Published:Updated:

பக்தர்கள் தொடர் போராட்டம் எதிரொலி! சபரிமலை சந்நிதானம் செல்லாமல் திரும்பிய பெண்கள்

பக்தர்கள் தொடர் போராட்டம் எதிரொலி! சபரிமலை சந்நிதானம் செல்லாமல் திரும்பிய பெண்கள்
பக்தர்கள் தொடர் போராட்டம் எதிரொலி! சபரிமலை சந்நிதானம் செல்லாமல் திரும்பிய பெண்கள்

சபரிமலையில் 45 வயதுக்கு கீழ் உள்ள இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிச் சென்றனர். பக்தர்கள் சரணகோஷ போராட்டம் நடத்துவதால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

பக்தர்கள் தொடர் போராட்டம் எதிரொலி! சபரிமலை சந்நிதானம் செல்லாமல் திரும்பிய பெண்கள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலை சந்நிதானம் செல்ல இன்று காலை 6.45 மணியளவில் பம்பையிலிருந்து மலை ஏறத்தொடங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தப் பெண்கள் மலை ஏறினர். மலை ஏறும் 45 வயதுக்கும் குறைவான இந்த இரண்டு பெண்களையும் ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்கியபடி தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். பெண்கள் வருகையை முன்னிட்டு சந்நிதானத்தில் பக்தர்கள் சரணகோஷ போராட்டம் நடத்துவதை அடுத்து அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கனக துர்கா என்ற பெண் உடல்நிலை ஒத்துழைக்காததால், மலை ஏறும் முயற்சியைப் பாதியிலேயே கைவிட்டு கீழே இறங்கினார்.

பக்தர்கள் தொடர் போராட்டம் எதிரொலி! சபரிமலை சந்நிதானம் செல்லாமல் திரும்பிய பெண்கள்

மலையேறும் பிந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஆதிவாசி மற்றும் பட்டியலின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மலை ஏறுகிறேன். சிலவிஷயங்களை வெளிப்படையாக பேசினால் ஆக்டிவிஸ்ட், மாவோயிஸ்ட் எனக்கூறி பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்காமல் இருப்பது சரியல்ல" என்றார். இந்த நிலையில், அப்பாச்சி மேடு பகுதிவரை சென்ற பிந்துவைப் போராட்டக்காரர்கள் மறித்து சரண கோஷங்களை எழுப்பினர். பக்தர்களின் தொடர் போராட்டம் காரணமாக, பிந்துவை போலீஸார் திரும்ப அழைத்துவர முடிவு செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய பிந்து, போலீஸார் தன்னை வலுக்கட்டாயமாக கீழே இறக்குவதாக குற்றம்சாட்டினார். 

கனக துர்காவுக்கு உடல்நிலை சரியில்லை என ஆம்புலன்ஸில் ஏற்றி பம்பைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அபாச்சிமேட்டு வரை சென்று பின்னர் பம்பைக்குத் திரும்பும் பிந்து நடந்து வரும்போது, பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக வனத்துறை வாகனத்தில் பம்பைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று சபரிமலை செல்ல முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதி அமைப்பினர் பம்பையிலிருந்து திரும்பினர். அதுபோன்று சபரிமலை செல்ல வந்த ஆதிவாசி அமைப்பைச் சேர்ந்த அம்மிணி எருமேலியில் இருந்து திரும்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.