Published:Updated:

`கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்!' - பாவக்காய் மண்டபப் பெருமை சொல்லும் வில்லாபுரத்துக்காரர்கள்

`கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்!' - பாவக்காய் மண்டபப் பெருமை சொல்லும் வில்லாபுரத்துக்காரர்கள்
`கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்!' - பாவக்காய் மண்டபப் பெருமை சொல்லும் வில்லாபுரத்துக்காரர்கள்

`கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்!' - பாவக்காய் மண்டபப் பெருமை சொல்லும் வில்லாபுரத்துக்காரர்கள்

சித்திரைத் திருவிழாவில், மூன்று நாள்கள் மாசி வீதி சுற்றிய மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும், நாளை (வியாழக்கிழமை)  மாசி வீதி வலம் வராமல், நேராக கோயிலுக்குத் தெற்கில் உள்ள வில்லாபுரம் கிராமத்துக்குச் செல்கின்றனர். அங்கே, பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அதென்ன பாவக்காய் மண்டபம்... வில்லாபுரத்துக்கு அப்படியென்ன சிறப்பு. ஏன் அங்கே அம்மையப்பர் எழுந்தருள வருகின்றனர்?

`கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்!' - பாவக்காய் மண்டபப் பெருமை சொல்லும் வில்லாபுரத்துக்காரர்கள்

பழைய காலங்களில் வில்வமரங்கள் நிறைந்த பகுதியாய் இருந்தது வில்வபுரம். பின்னாளில் வில்லாபுரம் ஆகிவிட்டது. இந்தப் பகுதியில் வாழ்ந்துவந்த மக்கள், மீனாட்சிக் கோயில் இறைவனுக்கு நாள்தோறும் வில்வ இலை வழங்கி இறைத்தொண்டு புரிந்துவந்துள்ளனர். மன்னர் காலத்தில் இங்கே போர்ப்படைகள் இருந்துள்ளன. இன்றும் அதன் சான்றாய் `ஆனைகட்டிமேடு' உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த அழகப்பிள்ளை தானப்பிள்ளை என்ற இருவரும் மன்னர்களிடம் போர்ப்படை சேனாபதிகளாக இருந்துள்ளனர். இந்த வில்லாபுரம் கிராமத்துக்கு இத்தனை பெருமைகள் உண்டு.

கோயிலின் தெற்குக் கோபுரத்தை எழுப்புவதற்காக, இங்கே மண் எடுத்து கண்மாய் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. கோயில் பணிக்கு ஒத்துழைத்த இந்த மக்களுக்கு மரியாதை செய்ய வேண்டுமே, 'எங்கள் மண்டபத்துக்கு இறைவனும் இறைவியும் வந்திருந்து அருள்புரிய வேண்டும்' எனக் கோரினர் அம்மக்கள். 400 ஆண்டு காலப் பழைமை என்று சொல்லப்படுகின்ற இந்த மண்டபத்தில், இன்று வரையிலும் இந்தப் பாரம்பர்யம் தொடர்கின்றது. சித்திரைத் திருவிழாவின் வீதியுலாக்களில், முதல் மூன்று நாள்களுக்கு கோயிலுக்குள் இருக்கும் மண்டபங்களில் அம்மையப்பர் எழுந்தருளி காட்சிதருவார். கோயிலுக்கு வெளியே செல்லும் வகையில் அமைந்த நான்கு மண்டகப்படிகளில் முதல் மண்டகப்படியாய் இங்கே வருகைபுரிகின்றனர் ஈசனும் உமையம்மையும். அதுவும், காலைமுதல் மாலை வரையிலுமென நாள்முழுவதும் தங்குகின்றனர்.

``எங்க தாயி மீனாட்சியும் ஈஸ்வரனும், எங்க ஊரு மண்டபத்துக்கு வந்து ஆசி வழங்குறது எங்களுக்கு கிடைச்ச புண்ணியம். இன்னைக்கி முழுக்க அழகப்பிள்ளை தானப்பிள்ளை வகையறா, ஒரு 350 தலைக்கட்டு ஆளுங்க இங்க கூடிருவோம். பல்லாயிரக்கணக்கில மக்கள் கூட்டம் வரும். அன்னதானம் வழங்குவோம். மூணு வருஷத்துக்கு முன்புவரைக்கும், பக்தர்களை உட்காரவைச்சு அறுசுவை விருந்து போட்டோம். இப்போலாம் தேர்தல் காலம் ஆயிட்டதனால, வெறுமனே தொன்னை வச்சி சித்ரான்னம்தான் தர்றோம். யாரும் கட்டுப்படுத்தலைன்னாலும் ரூல்ஸை மதிக்கணும்ல. கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத உரிமையும் பெருமையும் எங்க ஊருக்குக் கிடைச்சிருக்கு" என்று சிலாகிக்கிறார், வகையறாக்களில் ஒருவரும் மூத்தவருமான தனசேகரன்.

அக்காலங்களில் பாகற்காய் விளைச்சல் இங்கு அதிகம். இங்கு வரும் இறைவனுக்கு பாகற்காய் படைத்து வழிபட்டனர். இன்றும் சம்பிரதாயமாக இது தொடர்கின்றது. உடம்புக்கு மருந்தாகவும் உணவாகவும் இருக்கின்ற இந்தப் பாகற்காயை வைத்து வழிபடுவதால், இதற்குப் பாவக்காய் மண்டபம் எனப் பெயராம். இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, இன்றைய நாளில் ஈசன், மருந்தீசராக வருகிறார். அவரை இந்த நாளில் வழிபட்டால், நம் மனநோய், உடல்நோய் அகலும் என்பது ஐதீகம்! மேலும், பாவக்காய்க்கு இன்னொரு அர்த்தமும் வழங்கப்படுகிறது. நம் பாவங்களையெல்லாம் காய்க்கச் செய்ய வருகின்றாராம், இறைவன்.

பசியும் பிணியும் பகையும் நீங்க. பாவக்காய் மண்டபம் வாங்க. மதுரை சொக்கன் மருந்தீஸ்வரனாய் அருள்கிறான்!.

அடுத்த கட்டுரைக்கு