Published:Updated:

தூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்!

இ.கார்த்திகேயன்
தூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்!
தூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்!

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. நேற்று தேர்தல் நாள் என்பதால் வழக்கமாகக் காணப்படும் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.  

தூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்!

தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற ஸ்ரீசங்கரராமேஸ்வரர் உடனுறை பாகம்பிரியாள் திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.  

தூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்!

இந்தத் திருவிழா நாள்களில் தினமும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று வருகிறது. தினமும் மாலையில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான கடந்த 11-ம் தேதி திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும்விழா நடைபெற்றது. 7-ம் நாள் திருவிழாவான கடந்த 15-ம் தேதி காலை நடராஜப் பெருமானுக்கு உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் சித்திரைத்திருவிழா தேரோட்டம் - தேர்தலால் குறைவாக காணப்பட்ட பக்தர்கள் கூட்டம்!

10-ம் நாள் திருவிழாவான நேற்று காலை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி சங்கரராமேஸ்வரர் மற்றும் அம்பாள் பாகம்பிரியாள் பெரிய தேரிலும், சிறிய தேரில் விநாயகரும், முருகனும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. யானை அணிவகுக்க கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் தேர் வலம் வந்தது. நேற்று தேர்தல் நாள் என்பதால் வழக்கமாகக் காணப்படும் பக்தர்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.