Published:Updated:

இணை ஆணையர், 5 பேர் மீது வழக்கு பதிவு! - திருச்செந்தூர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் திருப்பம்

இணை ஆணையர், 5 பேர் மீது வழக்கு பதிவு! - திருச்செந்தூர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் திருப்பம்
இணை ஆணையர், 5 பேர் மீது வழக்கு பதிவு! - திருச்செந்தூர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் திருப்பம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மூலவர் சந்நிதிக்கு எதிரே உள்ள மயில் சிலையை மாற்றிய விவகாரம் தொடர்பாக இக்கோயிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி உட்பட 6 பேர் மீது காவல் நிலையத்தில் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இணை ஆணையர், 5 பேர் மீது வழக்கு பதிவு! - திருச்செந்தூர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் திருப்பம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமி சந்நிதிக்கு எதிரே நந்தி சிலையும், இந்திர, தேவ மயில் சிலைகளும் உள்ளன. இதில், தேவ மயில் சிலை, கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி இரவு, அர்த்தசாம பூஜை முடிந்து கோயிலின் நடைசாற்றப்பட்ட பிறகு, சிசிடிவி கேமராக்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இரவோடு இரவாக மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக வேறு மயில் சிலையை  வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதே மாதம் 19-ம் தேதி, மாற்றி வைக்கப்பட்ட மயில் சிலையை எடுத்துவிட்டு மீண்டும் பழைமையான மயில் சிலையை அதே இடத்தில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார் எழுந்தன. இவ்விவகாரம் பூதாகரமாகவும் வெடித்தது. இந்நிலையில், ``அறநிலையத்துறை ஆணையரின் உரிய அனுமதி மற்றும் உத்தரவு இல்லாமல் சிலையை மாற்றிய விவகாரம் குறித்தும், இதுதொடர்பாக இக்கோயிலின் அப்போதைய இணை ஆணையர் பரஞ்ஜோதி, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிலையை எடுக்கும்போது மயிலின் தலைப்பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதை மறைக்க வெள்ளைத்துணியால் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளது” எனக்கூறி, ஆன்மிக ஆர்வலர் ரங்கராஜன் என்பவர்,  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.

இணை ஆணையர், 5 பேர் மீது வழக்கு பதிவு! - திருச்செந்தூர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் திருப்பம்

இச்சம்பவம் நடந்து 10 மாதம் கழித்து விசாரணை செய்த அதிகாரி திருமகள், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தாமல், சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளார். அதன் பின்னரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நேரடியாக பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அவரிடம் இவ்விவகாரம் குறித்த அறிக்கையை முன்னாள் இணை ஆணையர் பாரதி சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் அறிவுறுத்தலின் பேரில், கோயிலின் முன்னாள் இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருமேனி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜா, குமார், சுரேஷ் ஆகியோர் மீது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தென்னரசன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோயில் காவல்நிலையத்தில்  குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan