Published:Updated:

வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்!

வரலாற்றுப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
வரலாற்றுப் பயணம்

``ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல்போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரைமீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தான்”

வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்!

``ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல்போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரைமீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தான்”

Published:Updated:
வரலாற்றுப் பயணம்
பிரீமியம் ஸ்டோரி
வரலாற்றுப் பயணம்

- ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் கல்கி, முதல் பக்கத்தில் எழுதியிருக்கும் வரிகள் இவை.

`பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் வழியில் ஒரு பயணம்’ என்ற திட்டம் உருவானதும், அதே ஆடி 18-ம் நாளில் பயணத்தைத் தொடங்கலாமே என்று முடிவானது. அறிவிப்புக்கும் பயணத்துக்குமான கால இடைவெளி குறைவு. ஆனால் “விகடன் நடத்தும் இந்த விஷயத்தை விட்டுடுவோமா?” என்று இரண்டொரு நாள்களிலேயே முன்பதிவு செய்து ஆச்சர்யப்படுத்தினார்கள் வாசகர்கள்.

வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்!

கணவாய்களை எண்ணிக்கொண்டே வந்தியத்தேவன் குதிரையில் மெதுவாகக் கடந்து சென்ற அந்த வீரநாராயண ஏரிக்கரையை - இப்போது வீராணம் ஏரி - சனிக்கிழமை அதிகாலை சென்றடைந்தோம். வாசகர்கள் அங்கிருந்த அறிவிப்புகளில் ஏரியைக் குறித்த வரலாற்றைப் படித்துப் புரிந்துகொண்டு, அதிலிருக்கும் குழப்பங்களை விவாதிக்க ஆரம்பித்தனர். வரலாற்று உண்மைகள் எவை, அதன்பிறகு என்னென்ன மாற்றங்கள் என்றெல்லாம் உரையாடல் தொடர, விகடன் ஏற்பாடு செய்திருந்தபடி வரலாற்று ஆர்வலர் சசிதரன் நம்மோடு இணைந்தார். தரவுகளோடு அவர் வீராணம் ஏரியைப் பற்றிச் சொல்ல, வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தார்கள் வாசகர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இதுதான் சார் விகடன். வரலாற்றுத் திரிபெல்லாம் நிறைய நடக்குது. இங்க எழுதிருக்கிறதை எந்த அளவு நம்பலாம், நம்பக்கூடாதுன்னு எங்களுக்கும் தெரியல. அதைப் பத்திப் பேசிட்டிருக்கும்போதே, அதுல எக்ஸ்பர்ட் ஒருத்தரைக் கொண்டு வந்து விளக்கம் குடுக்கறது செம டைமிங்” என்றார் வாசகி பிரவீணா.

அந்த மூன்று நாள் பயணத்திலும் இதுபோன்ற ஆச்சர்யத்தருணங்களில் மூழ்கினார்கள் வாசகர்கள். முதல் நாள் அனந்தீஸ்வரர் ஆலயத்தில் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கான சான்றாக இருந்த கல்வெட்டை வரிக்கு வரி சசிதரன் படித்துக் காட்டியதில் ஆரம்பித்து, இறுதிநாள் வரை வாசகர்கள் பலவற்றைத் தாங்களாகவே புரிந்துகொள்ளும் வண்ணம் பயணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

முதல்நாள் பயணம் முடித்து, ஓய்வெடுக்க வந்த வாசகர்களுக்குத் தங்குமிடத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘பாஞ்சாலிக் குறவஞ்சி’ கூத்து நம் கலையின் பெருமையை எடுத்துச் சொன்னது. திட்டமிட்ட நேரத்தைக் கடந்தும் அமர்ந்திருந்து ரசித்து அந்தக் கலைஞர்களைப் பாராட்டினார்கள் வாசகர்கள்.

விகடன், தன் வாசகர்களுக்கு ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டிருக்க, இரண்டாம் நாள் பழையாறையில் விகடனுக்கும் ஆச்சர்யம் அளித்தனர் மகாமகம் ரோட்டரி சங்க நிர்வாகிகளும், கும்பகோணம் சக்தி ரோட்டரி நிர்வாகிகளும். மொத்த கிராமத்தையே நம் வாசகர்கள் வருகைக்காகத் தூய்மைப் படுத்தியிருந்தனர். இந்தப் பயணத்தை நினைவுகூரும் விதமாக, வாசகர்கள் மூலம் மரம் நடுவிழா ஒன்றை நடத்தினார்கள். வரலாற்று ஆய்வாளர் தங்கமுத்து மூலமாக பழையாறையின் வரலாறு தெளிவாக விளக்கப்பட்டது.

அதை முடித்துவிட்டு, திருப்புறம்பியம் சென்றபோது, அதே மண்ணில் பொன்னியின் செல்வன் புதினத்தில் நடந்த ஒரு நிகழ்வு, அந்த மண்ணின் மைந்தர்களாலேயே சிறு நாடகமாக நிகழ்த்திக்காட்டப்பட்டது. நந்தினி, ரவிதாசன், இடும்பன்காரி, ஆழ்வார்க்கடியான், வந்தியத் தேவன், பழுவேட்டரையர் என்று கதையில் தாங்கள் படித்த பாத்திரங்கள் தங்கள் முன்னே நடித்துக்கொண்டிருந்ததை உற்சாகக் கைத்தட்டலோடு ரசித்து மகிழ்ந்தனர் வாசகர்கள்.

