Published:Updated:

கொட்டும் மழையில் நடைபெற்ற நடராஜர் கோயில் தேர்த் திருவிழா - 3மணிநேரத்தில் நிலைக்கு வந்த தேர்!

கொட்டும் மழையில் நடைபெற்ற நடராஜர் கோயில் தேர்த் திருவிழா - 3மணிநேரத்தில் நிலைக்கு வந்த தேர்!
கொட்டும் மழையில் நடைபெற்ற நடராஜர் கோயில் தேர்த் திருவிழா - 3மணிநேரத்தில் நிலைக்கு வந்த தேர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும், ஆனி மாத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுசிறப்பாக நடைப்பெறும். இந்த ஆண்டு மார்கழி மாதஆருத்ரா தரிசன விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினம் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேர் திருவிழா நடந்தது.

இதனை முன்னிட்டு இன்று நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் 5சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் வைக்கப்பட்டு மேல வாத்தியங்கள் முழங்கிட தேர்த் திருவிழா தொடங்கியது. அப்பொழுது மழை பெய்தது. இதனால் நடராஜருக்கு வழக்கமாக பக்தர்கள் தீபாராதனை மற்றும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக தேர்நிலைக்கு வந்தவுடன் நடராஜர்  ஆயிரம்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மண்டகப்படி நிகழ்சிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

கொண்டும் மழையில் பக்தர்கள்  சிவ, சிவ கோஷங்கள் முழங்கிட வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  ஏராளமான பெண்கள் தேருக்கு முன்பாக கோஷமிட்டனர். சிவ பக்தர்கள் வாத்திய கருவிகள் முழங்கிட சிவ நடனம் ஆடியப்படி வந்தனர். கன மழைக்காரணமாக தேர் புறப்பட்ட 3 மணி நேரத்திலேயே நிலைக்கு வந்தது. அதன் பின்பு ஆயிரம்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி வைக்கப்பட்டு நாளை அதிகாலை மகாஅபிஷேகம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து சித்சபையில் பூஜைகள், ஆபரண அலங்கரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் முடிந்து மதியம் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைப்பெற உள்ளது. அப்பொழுது நடராஜர், சிவகாமசுந்தரி நடனம் ஆடியப்படியே பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.