Published:Updated:

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

Published:Updated:
திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

`இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், பலருக்கும் பல்வேறு காரணங்களினால் திருமணம் தடைப்படுகிறது. சிலருக்குப் பொருளாதாரப் பிரச்னைகள்,  வேறு சிலருக்கு சகல வசதிகள் இருந்தும் தோஷங் கள் - கிரக நிலை குறைபாடுகள் ஆகியவை, திருமணத் தடைப்பட காரணமாகிவிடும்.

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!

இப்படியான தடைகளும் தோஷங்களும் நீங்கி, கல்யாண பாக்கியம் கைகூடி, இனிய இல்லற வாழ்க்கை அமைவதற்கு அருள்செய்யும் பல வழிபாடுகளை ஞானநூல்கள் பலவும் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றுதான் சுயம்வரபார்வதி ஹோமம்.

திருமண வயதை அடைந்த பிறகும் சரியான வரன் கிடைக்காமல் தள்ளிப் போனாலும், திருமணத் தடை நீங்கவும், எந்த விதச் சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில்- பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது.

இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகத் தெரிகிறது. இந்த மந்திரங்கள், ‘அழகான துணை கிடைக்க வேண்டும்!’ என்கிற பொருளில் அமைந்தவை அல்ல. ‘உலகத்தில் உள்ள சகல விதமான அசையும்- அசையாப் பொருட்களின் சரீரத்தையும், மனதையும் என்னிடம் ஆகர்ஷணம் செய்வாயாக!’ என்றே இவை வேண்டுகின்றன.

தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. நாரதர், எப்படியாவது பார்வதியின் தவத்தை முடக்க முயன்றார். கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை மணந்தார்.

பார்வதிதேவிக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணையைக் கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம்.

வழக்கம் போல ஹோமத்தின் ஆரம்பத்தில் தெய்வ அனுகூலத்தையும், பெரியவர்களின் ஆசீர்வாதத்தையும், அனுமதியையும் பெறுவதற்கு அனுக்ஞை செய்ய வேண்டும். அடுத்ததாக ஹோமம் தடையில்லாமல் பூர்த்தி ஆவதற்கு விநாயகரை வேண்டிக் கொள்ளும் விக்னேஸ்வர பூஜை.

இதன் பிறகு சங்கல்பம். ஹோமத்தை எதற்காகச் செய்கிறோம், யாரைப் பிரார்த்தனை செய்து ஹோமம் செய்யப் போகிறோம் என்பதை விளக்கும் பூஜை.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ, அவரை முன்னிட்டுச் செய்யப்படும் இந்த சங்கல்ப மந்திரங்களின் அர்த்தம், ‘கெட்ட பலன்களைத் தரும் கிரக அமைப்பினாலோ, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ காரியங்களாலோ, முன்னோர்கள் எப்போதோ செய்த தவறுகளாலோ, இவருக்குத் திருமணம் தடைப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில், இன்ன ராசியில் பிறந்த இவருக்கு திருமணத் தடை நீங்கி, சுயம்வர பார்வதி- பரமேஸ்வரரின் அருள் பெற்று விரைவாகவும் உசிதமான காலத்திலும் திருமணம் நடைபெற இந்த ஹோமம் செய்கிறேன்’ என்பதே ஆகும்.

அடுத்து புண்யாகவாஜனம் செய்து ஹோமம் செய்யும் இடம், செய்பவரின் உடம்பு, ஆன்மா, பூஜா பொருட்கள் ஆகியவற்றை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதன் பிறகு பிரதான ஹோமம் தொடங்குகிறது. ஒரு புறம் அக்னி குண்டத்தை உருவாக்கிக் கொண்டு கும்பத்தில் தேவதைகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த ஹோமத்துக்கு சுயம்வர யந்திரத்தை கோலமாகப் போட்டு, அதன் மீது கும்பத்தை அமைப்பது சிறப்பு (இந்த யந்திரத்தை தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகத் தகடுகளில் உருவாக்கி, தாயத்தாக அணியும் வழக்கமும் இருக்கிறது!)

கும்பத்தில் வழக்கம் போல வருணன், பஞ்ச சாத்குன்ய தேவதைகள் போன்றவர்களை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். இது தவிர, இந்த ஹோமத்துக்கு என சிறப்பாக சுயம்வர பார்வதியை ஆவாஹனம் செய்யவேண்டும். இந்த ஆவாஹன மந்திரங்களுக்கான அர்த்தம், ‘மூன்று உலகங்களையும் வசீகரிக்கும் தேவியும், மூன்று உலகங்களிலும் இருக்கும் ஜீவராசிகள்- விஷ ஜந்துக்கள், சகல அரசர்கள், உலகத்தின் எல்லா ஆண்- பெண்கள் உட்பட இப்படி ஒட்டுமொத்தத்தையும் வசியம் செய்யும் வல்லமையுள்ள அந்த சுயம்வர பார்வதியை ஆவாஹனம் செய்கிறேன்’ என்பதாகும்.

