Published:Updated:

லாக்டௌன் எதிரொலி: பழநியில் குவிந்த பக்தர்கள்; உத்தரவை மறுபரிசீலனை செய்ய வியாபாரிகள் கோரிக்கை!

பழநி
News
பழநி

தமிழக அரசு அறிவித்துள்ள வழிபாட்டு தலங்களுக்கான தடை அறிவிப்பு காரணமாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சபரிமலை பக்தர்கள் கூட்டத்துடன் பாதயாத்திரை பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வந்ததால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோயில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் பழநி முருகனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக தைப்பூதத்திற்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். பழநியில் ஜனவரி 12-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

பக்தர்கள்
பக்தர்கள்

தற்போது தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான தடை அறிவிப்பு காரணமாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களில் பலர் பாதயாத்திரையைப் பாதியில் கைவிட்டு பேருந்துகளில் ஏறி பழநி வந்தடைந்தனர். இதனால் சபரிமலை பக்தர்கள் கூட்டத்துடன் பாதயாத்திரை பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வந்ததால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் தைப்பூசத் திருவிழாவின் போது குவியும் கூட்டத்தைவிட தற்போது அதிக கூட்டம் ஏற்பட்டுள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கூட்டம்
கூட்டம்

இதற்கிடையே தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பழநியில் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள தடை அறிவிப்பு காரணமாக பாதயாத்திரை சென்ற பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனையின்போது, `கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பழநியில் உள்ள சாலையோர வியாபாரிகள், சிறுவியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பழநி முருகன் கோவிலை நம்பியே உள்ள வியாபாரிகள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

பக்தர்கள் குழப்பம்
பக்தர்கள் குழப்பம்

தற்போது தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில், தமிழக அரசின் தடை உத்தரவு வியாபாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மீண்டும் ஒரு லாக்டவுன் சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத நிலையால் தவித்து வரும் வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனவும், குறைந்தபட்சம் தைப்பூசத்திருவிழா முடியும் வரையிலாவது பக்தர்களுக்கு தடை என்ற கட்டுப்பாடுகளை தளர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு கோரிக்கை விடுப்பதாக பழநி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.