Published:Updated:

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! 3 விசைப்படகு; ஒரு நாட்டுப் படகில் 81 பேர் யாத்திரை!

அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற யாத்ரீகர்கள்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில், அங்குள்ள இலங்கை மீனவ பிரதிநிதிகளை சந்தித்து இரு நாட்டு மீனவர் பிரச்னை குறித்து கலந்து ஆலோசிக்க உள்ளதாக தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! 3 விசைப்படகு; ஒரு நாட்டுப் படகில் 81 பேர் யாத்திரை!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில், அங்குள்ள இலங்கை மீனவ பிரதிநிதிகளை சந்தித்து இரு நாட்டு மீனவர் பிரச்னை குறித்து கலந்து ஆலோசிக்க உள்ளதாக தமிழக மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Published:Updated:
அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு சென்ற யாத்ரீகர்கள்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு, ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மூன்று விசைப்படகுகள் ஒரு நாட்டுப் படகுகளில் 81 யாத்ரிகர்கள் சென்றனர்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் யாத்திரீகர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்த போலீசார்
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் யாத்திரீகர்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்த போலீசார்

இந்த திருவிழாவுக்காக ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை வேர்கோடு புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை தேவசகாயம் ஒருங்கிணைப்பில் 3 விசைப்படகு ஒரு நாட்டு படகுகளில் மொத்தம் 81 பேர் சென்றனர். திருவிழாவிற்கு செல்லும் நபர்கள், அவர்கள் படகுகளை, சுங்கத்துறையினர் மற்றும் போலீஸார் தீவிர சோதனை செய்து, அதன்பின்னரே அனுமதித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கச்சத்தீவு திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு மண்டபம் முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பல்களும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு கப்பலும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவணங்களை சோதனை செய்த போலீசார்
ஆவணங்களை சோதனை செய்த போலீசார்

திருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணி அளவில் அந்தோணியார் உருவம் பதித்த கொடியானது ஏற்றப்படும். தொடர்ந்து சிலுவை பாதை திருப்பலியும், இரவில் அந்தோணியார் தேர் பவனியும் நடக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக யாத்திரிகர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசு தெரிவித்திருந்தது. பின்னர் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மேலும் 50 பேர் என‌ மொத்தம் 100 பேர் மட்டும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 81 பேர் இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

கச்சதீவிற்கு படகில் சென்ற யாத்ரீகர்கள்
கச்சதீவிற்கு படகில் சென்ற யாத்ரீகர்கள்

விழாவில் கலந்து கொள்ள சென்ற மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறும்போது

இந்தியா-இலங்கையுடனான நட்புறவை பறை சாற்றுவது இந்த கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு குறைந்த அளவிலான நபர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism