Published:Updated:

அத்திவரதர் தரிசனத்தில் ஸ்தம்பிக்கும் காஞ்சிபுரம்! குமுறல்களைக் கொட்டித் தீர்க்கும் பக்தர்கள்!

அத்திவரதர்
News
அத்திவரதர் ( பா.ஜெயவேல் )

ஓரிரு நொடிகள் மட்டுமே காணக் கிடைக்கும் அந்த அற்புத தரிசனத்தில் பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். பல மணிநேரம், முடியாமல் கால்கடுக்க நின்று மனம் வெதும்பி அழுது புலம்பிக்கொண்டே வெளியேறும் பக்தர்களையும் காண முடிகிறது.

40 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே காணக்கிடைக்கும் அற்புத தரிசனம் ’அத்திவரதர் தரிசனம்.’ அத்திவரதரை எப்படியாவது தரிசித்து விட வேண்டும் என ஆவலோடு காஞ்சிபுரம் வந்தவர்களுக்கு கசப்பான அனுபவமே மிஞ்சுகிறது. பல மணிநேரம் வரிசையில் கால்கடுக்க நின்று ஒருவழியாகப் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துதான் அத்திவரதரைத் தரிசிக்க முடிகிறது.

அத்திவரதர் தரிசனம்
அத்திவரதர் தரிசனம்

ஓரிரு நொடிகள் மட்டுமே காணக் கிடைக்கும் அந்த அற்புத தரிசனத்தில் பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்படுகிறார்கள். பல மணிநேரம், முடியாமல் கால்கடுக்க நின்று மனம் வெதும்பி அழுது புலம்பிக்கொண்டே வெளியேறும் பக்தர்களையும் காண முடிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிம்மதி இழக்க வைக்கும் நீண்ட வரிசை!

கோயில் பகுதியை நெருங்கியதும் திரளாக நிற்கிறது, பெருங்கூட்டம். வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு ஒருவழியாக அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமாகிறார்கள். அதன்பின்பு, ஒரே தள்ளுமுள்ளுதான். பெருமாள் நாமத்தை உச்சரிப்பதற்குப் பதிலாக, ‘காலை மிதிக்காதீங்க… இடிக்காதீங்க… தள்ளாதீங்க… வேணுமுன்னேவா இடிக்கிறோம், பின்னால இருந்து தள்ளுறாங்க… தள்ளி நில்லுங்க… உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா..?’ இப்படியான குரல்களே ஒலிக்கின்றன. ஓரிரு மணிநேரம் கடந்தும் பாதிதூரம்கூடப் போகமுடியவில்லையே என்ற ஆற்றாமை ஒருபக்கம், பெருமாளை எப்படியும் தரிசிக்க வேண்டும் என்ற மனநிலை இன்னொரு பக்கம் அவர்களை நிலைகுலையச் செய்துவிடுகிறது.

அத்திவரதர் தரிசன வரிசை
அத்திவரதர் தரிசன வரிசை
பா.ஜெயவேல்

சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குமேல் பல மணி நேரமாக நிற்கும் பக்தர்களிடம், காவல் துறையினர் காட்டும் கடுமையைப் பக்தர்களால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ‘மேல கைவச்சு தள்ளாதீங்க…’ எனப் பெண்கள் ஆண் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். பலமணி நேரமாக வரிசையில் நிற்கும் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்க முடியாமல் தவிக்கிறார்கள். நடுவில் சில இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் கொடுக்கிறார்கள். தலைக்குமேல் ஓரிரு அடியில் இருக்கும் தகர ஷீட், அடிக்கும் வெயிலில் குடித்த தண்ணீரைச் சில நிமிடங்களில் வியர்வையாக மாற்றிவிடுகிறது. சூடான சிமென்ட் சாலை, சிறுகற்கள் நிறைந்த மண் தரை கால்பாதங்களைப் பதம் பார்க்கின்றன. இவ்வளவு சிரமங்களையும் தாங்க முடியாமல் சிலர் அழுதுகொண்டே தரிசனத்துக்குச் செல்லாமல் வெளியேறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செருப்பு… வெறுப்பு!

செருப்பைப் பக்தர்கள் தங்களின் வாகனத்திலேயே விட்டுவிட்டுவர மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வெளியூர் பக்தர்கள் செருப்பை எங்கு விடுவது எனத் தெரியாமல் கண்ட இடங்களில் விட்டுவிடுகிறார்கள். தரிசனம் முடிந்துவந்து பார்த்தால் அந்தச் செருப்பு, கூட்டத்தினரால் வேறோர் இடத்துக்கு நகர்த்திச் செல்லப்பட்டுவிடுகிறது.

