Election bannerElection banner
Published:Updated:

திருப்பதியில் நாளை முதல் நேர ஒதுக்கீடு முறையில் சுவாமி தரிசனம்! - முழு விவரம் #Tirupati

திருப்பதி
திருப்பதி

திருமலைக்கு வரும் பக்தர்கள், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் கம்பார்ட்மென்ட்களில் பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருமலைக்கு வரும் பக்தர்கள் 17 - ம் தேதி முதல் நேர ஒதுக்கீடு தரிசன முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் கம்பார்ட்மென்ட்களில் பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Special darsan
Special darsan
TTD PHOTO

சிறப்பு தரிசனம்:

செவ்வாய்க்கிழமை 17- ம் தேதி 4 ஆயிரம் டோக்கன்கள் வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சுவாமி தரிசனம் செய்வதற்கு வழங்கப்படுகின்றது. காலை 10 மணி, மதியம் 2 மணி, மதியம் 3 மணி ஆகிய நேரங்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கைகுழந்தையுடன் வரும் பெற்றோர்கள்:

இதுதவிர மார்ச் 18 - ம் தேதி ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. காலை 9 மணிக்கும் மதியம் 1.30 மணிக்கும் இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

Tirupaty
Tirupaty
TTD PHOTO

கொரோனா வைரஸ் பரவாமலிருக்கப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், அன்னப் பிரசாதக்கூடம் ஆகிய எல்லா இடங்களிலும் பக்தர்கள் ஸ்கிரீனிங் முறையில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

திருமலையில் இருக்கும் அறைகள், காட்டேஜ்கள்  மிகவும் தூய்மையாக வைத்திருக்கப் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டாவில் நடைபெறவிருந்த 'சீனிவாச கல்யாண நிகழ்ச்சி' ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Vontimeeta
Vontimeeta

மும்பையில் நடைபெறுவதாக இருந்த திருப்பதி கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி ஏப்ரல் 5 -ம் தேதிக்குப் பதிலாக மற்றுமொரு தேதியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

திருமலையில் 'தன்வந்திரி மகா யாகம்' மார்ச் 19 - ம் தேதியிலிருந்து 21 - ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகின்றது. இதில் விசாகப்பட்டினம் சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீசொரூபானந்த சரஸ்வதி சுவாமிகள் ராகவேந்திரா பட ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

Tirupaty
Tirupaty

இதைத் தொடர்ந்து வருகிற மார்ச் 26  -ம் தேதி தொடங்கி 28 - ம் தேதி வரை இரண்டு நாள்கள் தன்வந்திரி யாகம் நடத்தப்படுகிறது. திருமலையில் இருக்கும் தர்மகிரி வேத பாடசாலையில் இதற்காக யாகசாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு