண் என்பதால் நீ கோயிலுக்குள் வரக்கூடாது’ என்று சொல்வது தீண்டாமையின் இன்னொரு வடிவம்தான். உச்சநீதிமன்றம் மிகச் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.”

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

வடிவுக்கரசி, நடிகை

“இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஆனா, சபரிமலைக்கு இருமுடி கட்டிப் போய் வந்தவள் என்ற உரிமையில் ஒரேயொரு கருத்தை மட்டும் சொல்லிக்க விரும்புறேன். ஷாப்பிங் மாலுக்குப் போகும்போது மாடர்னா டிரஸ் பண்ணிட்டுப் போகலாம். அதேபோல கோயிலுக்குப் போகும்போது அந்த இடத்துக்குத் தகுந்தாற்போல டிரஸ் பண்ணிட்டுப் போகணும்... அது எந்தக் கோயிலாக இருந்தாலும் சரி. ‘நான் சபரிமலைக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் போட்டுட்டுப் போவேன்’னு கிளம்பிடாதீங்க.”

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

எம்.என்.ராஜம், பழம்பெரும் நடிகை

“ஆண்கள் 48 நாள்கள் கடுமையா விரதம் இருந்து போற கோயில் அது. அங்கே இளவயதுப் பெண்களும் போகிறபோது சில ஆண்கள் மன உறுதி குலையும் வாய்ப்பு உண்டு. இதற்காகத்தான் பல காலங்களாகக் குறிப்பிட்ட வயதுப் பெண்களை அங்கே அனுமதிக்கவில்லை. ஆனா, இப்ப உச்ச நீதிமன்றமே அனுமதி கொடுத்திருக்கு. ஆண்கள் பொறுப்பா நடந்துக்கணும்.’’

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

ஸ்ரீப்ரியா,  நடிகை மற்றும் அரசியல்வாதி

“எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கு, இல்லைங்கிறதெல்லாம் தனிப்பட்ட விஷயம். ஆனா, ஐயப்பனை வணங்கணும்னு வர்றவங்களை மாதவிடாயைக் காரணம் காட்டி ஏன் தடுக்கணும்? கடவுளுக்கு முன்னாடி எல்லோருமே சமம்தான். ஐயப்பன் பக்தைகள் மனத்தூய்மையுடன் சபரிமலைக்குப் போயிட்டு வாங்க.’’

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

பன்னீர்செல்வம், குருசாமி

“அவர் பிரம்மச்சாரி தெய்வம். அதனாலதான் ஊருக்குள்ள இருக்காம, காட்டுக்குள்ள போய் யோக நிலையில் உட்கார்ந்திருக்கார். காட்டுப்பாதை, ரொம்பத் தொலைவு நடக்கணும். இதெல்லாம் லேடீஸுக்கு ரொம்ப கஷ்டம்.  நான் 28 வருஷமா சபரிமலைக்குப் போயிட்டு வர்றேன். குருசாமியாகவும் இருக்கேன். ஒரு குருசாமியா சொல்றேன்... சின்ன வயசு லேடீஸை நான் சபரிமலைக்குக் கூட்டிட்டுப் போகமாட்டேன்.’’

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

கிருஷ்ணவேணி அம்மாள், (சிறிய பிள்ளையார் கோயில் கட்டி, பூசாரியாகவும் இருக்கிறார்)

“சபரிமலைக்கு இருமுடி கட்டிப் போகணும்னா, 48 நாள் தொடர்ந்து விரதம் இருக்கணும். மாதவிடாய் நாள்களில் விரதம் இருந்தா பெண்கள் சோர்ந்து போயிடுவாங்க. அதுக்குத்தான் பெரியவங்க, சில இடங்கள்ல பெண்களை விலக்கிவெச்சிருக்காங்க. விரதம் இருக்காம ஐயப்பனைப் பார்க்கப்போனா, அது பிக்னிக் மாதிரி ஆயிடும்.”

சபரிமலை தீர்ப்பு சரிதானா?

மல்லிகா, பக்தை, அருப்புக்கோட்டை

“எனக்கு மாதவிடாய் நின்னதுக்கு அப்புறம்தான் சபரிமலைக்கு இருமுடி கட்டிப் போக ஆரம்பிச்சேன். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் மாதவிடாய் அசுத்தம்னு கடவுள் நினைக்க மாட்டார்;  மனுஷங்களும் அப்படிச் சொல்லக் கூடாதுங்கிறதுதான் என் கருத்து.”

ஆ.சாந்தி கணேஷ்