மாலை தஞ்சாவூரின் கல்வெட்டுகளை சசிதரன் விளக்க, அங்கிருக்கும் ஓவியங்களுக்குப் பின் உள்ள உண்மைகளை விளக்கினார் ஓவியர் ஏகன். வாசகர்கள்கூட்டத்தோடு நின்றிருந்த பக்தர் ஒருவர். “நான் தஞ்சாவூர்க்காரன். இதே கோயிலுக்கு மாசத்துக்கு ரெண்டுவாட்டி வரேன். இந்தக் கோயில்ல இவ்ளோ இருக்கா!” என்று ஆச்சர்யப்பட்டது இந்தப் பயணத்துக்குக் கிடைத்த பாராட்டு.

பயணத்தின் இறுதிநாளான மூன்றாம் நாள் பழுவூர்க் கோயில்கள், அதன்பின் கோடியக்கரை என்று நிறைவுற்றது. கோடியக்கரையில் ஹரி, தன் குழுவினரோடு நடத்திக்காட்டிய களரியாட்டம் வாசகர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. இந்தக் கலைக்கும், பொன்னியின் செல்வனுக்குமான தொடர்பைச் சொன்ன ஹரி, ஒவ்வொரு களரி முறையையும் செய்துகாட்டி அதன் விளக்கத்தையும் சொன்னபோது ஒருசில நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டி, தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர் வாசகர்கள்.

“நான் ‘பொன்னியின் செல்வன்’ படிச்சதில்ல. ஆனா அதைப் பத்தி நிறைய கேள்விப்பட்டு இதுல கலந்துகிட்டேன். மத்த எல்லாரையும்விட எனக்கு ஒரு அட்வான்டேஜ் இருக்கு. நாளைக்கு நான் இதப் படிக்கறப்ப இந்த இடங்கள் என் கண்ணுல விரியும். அதனால இதப் படிக்காதவங்க இன்னும் இந்தப் பயணத்தை ரசிக்கலாம்” என்றார், வாசகர் எஸ்.எம் சங்கர்.

வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம்!

``நான் ஒரு டிராவலர். இந்த இடங்களுக்கெல்லாம் ஏற்கெனவே அப்பப்ப போயிருக்கேன். விகடன் ஏற்பாடுங்கறதால எதாவது ஸ்பெஷலா இருக்கும்னு இதுல கலந்துகிட்டேன். என்னைக் கொஞ்சம்கூட ஏமாத்தல இந்தப் பயணம். இது இதோடு நின்னுடக் கூடாது. அடிக்கடி தொடரணும்” என்றார், வாசகி அலமேலு.

பயணம் முழுவதும் தன் 12 வயது மகள் ஷ்ராவ்யாவுக்கு பொன்னியின் செல்வன் கதையைப் பகிர்ந்துகொண்டே வந்தார், வேணுகோபால் சங்கர்.

“விகடன் அலுவலகத்துக்கு வரணும்கறதே எனக்கு ஒரு லட்சியமா இருந்தது. இப்ப அந்த விகடன்கூடவே ஒரு பயணம்கறது டபுள் ஜாக்பாட் எனக்கு” என்றனர், டாக்டர் தம்பதியான கிரிஜா - பிரபாகரன். வாசகி வானதி, வாசகர் சோழராஜன் - மங்கையர்க்கரசி தம்பதியர் தங்கள் பெயர்க்காரணத்தைச் சொன்னது, பொன்னியின் செல்வனை படிக்க ஆரம்பித்த நினைவுகளை வாசகி வானதி பகிர்ந்து கொண்டது, எம்.ஜி.ஆர் ஆக ஆசைப்பட்டு சென்னை வந்து, வள்ளலாகவே வாழ்ந்து கொண் டிருக்கும் வாசகர் ஜெயச்சந்திரனின் கதை என்று பயணம் முழுவதும் கலகலப்பும் உற்சாகமும் தகவல் பரிமாற்றங்களுமாக அமைந்தது.

“எங்க கல்லூரிக் காலச் சுற்றுலாவுக்குப் பிறகு இப்படி ஒரு உற்சாகமான, அதே சமயம் பயனுள்ள பயணமா இது அமைஞ்சிருக்கு” என்றார் வாசகி காஞ்சனா.

10 வயதுச் சிறுவன் எழில் தொடங்கி, கொஞ்சமும் உற்சாகம் குறையாமல் இருந்த 76 வயது ‘யோ யோ ப்ரோ’ ராமலிங்கம் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவத்தைக் கொடுத்தது இந்தப் பயணம். பெங்களூரிலிருந்து வந்த மாமியார் - மருமகளான கலைவாணி மற்றும் ப்ரீத்தி, வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இடத்தில், கடைசி நேரத்தில் போராடிக் கலந்துகொண்ட சதீஷ் என்று பலரும் “இதற்காக நேரமொதுக்கிய எங்களை விகடன் ஏமாற்றவில்லை” என்பதைக் குறிப்பிட்டனர். ``இதோடு நிறுத்திடாதீங்க... இன்னும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளோடு இந்தப் பயணத்தைத் தொடருங்க”, “அடுத்து எங்க பயணம் போறதா இருந்தாலும் நான் கலந்துக் கிறேன்” என்றெல்லாம் கேட்டுக்கொண்ட வாசகர்களை, இன்னும் நிறைய திட்டங்களோடு வியப்பிலாழ்த்தக் காத்திருக்கிறது விகடன்!