பக்தரிகளின் செருப்பு
பக்தரிகளின் செருப்பு
பா.ஜெயவேல்

தினம்தினம் ஆயிரக்கணக்கான செருப்புகளைக் குப்பைபோல அகற்றுகிறார்கள். கிழக்குக் கோபுரம் வாயிலில் செருப்பைவிட்டால் மேற்குக் கோபுரத்தில் தரிசனம் முடிந்த பிறகு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குத் திரும்பவந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செருப்பைப் பாதுகாப்பதாகச் சொல்லி ஒரு ஜோடி செருப்புக்கு 10 ரூபாய் எனக் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.

மாற்றம் மக்களிடமும் வேண்டும்!

வயதானவர்களுக்குத் தேவையான அளவு, வீல்சேர் மற்றும் பேட்டரி வாகனங்கள் இல்லை. மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள வீல்சேர்களைக் கோயிலுக்கு வெளியே கொண்டுசென்று அங்கேயே விட்டுவிடுகிறார்கள். சிலர் ஆட்டோவிலும் காரிலும்கூட அதை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்.

அத்திவரதர் தரிசனத்தில் வீல் சேர்
அத்திவரதர் தரிசனத்தில் வீல் சேர்
பா.ஜெயவேல்

வயதானவர்களைத் தனி வரிசையில் அனுப்பினால், அவர்களுடன் 10 பேர் உள்ளே நுழைகிறார்கள். சிலர், தாங்கள் அரசு ஊழியர் எனச் சொல்லி ஆங்காங்கே காவல் துறையினருடன் மல்லுக்கட்டுகிறார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் ஓரளவுக்குப் பிரச்னைகளைக் குறைத்துவிடலாம் என்ற குரலும் அங்கே ஒலிக்கச் செய்கிறது.

"தினமும் 10 மணி நேரம் நிற்கிறோம்!"

மூலவர் சந்நிதி மற்றும் முக்கிய இடங்களில் நிற்கும் பெண் காவலர்களின் நிலையோ மிகவும் மோசம். ``காலையில 5 மணியில இருந்து டூட்டி பார்க்குறேன் சார். 11 மணி ஆச்சு. இன்னும் சாப்பிடக்கூட முடியல. நாங்களும் மனுஷங்கதானே. எவ்வளவுதான் கத்துறது?

தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்கள்
தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்கள்
பா.ஜெயவேல்

மக்களும் எங்க நிலைமையைப் புரிஞ்சுக்கணும். பக்தர்கள் ஒரு நாள்தான் நிற்குறாங்க. நாங்க, தினமும் 10 மணி நேரம் நிற்கிறோம். அதிகாரிகங்க ஒருபக்கம், பொதுமக்கள் இன்னொரு பக்கம் என ரெண்டு பக்கமும் எங்களை அசிங்கமா திட்டுறாங்க” எனப் புலம்புகிறார் பெண் காவலர் ஒருவர்.

ஜூலை 1-ம் தேதியிலிருந்து நான்கு நாள்கள் மட்டுமே கூட்டம் கட்டுப்படுத்தக்கூடிய அளவில் இருந்தது. அதற்கடுத்த நாள்களில் ஒன்றரை லட்சம், இரண்டு லட்சம் எனக் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வந்துவிட்டது. கடந்த சனிக்கிழமை மட்டும் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்தார்கள். ஆனால், 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அன்று தரிசனம் செய்தார்கள் என்பதே உண்மை. அடுத்தநாள், ஞாயிற்றுக்கிழமை கூட்டம் குறைவாகவே இருந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

மாவட்ட நிர்வாகத்தின் பதில் என்ன?

மாவட்ட நிர்வாகம் அடிக்கடி பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ``கடந்த சனிக்கிழமை மட்டும் ஒன்றரை லட்சம் பேர் அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளார்கள். நள்ளிரவு 4 மணி நேரத்தில் குப்பைகளை அகற்றுகிறோம். 20 மினி பஸ்களை 30 மினி பஸ்களாக அதிகரித்துள்ளோம். எட்டு மொபைல் ஆம்புலென்ஸ் மற்றும் 10 பைக் ஆம்புலென்ஸ்களைக் கோயில் பகுதியிலேயே நிறுத்தியுள்ளோம்.

கோயிலுக்கு வெளியே நீண்ட தூரம் நிற்பதைத் தவிர்க்கும் வகையில், கோயிலுக்கு உள்பகுதியில் 4,500 பேர் வரிசையில் செல்லும் அளவுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இரவு 9.30 மணிக்குப் பதிலாக 9.00 மணிக்கே கிழக்குக் கோபுர வாயில் அடைக்கப்படும். 9 மணிக்குள் வந்தவர்கள் கோயிலின் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் 11 மணிவரை தரிசனம் செய்யலாம். கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள்மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலமாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்திவரதரைத் தரிசனம் செய்வதற்கு மூன்று மணிநேரமாவது ஆகும் என்பதைப் பக்தர்கள் புரிந்துகொண்டு கோயிலுக்கு வர வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் செய்துள்ள கூடுதல் பணிகளால், கடந்த இரண்டு நாள்களாகப் பக்தர்களின் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.