Published:Updated:

இந்திரன் சாப விமோசம் பெற்ற கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இந்திரன் சாப விமோசம் பெற்ற கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
இந்திரன் சாப விமோசம் பெற்ற கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர உறைந்திருக்கும் திருத்தலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். கன்னியாகுமரி அருகே அமைந்துள்ள இந்தத் தலத்தில்தான் இந்திரன் சாப விமோசனம் பெற்றார். அதனால்தான் இந்தப் பகுதிக்கு சுசீந்திரம் எனப் பெயர் வந்தது. அத்திரி முனிவர் தவம் செய்த தலம், அனுசுயா தேவி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி உணவளித்த தலம் எனப் பல சிறப்புகள் இக்கோயிலுக்கு உண்டு.

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மார்கழி மாத பெருந்திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. பத்து நாள்கள் நடக்கும் பெருந்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரளாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தாம் திருவிழாவான நாளை ஆருத்ரா தரிசனம் மற்றும் திரு ஆறாட்டு நிகழ்ச்சியுடன் மார்கழி மாத திருவிழா நிறைவுபெறுகிறது.