Published:Updated:

நிறைவான வாழ்வு, செல்வம் அருளும் நீடூர் ஸ்ரீ சோமநாதர்.. இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

சிவபெருமான்
சிவபெருமான்

மண்ணுலக வாழ்வுக்குத் தேவையான சகல செல்வங்களையும் அருளும் தலம் இது.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

நிறைவான வாழ்வருளும் நீடூர் ஸ்ரீ சோமநாதர்... 'திருவாரூரில் பிறக்கவும் காசியில் இறக்கவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்'...

Posted by Sakthi Vikatan on Friday, April 24, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, நீடூர் ஸ்ரீ சோமநாதர் ஆலயம்.

'திருவாரூரில் பிறக்கவும் காசியில் இறக்கவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்' என்பது முன்னோர்களின் வாக்கு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே வாழும் வாழ்க்கை நிறைவான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நிறைவான வாழ்வைத் தரவல்ல ஈசனின் திருத்தலம் ஒன்று உண்டு. அதுவே நீடூர்.

நீடூர் சோமநாதர்
நீடூர் சோமநாதர்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள இந்தத் தலத்தில் இறைவன் சோமநாதராக அருள்பாலிக்கிறார். இங்கு அருள்புரியும் அம்பிகை 'வேயுறு தோளியம்மை' என்னும் இனிய திருநாமத்தோடு கொலுவீற்றிருக்கிறாள்.

இந்தத் தலத்தில், இந்திரனின் கானத்தால் மகிழ்ந்த ஈசன் இந்திரன் முன்பு தோன்றி திருநடனக்காட்சி அருளினார். இதனால், இந்தத் தல இறைவனுக்கு, 'கான நர்த்தன சங்கரன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.

worshipathome
worshipathome

நண்டாகப் பிறந்த தன்மசுதன் எனும் அசுரன் வழிபட்ட தலம் இது. அதனால் கடக ராசிக்காரர்களுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவனடியார்களுக்குத் திருவமுது படைக்கும் திருத்தொண்டைச் செய்துவந்த 63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார் நாயனார் முக்தி அடைந்த தலம் இது.

மண்ணுலக வாழ்வுக்குத் தேவையான சகல செல்வங்களையும் அருளும் தலம் இது. தேவர்களும் பிரமன், திருமால், பத்ரகாளி முதலிய தெய்வங்களும் சிவனை வழிபாடு செய்த தலம் இது. சகல கிரகங்களையும் தன் அருள்பார்வையால் வழிநடத்தும் அன்னையை வணங்கினாலே நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பதால் இங்கு நவகிரக சந்நிதி இல்லை.

இங்குள்ள முனையடுவார் நாயனாரை வணங்க, செயல்களில் வெற்றியும் பகைவர்களை வெல்லும் வலிமையும் உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.

அடுத்த கட்டுரைக்கு