இந்த ஹோமத்துக்கு அரச சமித்து, சர்க்கரைப் பொங்கல், நெய், குங்குமம் ஆகியவற்றை திரவியங்களாகப் பயன்படுத்துவார்கள். இவை தவிர, தாமரைப் பூவையும் சேர்த்துக் கொண்டு ஹோமம் செய்தால், ‘மனதுக்கு சந்தோஷத்தைத் தரக் கூடியவளும், தான் மனதில் நினைக்கும் காரியத்தைக் குறிப்பால் அறிந்து நிறைவேற்றக் கூடியவளும், இந்த சம்சார சாகரத்தை சந்தோஷமாகத் தாண்டுவதற்கு உறுதுணையாக இருக்கக் கூடியவளுமான பத்தினி கிடைப்பாள்’ என்கின்றன சாஸ்திரங்கள்.

சுயம்வர பார்வதி ஹோமம் செய்வதற்கான தியான மந்திரங்களின் அர்த்தம், ‘பார்வதிதேவி உதய கால சூரியனைப் போல் பிரகாசமாக இருக்கிறாள். அவள் கழுத்தில் இருக்கும் மாலையில் வாசமுள்ள மலர்கள் இருப்பதால், வண்டுகள் வட்டமிடுகின்றன. பார்வதிதேவி எந்த விதமான வேண்டுதலையும் சாதித்துக் கொடுக்கக் கூடியவள். எனது ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டு அவளை நமஸ்கரிக்கிறேன்.

வாசமுள்ள வனப்பூக்களை மாலையாக்கி பார்வதி கையில் தரித்திருக் கிறாள். அவள் சிவந்த நிறமுள்ள ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். எல்லோரது கண்களையும் மனசையும் ஆகர்ஷிப்பவளாக அவள் இருக்கிறாள். அவளது தோற்றமும் ரூபமும் அழகாக இருக்கிறது. ஆண்களையும் பெண்களையும் பரஸ்பரம் வசீகரித்து இணைத்து வைப்பதில் சாமர்த்தியம் மிக்கவளான அந்த தேவியை நான் வணங்குகிறேன்.

தங்க நிறமாக ஜொலிப்பவள் பார்வதிதேவி. வார்த்தைகளால் சொல்ல முடியாத நற்குணங்கள் கொண்டவள். அறுபத்துநான்கு கலைகளின் நாயகி அவள். தனது அழகினால் பரமேஸ்வரனை ஈர்த்தவள் அவள். இளமையும் அழகும் கொண்ட அவள் இந்த உலகத்தையே வசியம் செய்யக் கூடியவள். என்ன வேண்டும் என்று பக்தர்கள் கேட்பதற்கு முன்பாகவே தேவைகளை அறிந்து, வேண்டும் பொருட்களை வழங்குபவள் அவள். அந்த சக்தி படைத்த தேவியை நான் வணங்குகிறேன்.

அழகான முகமும் கண்களும் கொண்ட பார்வதிதேவி, எல்லோருக்கும் உணவளிக்கும் அன்னபூரணியாக விளங்குகிறாள். அழகான ஆடை அணிந்து, தலையில் சந்திரக் கலை அணிந்து, நெற்றியில் குங்குமம் தரித்து, கையில் ஈட்டி போன்ற ஆயுதங்களைத் தரித்து, ஒரு கையில் அபய முத்திரை காட்டி, ஆதிமூர்த்தியான பரமேஸ்வரனின் மடியில் அமர்ந்திருக்கிறாள் பார்வதிதேவி. சகல திருமணங்களுக்கும் அவள்தான் அருள்பாலிக் கிறாள். திருமணத் தடைகளை நீக்குபவளான அவ ளது அருளை வேண்டுகிறேன்.’

சுயம்வர பார்வதி ஹோமம் முடிந்த பிறகு, ஹோமத் திரவியமாகப் பயன்படுத்திய குங்குமத்தில் மீதியை எடுத்து வைத்து ஒரு மண்டல காலத்துக்கு தினமும் இட்டு வந்தால், திருமணத் தடை நீங்கி சீக்கிரமே நல்ல துணை கிடைக்கும்!

`வித்யாவாரிதி’ சுப்ரமணிய சாஸ்திரிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணத் தடை நீக்கும் சுயம்வர பார்வதி ஹோமம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism