சமீபகாலமாக, தமிழகக் கோயில்களில் நடந்த பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. அந்த ஊழல் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறது, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலின் தங்க ரதம் செய்ததில் நடந்ததாகக் கிளம்பியிருக்கும் ஊழல் புகார்.

இந்துக்களின் புனிதத் தலங்களில் காசிக்கு நிகராக விளங்குகிறது, ராமேஸ்வரம். இங்குள்ள ராமநாத சுவாமி கோயில், சுமார் 600 ஆண்டுகள் பழைமையானது. இந்தக் கோயிலின் உற்சவருக்காக உருவாக்கப்பட்ட தங்க ரதத்தில் ஊழல் நடந்ததாகத் தற்போது புகார் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து தமிழகத் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவையின் நிர்வாகி பக்ஷி சிவராஜன் நம்மிடம் பேசினார். “ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் முக்கிய நாள்களில் வீதி உலா செல்வதற்காகத் தங்கப் பல்லக்கு, வெள்ளி ரதம் மற்றும் தங்கம், வெள்ளி போன்றவற்றால் செய்யப்பட்ட வாகனங்கள் பலவும் உள்ளன. இந்த நிலையில் 1986-ம் ஆண்டு இந்தக் கோயிலுக்குத் தங்க ரதம் செய்யத் திட்டமிடப்பட்டு, கடந்த 2001-ம் ஆண்டு பணிகள் முழுமை பெற்றன. கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வரும் வகையில் 18 அடி உயரத்தில் தங்க ரதம் செய்யப்பட்டுள்ளது.

சிவ ஆலயங்களில் எட்டு தூண்கள் கொண்டுதான் தேர் செய்ய வேண்டும். ஆனால், இந்த ரதத்தில் ஆறு தூண்கள் மட்டுமே உள்ளன. மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மா சிலை, வெள்ளியில் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி கொண்டு அமைக்கப்பட்ட ரதத்தின் மையப் பகுதி சிறியதாக இருந்ததால் விக்கிரகத்தை வைக்க முடியவில்லை. அதனால், பர்வதவர்த்தினி அம்மனுக்கான தேராக மாற்றப்பட்டது. பக்தர்கள் வேண்டுதல் நாளில் இரண்டாயிரம் ரூபாய் செலுத்தித் தங்கத் தேர் இழுத்து வந்தனர். ஆனால், ரதம் செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் அதன் சக்கரங்கள் முறிந்து போயின. மீண்டும் ‘பெல்’ நிறுவனத்தின் மூலம் இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தங்க ரதத்துக்காக ஒதுக்கப்பட்ட 16.5 கிலோ தங்கம் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. ரதத்திலிருந்த தங்கப் பட்டைகள் உரிந்ததை வைத்தே அதைத் தெரிந்துகொள்ளலாம். தங்கப் பட்டைகளைத் தேரில் இணைக்கப் பித்தளை ஆணிகளைப் பயன்படுத்தியுள்ளனர். ரதத்தின் கழுத்துப் பகுதியில் தங்கப் பட்டைகளைப் பொருத்தாமல் தங்க நிற வர்ணம் பூசியுள்ளனர். மூசு தங்கம் எனப்படும் 24 காரட் தங்கத்தைப் பயன்படுத்திப் பாரம்பர்ய முறையில் காற்றுப் புகாத வகையில் பணிகளைச் செய்யாததால், உப்புக் காற்றால் தங்க ரதம் பச்சை நிறத்துக்கு மாறியுள்ளது. நிறம் மாறியதால், பத்து ஆண்டுகளாகப் பிரகார உலா நிறுத்தப்பட்டு அறையில் முடக்கப்பட்டுள்ளது.

தங்க ரதம் குறித்து தகவல் உரிமை சட்டப்படி விவரங்கள் கேட்டதற்கு, ‘தங்க ரதம் பற்றிய ஆவணங்கள் நகல் எடுக்க முடியாத நிலையில் சேதமடைந்து உள்ளன’ என்று பதில் கொடுத்துள்ளது, கோயில் நிர்வாகம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியிலான வாகனங்கள் பழைமை மாறாமல் இருந்து வருகிற நிலையில், 20 ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில் தங்க ரதம் நிறம் மாறியுள்ளது. இதனால்தான் தங்கரதம் அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது என்று புகார் எழுப்புகிறோம். ரதத்தைச் சீரமைத்து உலா வர ஏற்பாடு செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, ராமநாத சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் பேசினோம். ‘‘நான் இங்கு பொறுப்பேற்று சில நாள்களே ஆகின்றன. கோயிலுக்குச் சொந்தமான பொருள்கள்குறித்த ஆவணங்களைப் பார்த்து ஒவ்வொன்றுக்கும் வரிசைக் கிரமமாகப் பொறுப்பேற்று வருகிறேன். தங்க ரதத்துக்கு நான் இன்னும் பொறுப்பேற்கவில்லை. தங்க ரதம், பூஞ்சணம் படர்ந்து நிறம் மாறியுள்ளது உண்மைதான். அதை பாலீஷ் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். தங்க ரதம் நிறம் மாறியதற்கான காரணம் என்னவென்று எனக்குக் தெரியவில்லை. ரதத்தின் குறைகளைக் களைந்து சீர்செய்து, விரைவில் தங்கத் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

சிவன் சொத்து குல நாசம் என்பது பக்தர்களின் நம்பிக்கை... புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி