Published:Updated:

திருச்செந்தூர்: முதியவர்களுக்கு இலவச விரைவு தனி தரிசனப் பாதை; திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 60 வயதைக் கடந்த முதியவர்கள், விரைவாக சுவாமி தரிசனம் செய்திட ஒரு வாரத்தில் இலவச தனி தரிசனப் பாதை தொடங்கப்பட உள்ளது என, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

திருச்செந்தூர்: முதியவர்களுக்கு இலவச விரைவு தனி தரிசனப் பாதை; திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 60 வயதைக் கடந்த முதியவர்கள், விரைவாக சுவாமி தரிசனம் செய்திட ஒரு வாரத்தில் இலவச தனி தரிசனப் பாதை தொடங்கப்பட உள்ளது என, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
சுப்பிரமணிய சுவாமி கோயில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விஷேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற விரத நாள்களில் லட்சக் கணக்கான பக்தர்களும் திருச்செந்தூரில் குவிகின்றனர்.

மூத்த குடிமக்களுக்கான தனிப்பாதை
மூத்த குடிமக்களுக்கான தனிப்பாதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள். பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்வதால், பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இங்கு, பொதுதரிசனம், ரூ20 , ரூ.100, ரூ.250 ஆகிய கட்டண தரிசன வரிசைகள் முன்பு இருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், கடந்த மார்ச் 9-ம் தேதியில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி, இலவச தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை ஆகிய இரண்டு வரிசைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் 5 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். இதில், கைக்குழந்தைகள், சிறு குழந்தைகளுடன் வருபவர்கள், முதியவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உள்ளிட்டோரும் மிகவும் சிரமப்பட்டனர்.

மூத்த குடிமக்களுக்கான தனிப்பாதை
மூத்த குடிமக்களுக்கான தனிப்பாதை

சுவாமி தரிசனத்திற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்துவிட்டு பலரும் சுவாமி தரிசனம் செய்யாமலேயே வாசலில் நின்றும், ராஜகோபுரத்தை நோக்கியும் கும்பிட்டுவிட்டு ஊர்களுக்கு திரும்பிச் சென்ற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு, இங்கு ஆய்வு மேற்கொண்டபோது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் ஏற்படும் சிரமத்தை எடுத்துக் கூறினார்கள்.

இதனையடுத்து 60 வயதைக் கடந்த முதியவர்கள் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்ல தனிப்பாதை அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடிமரம் அருகில் உள்ள சண்முகவிலாச மண்டபத்தில், துலாபாரம் வாசல் அருகில் முதியவர்கள் சுவாமி தரிசனத்திற்காக தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு முதியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனித்தனி இருக்கைகள்
தனித்தனி இருக்கைகள்

60 வயதைக் கடந்தவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் அட்டையைக் கண்காணிப்பாளரிடம் காட்டிவிட்டு இந்தப் பாதையில் செல்லலாம். இன்னும் ஒரு வாரத்திற்குள் முதியவர்கள் விரைவாக இலவச தரிசனத்திற்கன தனிப்பாதை தொடங்கப்பட உள்ளது எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது.