Published:Updated:

விளைச்சலுக்கு அருள்வாள் ஏழுலோகநாயகி!

ஏழுலோகநாயகி
பிரீமியம் ஸ்டோரி
ஏழுலோகநாயகி

அப்போது, அம்பாள் அசரீரியாக, `அன்பனே பயம் கொள்ளாதே. நான் ஏழு உலகத்துக் கும் தாயானவள். நீண்டகாலமாக இந்த இடத் தில் தவம் செய்து வருகிறேன்.

விளைச்சலுக்கு அருள்வாள் ஏழுலோகநாயகி!

அப்போது, அம்பாள் அசரீரியாக, `அன்பனே பயம் கொள்ளாதே. நான் ஏழு உலகத்துக் கும் தாயானவள். நீண்டகாலமாக இந்த இடத் தில் தவம் செய்து வருகிறேன்.

Published:Updated:
ஏழுலோகநாயகி
பிரீமியம் ஸ்டோரி
ஏழுலோகநாயகி

ம்பிகை சக்தி அருளாட்சி புரியும் தலங்களில் மணலூர் ஸ்ரீஏழுலோகநாயகி கோயிலுக்குத் தனிச் சிறப்பு உண்டு. பச்சை பசேலெனக் காணப்படும் வயல்வெளி நடுவில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் இந்த அம்பிகை.

விளைச்சலுக்கு அருள்வாள் 
ஏழுலோகநாயகி!

இவள், வடக்கு திசை நோக்கி அருள்புரிவதால் ‘வடக்குக் கோட்ட அம்மன்’ என்றும் மணலூர், திருமாந்துறை, குமணன்துறை, கஞ்சனூர், சூரியனார்கோவில், கோட்டூர், துகிலி என ஏழு ஊர்களையும் காக்கும் காவல் தெய்வமாக வீற்றிருப்பதால் ‘ஏழுலோகநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறாள்.

விதை விதைப்பிலிருந்து அறுவடைவரை நிலத்தில் எந்த வேலையைச் செய்தாலும், இந்தப்பகுதி மக்கள் இந்த அம்பாளை வழிபட்டபிறகே செய்கிறார்கள். இது காலங்காலமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். அதேபோல் நெல், கரும்பு, வாழை என எந்த வகையான சாகுபடி செய்தாலும் அறுவடை செய்தபின் முதல் படையல் இந்த அம்பாளுக்குத்தான். இங்கே அன்னை ஏழுலோக நாயகி கோயில் கொண்ட கதையே மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் மணலூர் கிராமத்தில் தாமரைக்குளம் என்ற இடத்தில் விவசாயி ஒருவர் தண்ணீருக்காக ஊற்று தோண்டியிருக்கிறார். ஐந்தடி ஆழத்தில் மண்வெட்டியால் பூமியை வெட்டும்போது, குபீரென ரத்தம் பீறிட்டிருக்கிறது. பதறிப் போனார் விவசாயி. மண்வெட்டியை வீசிவிட்டுக் கையால் அந்த இடத்தில் தோண்டிய போது, அங்கே அழகான அம்பாள் சிலை ஒன்று கிடைத்தது. அந்த அம்பாள் சிலையில் தலையிலிருந்து கழுத்துவரை வெட்டப்பட்ட காயங்களும், தலைசாய்ந்தும் இருந்ததால் விவசாயி தவித்துப்போனார்.

ஏழுலோகநாயகி
ஏழுலோகநாயகி

அப்போது, அம்பாள் அசரீரியாக, `அன்பனே பயம் கொள்ளாதே. நான் ஏழு உலகத்துக் கும் தாயானவள். நீண்டகாலமாக இந்த இடத் தில் தவம் செய்து வருகிறேன். நீ செய்த பூர்வஜன்ம புண்ணியத்தால் உன் மூலமாக இந்தப் பூலோகத்தில் குடியேறி எல்லோருக்கும் அருள்செய்ய உள்ளேன். என்னை வடதிசை நோக்கித் தூக்கிச் செல்' என்றாள். உடனே அந்த விவசாயி, `அம்மா உன்னை என்னால் தூக்கிச் செல்ல இயலாது. நீ பெரிய சுமையாக அல்லவா இருக்கிறாய்' என்றார்.

விளைச்சலுக்கு அருள்வாள் 
ஏழுலோகநாயகி!

