மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று. கலையம்சத்துடன் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயில், தமிழர்களின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தக் கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். ஆனால், உள்ளூர் பக்தர்கள் புறக்கணிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ஒரு காலத்தில், மதுரை நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள்… திருமணம், தாலி பெருக்குதல், நிச்சயதார்த்தம், காதுகுத்து என அனைத்து சுபகாரியங்களையும் மீனாட்சி அம்மன் கோயிலில்தான் நடத்தி வந்தனர். ஆனால், தற்போது உள்ளூர் பக்தர்கள் சாமி கும்பிடக்கூட வர முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இத்தகைய நிலைக்குக் காரணம், கோயில் நிர்வாகத்தின் அலட்சியம்தான் என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் முத்துக்குமார், “மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் எளிமையாகச் சென்றுவர முடியவில்லை. உலகமே வியந்து பார்க்கும் மீனாட்சியம்மன் கோயிலில், ‘கட்டுப்பாடு’கள் என்ற பெயரில் பக்தர்களுக்குப் பல சிரமங்களை ஏற்படுத்துகிறது கோயில் நிர்வாகம். கிழக்கு கோபுரம் வழியாக மாற்றுத்திறனாளிகள் செல்லக்கூடிய பாதையை மறைத்துவிட்டனர். கோயிலைச் சுற்றிக் கடைகள் அதிகரித்திருப்பதால், பக்தர்கள் உட்கார்வதற்குக்கூட இடம் இல்லை. வருமானத்தை மட்டும்தான் குறிக்கோளாக வைத்திருக்கிறது கோயில் நிர்வாகம். பக்தர்களின் நலனைக் கருத்தில் கொள்வதேயில்லை.

நான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்தான், செல்போன் பாதுகாப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதையும் கோயில் நிர்வாகம் முறையாகச் செயல்படுத்தவில்லை. கட்டணம் வசூலிக்கும் இடத்தில் குறைந்த ஆட்களே பணியில் இருப்பதால், கால் மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் பல மணி நேரங்கள் கால் கடுக்கக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனாலேயே பலர் தரிசனம் செய்யாமல் திரும்பிவிடுகிறார்கள். அதேபோல, கோயிலில் வழங்கப்படும் அன்னதானம், கோயிலில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. பக்தர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோயிலில் பாதுகாப்புக்கு இருக்கும் காவல்துறை யினர், கைகளால் உடலைத் தொட்டுப் பரிசோதனை செய்து பக்தர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்து கிறார்கள். இப்படிப் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதால்தான் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவதேயில்லை” என்றார்.

இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், “மீனாட்சியம்மன் கோயில் தற்போது முழுமையான வியாபாரத் தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் மாறிவிட்டது. பணம் வாங்கிக்கொண்டு ‘வி.ஐ.பி தரிசனம்’ என்ற பெயரில் பணம் படைத்தவர்களை மட்டும் அதிக அளவில் அனுமதிப்பதால், சாதாரண பக்தர்கள் பொது தரிசனத்தில் விரைவாக சாமி தரிசனம்செய்ய முடிவதில்லை. பணம் இருந்தால் மட்டும்தான் சாமியைப் பார்க்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. பணம் கொடுத்தால்தான் அர்ச்சகர் தீபாராதனைத் தட்டைக் காட்டி விபூதி கொடுக்கிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலில் முதலுதவி சிகிச்சைக்கு எந்த ஏற்பாடும் இல்லை. கடந்த மாதம் கோயிலுக்கு வந்த பெண் ஒருவர் நெஞ்சு வலியால் இறந்துவிட்டார். அதன் பிறகும் நடவடிக்கைகள் இல்லை.

கோயிலில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால், பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள்குறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் பேசினோம். ‘‘கோயிலுக்குப் பக்தர்கள் வருவதில் எந்தச் சிரமமும் இல்லை. தரிசனம் செய்வதிலும் தாமதம் ஏற்படுவதில்லை. உள்ளூர் பக்தர்கள் வருவது இல்லை என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓர் ஆன்மிகத்தலம் மட்டுமல்ல. அது, தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டுடன் இணைந்த விஷயம். அதனால் இடையூறுகள், சிரமங்கள் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதைக் கோயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பக்தர்களின் விருப்பம்!

- அருண் சின்னதுரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்