Published:Updated:

இந்தியாவில் சில மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க நேரும்: ராமநாதசாமி கோயில் பஞ்சாங்க வாசிப்பில் தகவல்!

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி, அம்பாள்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இந்தியாவில் சில மாநிலங்கள் அரசாங்க வளர்ச்சிக்காக இரண்டு அல்லது மூன்றாகப் பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் சுவாமி அக்னிதீர்த்தக் கடற்கரைக்குச் சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்ற பின்பு சுவாமி அம்பாள் நான்குரதவீதி வழியாக உலா வந்தனர். இதையடுத்து கோயில் முதல் பிராகாரமான சுவாமி சந்நிதி அருகே சிறப்பு பூஜைகள் செய்த பின் கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார்.

அதில், "இந்தியாவுக்கு அயல்நாடுகளின் ஓத்துழைப்பு கிடைக்கும். வடநாடு வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கும். பழைய கோயில் சொத்துகளை அரசாங்கம் கையகப்படுத்தும். அறநிலையத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படும். வெளி மாநிலத்தவர்களால் திருடர் பயம் அதிகரிக்கும். வேதாரண்யம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுமார் ஐந்து கி.மீ வரை கடல் நீர் உள் வாங்கும். கடல் வாழ்சுறா மீன், திமிங்கலம், கடற்குதிரை ஆகியவை இறந்து கரை ஒதுங்கும். மீன் மழை பொழியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ராமநாதசுவாமி கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட காட்சி
ராமநாதசுவாமி கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட காட்சி

போலி சாமியார்கள் அரசிடம் சிக்க நேரும், சில அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் மோசடி செய்த பணத்தைப் புதிய தொழிலில் முதலீடு செய்து நஷ்டப்பட நேரிடும், இந்தியாவில் சில மாநிலங்களை அரசாங்கம் எதிர்கால வளர்ச்சிக்காக இரண்டு அல்லது மூன்றாக பிரிக்க நேரும், அயல்நாட்டிலிருந்து இந்திய கடல் வழியாக செல்லும் ஒரு சரக்கு கப்பல் நடு இரவில் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது"

என்று பஞ்சாங்க வாசிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism