Published:Updated:

பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கிய தங்கத்தேர்! - 2 ஆண்டுகளுக்குப் பின் இயக்க அனுமதி

மண்டைக்காடு கோயிலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கிய தங்கத்தேர்
மண்டைக்காடு கோயிலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கிய தங்கத்தேர்

பொன்.ராதாகிருஷ்ணன், 2018-ம் ஆண்டு சித்திரா பௌர்ணமி தினத்தில், கோயில் நிர்வாகத்திடம் தங்கத்தேரை ஒப்படைத்தார். அதன்பிறகு அந்த தங்கத்தேர் இயக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோவில், குமாரகோயில் முருகன் கோவில், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், பன்னிரு சிவாலங்கள் எனப் பிரசித்திபெற்ற பல கோயில்கள் உள்ளன. ஆனால், எந்தக் கோயிலிலும் தங்கத்தேர் இல்லாமல் இருந்தது. இந்தக் குறையைப் போக்குவதற்காக, மத்திய அமைச்சராக இருந்த பென்.ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு தங்கத்தேர் வழங்கப்பட்டது. இந்த தங்கத்தேர் செய்வதற்காக 8832.400 கிராம் தங்கம் (8.832 கிலோ), 260 கிலோ செம்பு, 4 கிலோ வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. சுமார் மூன்று டன் எடைகொண்ட இந்த தங்கத்தேரை நிறுத்துவதற்கு பாதுகாப்பு அறையும் கட்டிக்கொடுக்கப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன், 2018-ம் ஆண்டு சித்திரா பௌர்ணமி தினத்தில், கோயில் நிர்வாகத்திடம் தங்கத்தேரை ஒப்படைத்தார். அதன்பிறகு அந்த தங்கத்தேர் இயக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மாசி கொடை விழாவின்போது, பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க கோயில் நிர்வாகம் சார்பில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் பாதுகாப்பு அறைக்குள் நிறுத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் கூறுகையில், ``இந்த தங்கத்தேரை இயக்க அனுமதி பெறுவதற்காக, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் முழுமுயற்சி எடுத்தார். தங்கத்தேருக்கான ஆணை கிடைத்துவிட்டது. இன்னும் 10 நாள்களுக்குள் இயங்கத் தொடங்கும்.

சிவகுற்றாலம்
சிவகுற்றாலம்

முதன்முதலாக தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து, தங்கத்தேரை இயக்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள பிற கோயில்களைக் காட்டிலும் மண்டைக்காடு கோயில் தங்கத்தேர் இழுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிகக் குறைவுதான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு