Published:Updated:

சித்திர‘வதை’ - தஞ்சை பெரிய கோயில் வேதனை!

தஞ்சை பெரிய கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
தஞ்சை பெரிய கோயில்

எந்த ரசாயனத்தைப் பயன்படுத்தி ஓவியங்களை சுத்தம் செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஓவியங்கள் சிதைந் திருப்பது வேதனையளிக்கிறது.

யிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோயில் நம் கட்டடக் கலைக்கான சான்று என்றால், அதன் உள்ளே உள்ள சோழர் கால ஓவியங்கள் நம் ஓவியக் கலைக்கான சான்று.

உலகளவில் போற்றிப் புகழும் மோனாலிசா ஓவியம், அஜந்தா ஓவியங்களுக்கு சற்றும் குறைவில்லாதது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சோழர் கால ஓவியங்கள். பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அந்த ஓவியங்கள், திட்டமிட்டே சிதைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தஞ்சை மக்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் திடுக்கிடவைத்துள்ளது. “குடமுழுக்கு புனரமைப்புப் பணிகளின்போது, ரசாயனம் கலந்து சுத்தம் செய்ததாலேயே ஓவியங்கள் சிதைந்துவிட்டன. இது திட்டமிட்ட சதி” என்று கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

தமிழகத்தின் வரலாற்றுப் பாரம்பர்யம் மிக்க ஓவியங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ‘எண்கண்’ எழில்முருகன் இதுகுறித்து சற்று விரிவாகவே நம்மிடம் பேசினார். “அவ்வப்போது ஆய்வுக்காக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் செல்வோம். ஆறு மாதங்களுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்தபோது அந்த ஓவியங்களைப் பார்த்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனவோ அதேபோன்று இருந்தன. ஆனால், குடமுழுக்குக்குப் பிறகு சென்று பார்த்தபோது, எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நல்ல நிலையில் இருந்த ஓவியங்கள், சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தன. ‘சுத்தம் செய்கிறேன்’ என்ற பெயரில் அதிக ரசாயனங்களைக் கலந்து ஓவியங்களைச் சிதைத்துவிட்டனர். அதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. இப்போது ‘அதை சரிசெய்கிறேன்’ என்று, ஓவியங்களில் மேலும் ரசாயனங்களைப் பூசுவதற்குத் தயாராகிவருகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நம்மவர்களின் ஓவியக் கலையை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் சோழர் கால ஓவியங்கள் இதனால் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இதைத் தடுக்க வேண்டும். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களைக்கொண்டு, எஞ்சியுள்ள ஓவியங்களையேனும் பாதுகாக்கத்தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார் தவிப்புடன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சுவர் ஓவியம் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பாளரான முனைவர் மதனிடம் பேசினோம். “தஞ்சாவூர் பெரிய கோயில் விமானத்தில் (கருவறையின் மேல் பகுதியான முதல் அடுக்கின் உட்புறச் சுவரில்), சிறப்புமிக்க சோழர் கால ஓவியங்கள் இருந்தன. வரலாற்றுப் பேராசிரியரான கோவிந்தசாமி என்பவர், 1931-ம் ஆண்டு இந்த ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அதன் பிறகே கட்டடக் கலை, சிற்பக் கலையில் மட்டுமன்றி ஓவியக் கலையிலும் ராஜராஜ சோழன் சிறந்து விளங்கியிருப்பது தெரியவந்தது.

களிமண், சாணம், வைக்கோல் ஆகியவற்றின் கலவையை சுவரில் பூசி, அதன்மேல் சுண்ணாம்பு பூசி ஓவியத்துக்கேற்ப சுவரைத் தயார் செய்துள்ளனர். பிறகு இரும்புத்தாதுக் களிலிருந்து சிவப்பு, மஞ்சள் வண்ணங் களையும், செம்புத்தாதுக்களிலிருந்து பச்சை வண்ணத்தையும் எடுத்து இந்த ஓவியங் களை வரைந்துள்ளனர். இவை ‘பிரஸ்கோ’, ‘செக்கோ’ வகை ஓவியங்கள் எனக் கருதப்படு கின்றன. ஓவியங்கள் மீது தூசு படியாதிருக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘பாலிவினைல் அசிட்டேட்’ என்ற ரசாயனத்தைப் பூசுவர். இதைப் பூசினால் ஓவியம் மங்கி விடும் என்பதால், இதைப் பயன்படுத்தக் கூடாது என்று தேசிய பன்னாட்டுச் சின்னங்கள் பாதுகாத்தல் மற்றும் புனரமைப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக ‘பேரலைட் டி 72’ பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தி யுள்ளது.

சிதைந்த ஓவியம்
சிதைந்த ஓவியம்

எந்த ரசாயனத்தைப் பயன்படுத்தி ஓவியங்களை சுத்தம் செய்தார்கள் எனத் தெரியவில்லை. ஓவியங்கள் சிதைந் திருப்பது வேதனையளிக்கிறது. இரண்டாயிரம் வருடம் பழைமையான அஜந்தா ஓவியங்கள், இப்போது வரை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவருகின்றன. மக்கள் பார்க்கவும் அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், பெரிய கோயிலில் உள்ள இந்த ஓவியங்களைப் பார்க்க மக்களை அனுமதிப்ப தில்லை. அப்படியிருந்தும் ஓவியங்கள் சிதைந்துள்ளன. தொல்லியல் துறை நிர்வாகிகள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இது நம்முடைய பாரம்பர்யம்... நம்முடைய சொத்து என்பதை உணர்ந்து, இந்த ஓவியங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் விளக்கமாக.

அதேசமயம், “மத்திய தொல்லியல் துறையினர், திட்ட மிட்டே தமிழர்களின் பாரம்பர்யங்களை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகக்கூட இந்த ஓவியங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம்” என்று சொல்பவர் களும் உண்டு.

மத்திய தொல்லியல் துறையின் தஞ்சை மண்டல முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கரிடம் பேசினோம். “பெரிய கோயில் ஓவியப் பராமரிப்புப் பணி, தொல்லியல் துறையின் அறிவியல் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அறிவியல்ரீதியாகத்தான் பணிகள் நடைபெறுகின்றன. பெரிய கோயிலின் ஓவியங்களைப் பாதுகாக்க, இப்போதும் சிறப்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன. எந்தத் தவறும் நடக்கவில்லை” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

அறிவியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “ஓவியங்கள் உள்ள இடத்தில் குடமுழுக்குக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடமுழுக்குக்கு முன் எப்படி இருந்தனவோ அப்படியேதான் ஓவியங்கள் இருக்கின்றன. அதிகளவிலான வெப்பத்தில் ஓவியங்கள் சிதிலமடைந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிய மின்விசிறி வைத் துள்ளோம். அதுமட்டு மல்லாமல், காற்றோட்ட மாக இருக்கும் வகையில் காலை முதல் மாலை வரை கோபுரத்தின் கதவுகள் திறந்து வைக்கப்படுகின்றன. வெப்பநிலை கூடுவ தால் ஓவியங்களில் பாதிப்பு ஏற்படுகிறதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.