Published:Updated:

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

ஊழல் புகாரில் மருதமலை கோயில்!

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

ஊழல் புகாரில் மருதமலை கோயில்!

Published:Updated:
அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

‘‘ஜெயலலிதா கொண்டுவந்த முக்கிய திட்டமான அன்னதானத் திட்டத்தில் மருதமலை முருகன் கோயிலில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இதை ஆள்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை’’ என்று புகார் வாசிக்கிறார்கள், முருக பக்தர்கள்.

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

கோயம்புத்தூரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, மருதமலை சுப்பிரமணிய சாமி கோயில். இந்தக் கோயிலில் தமிழக அரசின் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தினமும் 100 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில்தான் தற்போது முறைகேடு என்று புகார் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “கோயில் அன்னதானத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், பி.என்.புதூர் கூட்டுறவுப் பண்டகசாலையில்தான் வாங்கப்படுகின்றன. இவையெல்லாமல், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தினமும் அரிசி, நெய் என்று ஏராளமான பொருள்களை அன்னதானத் திட்டத்துக்கு உபயமாக வழங்கி வருகிறார்கள். இப்படிக் கிடைக்கும் பொருள்கள் போக, மேற்கொண்டு தேவைப்படும் பொருள்களை மட்டும்தான் வெளியில் வாங்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் உபயமாக வரும் பொருள்களையும் விலைக்கு வாங்கியதாகப் பொய்க்கணக்கு எழுதி ஏராளமான பணத்தைச் சுருட்டி வருகிறது, கோயில் நிர்வாகம். கூட்டுறவுச் சங்கங்கள், ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள்” என்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

சமூக ஆர்வலர் தியாகராஜன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், அன்னதானத் திட்டத்துக்காக மளிகைப் பொருள்கள் வாங்கப்பட்டதற்கான பில்கள் குறித்து சில தகவல்களைப் பெற்றிருக்கிறார். அதுகுறித்து நம்மிடம் பேசிய தியாகராஜன், “மருதமலை கோயில் நிர்வாகத்திலும் பி.என்.புதூர் கூட்டுறவுப் பண்டக சாலையிலும் நான் பில்களைக் கேட்டிருந்தேன். கோயில் நிர்வாகம் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலையின் தரப்பில் ஒரே எண்ணைக்கொண்ட பில்களைத்தான் கொடுத்துள் ளனர். ஆனால், கோயில் தரப்பில் வழங்கப்பட்ட பில்களில் உள்ள தேதிகளும் கூட்டுறவுப் பண்டக சாலைத் தரப்பில் வழங்கப்பட்ட பில்களில் உள்ள தேதிகளும் வேறுபடுகின்றன. இதிலிருந்தே இதில் பெரிய அளவில் முறைகேடு நடப்பது உறுதியாகத் தெரிகிறது. முறைகேடு செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

சுப்பிரமணிய சாமி கோயில் செயல் அலுவலர் மேனகாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, “உபயமாக வரும் பொருள்களைக் கழித்துவிட்டு, ஒவ்வொரு மாதமும் எங்களுக்குத் தேவைப்படும் பொருள்களைத்தான் வாங்குகிறோம். கூட்டுறவுப் பண்டக சாலைக்குக் காசோலை மூலமாகத்தான் பட்டுவாடா செய்கிறோம். அனைத்துக் கணக்கு களையும் முறையாக வைத்துள்ளோம். தவறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல் சரியான விலையில் பொருள்களை விற்பனை செய்யும் அங்காடிகளில் மட்டும்தான் நாங்கள் பொருள்களை வாங்கி வருகிறோம்” என்றார்.

அன்னதானத்தில் ‘கை’ வைக்கும் அதிகாரிகள்!

பி.என்.புதூர் கூட்டுறவுப் பண்டக சாலையின் செயலாளர் விஜயாவிடம் பேசினோம். “கோயில் நிர்வாகம் கேட்கும் பொருள்களை மட்டும்தான் வழங்கி வருகிறோம். கணக்குக் காட்டுவதில் பிரச்னை இருக்கக் கூடாது என்பதற்காகத் தேதியைக் குறிப்பிடாமல் பில் அனுப்புவோம். கோயிலிலிருந்து செக் வந்தபிறகு எங்கள் பில்களில் தேதியைக் குறிப்பிட்டுக்கொள்வோம். நாங்கள் மருதமலை கோயில் மட்டுமல்லாமல், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உள்பட நான்கு கோயில்களுக்கு அன்னதானத்துக்கான பொருள்களை வழங்கி வருகிறோம். மற்றக் கோயில்களில் உபயமாக வரும் பொருள்களைக் கழித்துவிட்டுத்தான், பர்சேஸ் ஆர்டர் கொடுக்கிறார்கள். ஆனால், மருதமலை கோயிலில் அப்படி வழங்குவதுபோல எங்களுக்குத் தெரியவில்லை” என்றார்.

என்ன நடக்கிறது என்பது அந்த சுப்பிரமணிய சாமிக்குத்தான் வெளிச்சம்!

- இரா.குருபிரசாத், படங்கள்: கே.அருண்