Published:Updated:

கனவில் கண்டேன் கணபதியை!

கனவில் கண்டேன் கணபதியை!
பிரீமியம் ஸ்டோரி
News
கனவில் கண்டேன் கணபதியை!

சரணம் கணேசா!

விநாயகர் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான கடவுள். எனக்கு விநாயகரை வரைவது என்பது, எப்போதும் எளிமையான மற்றும் மகிழ்ச்சியான ஓர் அனுபவம்.

கனவில் கண்டேன் கணபதியை!

பிற கடவுள்களின் முகத்தை வரையும்போது அதிகபட்ச கூர்மை தேவை. தெய்வங்களின் முகத்தில் அந்தந்தக் கடவுளின் தன்மைக்கு ஏற்பத் துல்லியமான உணர்வுகள் புலப்படும்வகையில் வரைய வேண்டும். அது மிகவும் சவாலான விஷயம். ஆனால் விநாயகர் அப்படியில்லை. ஒரு துதிக்கை வரைந்து விட்டாலே, விநாயகர் அதில் பிரசன்னமாகிவிடும் சூட்சுமத்தை உணர முடியும். அதனால்தான் குழந்தைகள்கூட விநாயகர் உருவத்தை மிக எளிதாக அழகாக வரைந்துவிடுவார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கனவில் கண்டேன் கணபதியை!

சிறு வயதிலிருந்தே வித்தியாசமான விநாயக உருவங் களை வரைந்து பார்ப்பேன். வழக்கமாக குண்டாக விநாயகரை வரைவோம். மாறாக பள்ளிக்கூட நாள்களில் ஸ்லிம்மான விநாயகரை வரைந்து பார்த்திருக்கிறேன். பார்த்தவர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டதோடு வாழ்த்தினார்கள். இதுபோன்ற குறும்புத்தனங்கள் எல்லாம் விநாயகரை வைத்து மட்டுமே செய்யலாம். பிடித்துவைத்தால் பிள்ளையார் என்பதால் ‘சாணமானா லும் சரி, சந்தனமானாலும் சரி’ என்பது மரபு நமக்குத் தரும் சுதந்திரம். அந்தச் சுதந்திரமே விதவிதமான விநாயகர் வடிவங்களை உருவாக்க அனுமதிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கனவில் கண்டேன் கணபதியை!

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பத்திரிக்கையிலிருந்து தொடர்பு கொண்டார்கள். விநாயகர் குறித்த நூல் ஒன்றுக்கு, மொத்தம் நூறு படங்கள் தேவை என்று கேட்டார்கள்நான் அவர்களைக் கொஞ்சநேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு விநாயகர் ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். கோட்டோவியமாக விநாயகரை வரையத்தொடங்கினேன். நான்கு மணி நேரத்தில் 100 விநாயகரை என்னால் வரைய முடிந்தது. நூறும் ஒன்றுபோல் ஒன்று இல்லாமல் மாறுபட்ட பாவனை களோடு அமைந்தது இறையருள்தான்.

கனவில் கண்டேன் கணபதியை!

விநாயகர் எந்த அளவுக்கு என் உணர்வோடு கலந்தவர் என்பதை விளக்க ஆத்மார்த்தமான ஓர் அனுபவத்தைச் சொல்லவேண்டும். ஒருமுறை என் வீட்டில் என் அறையில் இருக்கிறேன். அப்போது கனவும் நனவும் கலந்த மனோநிலை. என் முன்னே ஓர் உருவம் தோன்றுகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி விஸ்வரூபம் எடுக்கிறது. அந்த அறைமுழுக்க அந்த உருவமே நிறைகிறது. என் உடல் சிலிர்த்துவிட்டது. பொதுவாக ஓவியம் வரைவதற்காகப் பல கற்பனைகளைச் செய்வது வழக்கம். அப்படி ஏதோ ஒன்றுதான் இப்படி மூளைக்குள் சித்திரம் தீட்டுகிறது என்று என்னைச் சமாதானம் செய்துகொண்டேன்.

கனவில் கண்டேன் கணபதியை!

சில மாதங்கள் கழித்து திருவாதவூர் கோயிலுக்குச் சென்றுவிட்டு நண்பரோடு திரும்பிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு முக்கியப் பிரமுகர். வரும் வழியில் பிள்ளையார் பட்டி போகலாம் என்று சொன்னார். அங்கே அவருக்கு முக்கியமான வேலை இருப்பதாகச் சொன்னார். சரி என்று சென்றோம். அவர் கோயில் அலுவலகத்தில் அமர்ந்து பேசத் தொடங்கிவிட, என்னை அழைத்துச் சென்று கருவறைக்கு அருகில் அமரவைத்துவிட்டார்கள்.

கனவில் கண்டேன் கணபதியை!

அப்போதுதான் அந்த ஸ்வாமியைப் பார்க்கிறேன். பிரமாண்டமான அந்த தரிசனம் எனக்குள் ஏதோ செய்தது. இதற்கு முன்பு இந்த தரிசனத்தைக் கண்டிருக்கும் உணர்வு மேலிட்டது. என் மனமும் உடலும் குதூகலித்தது. பிரபஞ்சப் பெருவுருவாக விளங்கும் இந்தக் கணநாதனையே அன்று கனவு போன்ற காட்சியாகக் கண்டிருக்கிறேன் என்ற தெளிவும் தோன்றியது. பரவசத்துடன் விநாயகரை வணங்கினேன். அன்று முதல் விநாயகர் எப்போதும் என் மனதுக்குள் குடியிருக்கிறார்.

10 நிமிடங்களில் நான் வரைந்த 10 விநாயக ஓவியங்கள், இந்தக் கட்டுரைப் பக்கங்களில்... வாசகர்களுக்காக!