Published:Updated:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தரிசனம்!

ஐஸ்வர்யா

ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோயிலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தரிசனம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரஜினி மகள் ஐஸ்வர்யா தரிசனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம் செய்தார்.

 நடிகர் தனுஷ், நடிகை சினேகா நடித்துவரும் புதிய திரைப்படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவருகிறது.  படப்பிடிப்பை தனுஷின் மனைவியும், நடிகர் பிரசன்னா ஆகியோர் பார்வையிட வந்தனர்.

அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற பட்டாச்சாரியார்கள் ஆண்டாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்றனர். ஐஸ்வர்யா மற்றும் பிரசன்னா ஆகியோர், சுமார் அரை மணி நேரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே உள்ள யானைக்கு பழங்களைக் கொடுத்த பின், மணவாள மாமுனிகள் சமாதிக்குச் சென்றனர். அதன் பின்னர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் இருவரும் ஆசி பெற்றனர். இவர்கள் கோயிலுக்கு வருவதை அறிந்த பக்தர்கள் பலர் கோயிலுக்கு முன் கூடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு ஏற்பட்டது.