உடனே அம்பாள், `நீ ஓர் ஊஞ்சல் தட்டில் என்னைத் தூக்கிக்கொண்டு வடதிசை நோக்கி நட. எனக்கு உரல், உலக்கை சத்தம் பிடிக்காது. அமைதியான இடத்தில் இறக்கி வை. உன்னால் என்னைத் தூக்க முடியாதவாறு எந்த இடத்தில் கனக்கிறேனோ அங்கு என்னை இறக்கிவைத்து ஓர் ஆலயம் எழுப்பு. உன் குலம் தழைக்கும். என்னை வழிபடுவோருக்கு, வேண்டிய எல்லாம் தருவேன்' என்று அருளினாள். அதன்படி அந்த அம்மனைச் சுமந்து வந்த அவர், விளைநிலங்கள் சூழ்ந்த ஓரிடத்தை அடைந்ததும் மேற்கொண்டு சுமந்து செல்ல இயலாமல், அங்கேயே அம்மனை இறக்கிவைத்தார். அப்படி உருவானதுதான் ஏழுலோகநாயகி ஆலயம்

விளைச்சலுக்கு அருள்வாள் 
ஏழுலோகநாயகி!

`மனையில் மங்கலத்தை மாதரசி நீ குவிப்பாய்

விளைச்சல் மிகப்பெருக வேண்டும் மட்டும் துணை இருப்பாய்

வழக்குகள் வெற்றி பெற வழிவகை வாழ்த்துரைப்பாய்

தீராத நோய் தீரும். திருமணத்தடை நீங்கும்.

ஏவலோடு கல்வி என ஏவும் வினை அது மாறும்

கல்வியோடு புகழ் கூடும். கைப்பொருளும் மிக சேரும்.

தேவி சரணமென தினம் வந்து உன்னை வணங்கினால்'

இது அம்பாளின் உத்தரவுப்படி அவளை வழிபட் டால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விளக்கும் போற்றிப்பாடல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருக்கோயிலில் ஸ்ரீஏழுலோகநாயகிக்கு முன் வலப்புறத்தில் விநாயகரும் சிவனும் வீற்றிருக்க, இடப்புறத்தில் முருகனும் பைரவரும் அருள்கின்றனர். வீரனும், அனுமனும் தனிச்சந்நிதியில் அருள்கிறார்கள்.

விளைச்சலுக்கு அருள்வாள் 
ஏழுலோகநாயகி!

ஆண்டுதோறும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு, காய்கறி அலங்காரம், மஞ்சள் காப்பு, வெண்ணெய்க்காப்பு என அலங்கரிக்கப்படுகிறாள் இந்த அன்னை. சித்ரா பௌர்ணமி அன்று விடிய விடிய பக்தர்கள் பால் காவடி சுமந்து வந்து வழிபடுகிறார்கள். ஆனி மாதச் சுவாதி நட்சத்திரத்தன்று அம்மன் வீதியுலாவாகப் புறப்பட்டு மணலூர், குமணன்துறை கிராமங்களுக்குச் செல்கிறாள்.

கோயில் குருக்கள் ஹரிதத்த சிவத்திடம் பேசினோம். “எட்டு கரங்களுடன் அஷ்ட புஜ காளியாக இங்கு அருள்கிறாள் இந்த அம்மன். வெள்ளிக்கிழமைதோறும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை அம்பாளை தரிசிக்கலாம். இந்தப் பகுதியில், எங்காவது களவு நடந்துவிட்டால் அம்பாளிடம் சீட்டு எழுதிக் கட்டுவது வழக்கம். அப்படிக் கட்டுபவர்களுக்கு, களவுபோன பொருள் 30 நாள்களுக்குள்மீண்டும் கிடைத்துவிடும்! அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இக்கோயிலுக்கு வந்து உறங்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதல் பலிப்பதாக ஐதிகம். அதுபோல இப்பகுதி விவசாயிகளுக்கு அனுக்கிரகம் செய்கிற தெய்வமாகவும் திகழ்கிறாள் இந்த அம்பிகை” என்றார்.

நீங்களும் ஒருமுறை ஏழுலோக நாயகியை தரிசித்து வழிபட்டு வாருங்கள். அவளருளால் உங்கள் வாழ்விலும் ஏற்றம் உண்டாகும்!

விளைச்சலுக்கு அருள்வாள் 
ஏழுலோகநாயகி!

எப்படிச் செல்வது? தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் - கல்லணை சாலையில், சூரியனார்கோவிலுக்கு அருகில் திருமாந் துறை கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு : ஹரிதத்த சிவம் (96262 78648).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism